அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தோழர்கள் எஸ்.வி சேகரின் அடாவடி நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்பொழுது அங்கே வந்த பார்ப்பனப் பெண் ஒருவர் எஸ்.வி சேகரின் அதே மொக்கை கேள்விகளை உரத்த குரலில் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களோடு தகராறு செய்தார்.
ஒரு வேளை பெரியார் இந்த நிகழ்வை பார்த்து இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பார். ஏன் எனில் முன்பு பார்ப்பன பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரக் அனுமதி இல்லை. பார்ப்பன பெண் குழந்தைக்கு சிறு வயதில் திருமணம் செய்வார்கள். அந்தக் குழந்தையின் கணவர் இறந்தால் அந்தப் பெண்னுக்கு மொட்டை அடித்து விடுவார்கள் வாழ் நாள் முழுவதும். பார்ப்பனீயம் வழங்கிய அந்த “மொட்டை பாப்பாத்தி” என்ற வசைச்சொல்லுக்கு ஆளாகி வாழ்நாளை கழித்த பெண்கள் ஏராளம்.
அத்தகைய பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து அன்று குரல் கொடுத்தவர்கள் பெரியார், கம்யூனிஸ்ட் போராளி மணலூர் மணியம்மை போன்ற முற்போக்குவாதிகள். பார்ப்பன அடக்குமுறைகளான தாக்குதல், அவதூறு பிரச்சாரம் போன்றவற்றை மீறி இவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் பார்ப்பன பெண்களுக்கு மேற்கண்ட அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைத்தது.
அவர்கள் பார்ப்பனியத்துக்கு கொடுத்த மரண அடி இல்லையேன்றால் இந்த பார்ப்பனப் பெண்ணுக்கு பார்ப்பனீயம் பொதுவெளியில் கேள்வி கேட்கும் உரிமையை மறுத்திருக்கும்.
அது ஒரு புறமிருக்க, அவ்வாறு பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலம் கிடைத்த உரிமையை அந்தப் பெண் தவறாக பயன்படுத்தியிருக்கிறார். ஒரு அமைப்பு நடத்தும் கூட்டத்தில் உள்ளே நுழைந்து கேள்வி கேட்டு கூச்சல் போடுவது நாகரீகமற்ற செயல். இருப்பினும் அவரை பேசச் சொல்லி பக்குவமாக செயல்பட்ட அந்த மாணவர்களை பாராட்டியாக வேண்டும். இது போன்று ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கூட்டத்தில் அவர்களது நிலைப்பாடுகளை எதிர்த்து ஒருவர் பேசி இருந்தால் அவர் நிலைமையை நினைத்து பார்க்கவும்.
உழைக்கும் மக்களிடையேதான் ஜனநாயக உரிமைகள் இயல்பாக இருக்கின்றன. இதை அனுபவத்தின் மூலமோ, வாசிப்பின் மூலமோ உணர்ந்த வுடன் வசைபாடிய அந்தப் பெண் இந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவார்.
– விஜய்