செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்

 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

1. வீட்டு வேலை செய்பவர்

சம்பளம் வாங்கிக் கொண்டு வந்த காசை வச்சிட்டு எதையுமே பண்ண முடியாது, நாங்க வாடகை கொடுக்கணும், அத வச்சுதான் சாப்பாடு. ஒரு 500 ரூபா நோட்ட கொண்டு போனா காய்கறியோ எதுவுமே வாங்க முடியல. எங்களுக்கு சம்பளம் எல்லாமே 500 ரூபா நோட்டு, 1000 ரூபா நோட்டாத்தான் வந்துது.

நோட்டை மாத்த இன்னும் முடியாத நிலைதான் இருக்குது.

2. இது ஒரு வதந்தின்னுதான் நெனெச்சேன். ஆவின் பூத், ரேசன் கடை, சி.சி பேங்ல கூட 500 ரூபா நோட்டு, 1000 ரூபா நோட்டு வாங்க மாட்டேங்கறாங்க. 2 நாட்கள்ள ஸ்கூல்ல இருந்து மெசேஜ் வருது. நீங்க 2 நாள் லேட்டா கூட கட்டலாம். புது நோட்டு கட்டுங்கன்னு. நாங்க வாங்கியது 15,000 ரூபா சம்பளம்.

அத எடுத்துட்டு போய் பேங்க்ல போட்டா 2000, 2000 ரூபா தருவாங்க. இந்தியன் பேங்க்ல ரோடு முனை வரையில கூட்டம் இருக்கு. நேத்திக்கு போனா பணம் வரல, கேஷ் வந்ததும் கிளியர் பண்ணுவோம்கிறாங்க.

சாதாரண ஜனங்களுக்குத்தான், அன்றாட தேவைகளுக்கு பணம் இருந்தும், கஷ்டப்பட்ட காசு வந்தும் அதை பயன்படுத்த முடியாம போறது ரொம்பவும் துரதிர்ஷ்டவசமான விஷயமா இருக்கு. இன்னும் பசங்களுக்கு ஃபீஸ் கட்டல.

மாசக் கடைசிலன்னா கையில காசு இல்லாம இருப்போம். 7,8 தேதில கழுத்தில கத்தி வைச்சி குத்தாத குறையா இந்த அரசு பண்ணியிருக்கு. நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களுக்கு பாதிப்பு. கட்டுமானத் தொழில் இல்லாம 50, 100 குடும்பங்கள் அப்படியே பட்டினியோட வாழறவங்களா இருக்காங்க.

news18-demonetisation-women-discussion3. தனியார் கல்லூரி துணை பேராசிரியர்

இதுவரைக்கு ஒரு 7,8 பேர்கிட்ட 100, 100 ரூபாயா கடன் வாங்கியிருக்கேன். என்னுடைய சேலரி வந்திருச்சி. அதை எடுத்து செலவு பண்ண முடியாத சூழல்லதான் இருக்கேன்.

நாலு நாளைக்கு முன்னால உடம்பு சரியில்ல. ஆனா, மெடிசின் வாங்க காசு இல்ல.

என் கையில 500 ரூபாய, 1000 ரூபா நோட்டு இல்ல. ஆனா, தினசரி செலவுக்கு காசு எடுக்க முடியல. பால் வாங்கறத ஸ்டாப் பண்ணிட்டேன். வெறும் பிளாக் காபிதான் குடிச்சிட்டிருக்கேன். அதுவே அன்கம்ஃபர்டபிளா இருக்கு.

ஒரு வருசத்துக்கு 12 கேஷூவல் லீவ்தான் இருக்கு. நான் போய் பேங்கல நிக்கணும்னா அரை நாள் நிக்கணும். லஞ்ச் டைம்ல போய் நிக்க முடியாது. கடைசியா ஒரு ஏ.டி.எம்ல போய் 1 மணி நேரம் நின்று எடுத்தா 2000 ரூபா நோட்டுதான் கிடைத்தது. அதை இன்னும் மாத்த முடியல.

4. ஜலஜா, வங்கி அதிகாரி

எங்களுக்கும் 9-ம் தேதி காலையில்தான் தகவல் கிடைத்தது. ஈவ்னிங் நோட்டு வரும்னு சொன்னாங்க. நைட்டுதான் பணம் வந்தது. ஒரே ஒரு, ஒன் லேக் மட்டும்தான் 100 ரூபா நோட்டு. அடுத்த நாள் ஆஃபிஸ்க்கு வரணுமா வேண்டாமான்னு குழப்பத்துக்கே வந்துட்டோம். எப்பிடி நாம பப்ளிக்க ஃபேஸ் பண்ண போறோம்னு டென்சன்.

நெக்ஸ்ட் மார்னிங் 1 மணி நேரம் முன்னாடியே திறக்கப் போனோம். மக்கள் 5 மணி நேரம் முன்னாடியே வந்து ரோடு வரை நிக்கிறாங்க. ஆனா, ஸ்டாஃப் எண்ணிக்கை அவ்வளவுதான். முதல் நாள் எங்களால என்ன செய்ய முடியும்? எல்லா மக்களுக்கும் எல்லா தகவலும் பாசாயிருக்கு.

பெண் ஊழியர்கள் இந்த 10 நாட்களா படற கஷ்டம் விவரிக்கவே முடியாது. முதல் 2, 3, நாட்கள் காலையில் 9 மணியிலேயிருந்து இரவு 12 மணிக்குத்தான் வீட்டுக்குப் போனோம். மூட்டை மூட்டையா கேஷ். எல்லாருமே எண்ணுவது, நிச்சயமா டேலி ஆகாது. அது முடிச்சு, ஒவ்வொரு பிராஞ்சும் ஒவ்வொரு மாதிரி. 10 மணி, 1 மணி , 2 மணிக்குத்தான் பெண் ஊழியர்கள் போக முடிஞ்சுது. செக்யூரிட்டி பாதிச்சது.

எங்களுக்கு வார இறுதி விடுமுறை கிடையாது. போன வாரம் வார இறுதி விடுமுறை ரத்து. இந்த வாரம் ஞாயிறு எப்போ வரும்னு வெயிட் பண்ணி இன்னைக்கு இந்த அரங்கில வந்து உக்காந்திருக்கோம். இந்த 10 நாளா எங்க உடல்நிலை ரொம்ப பாதிச்சிருச்சி.

பொதுமக்கள் எங்க கஷ்டங்கள நல்லா புரிஞ்சிகிட்டாங்க. கஸ்டமர்ஸ் எல்லாருக்கும் கூல் டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு போறாங்க. ஒருத்தரு குளுக்கோஸ் வாங்கிக் கொடுத்துட்டு போனாங்க.

எங்களுக்கு ஓவர் டைம் ஊதியம் கொடுத்தாலும், அந்த கஷ்டங்களுக்கு நிவாரணமே கிடையாது. எங்களுக்கு என்ன பயம் என்னன்னா, இன்னும் நோட்டு வர ஆரம்பிக்கவில்லை. எங்களால 500 ரூபாய் நோட்டு கொடுக்க முடியலை. எல்லார்கிட்டையும் 2000 ரூபாய் நோட்டுதான் கொடுக்கிறோம். சப்ளை வர ஆரம்பிச்சா திரும்பியும் கூட்டம் வரத்தான் செய்யும்.

5. காண்ட்ராக்ட் டைப்பிஸ்ட்

இந்த அறிவிப்புக்கு முந்தின நாள்தான் சேலரி வாங்கிட்டு வந்தேன். எல்லாமே 1000 ரூபாய், 500 ரூபாய்தான் கொடுக்குறாங்க. கொழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு போனா கூட, டிரீட்மென்ட் பார்க்காம போயிடாதீங்க, இருந்தாலும் 500 வச்சிருந்தா சேஞ்ச் மாத்திட்டு வாங்கன்னு சொல்றாங்க. 2000 ரூபாய் எடுத்துட்டு போய் குழந்தைக்கு பால் வாங்கணும்னு போனா 20 ரூபாய் பால் பாக்கெட்டுக்கு யார் 2000 ரூபாய்க்கு சேஞ்ச் தராங்க. குழந்தைய வச்சிகிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு.

சேர்த்து வைக்கிறது எல்லாம் இல்ல. நான் வாங்குறது 7,000 சேலரிதான். எப்படி சேர்த்து வைக்க முடியும். மளிகை சாமான் வாங்கணும், பால் பாக்கெட் வாங்கணும். அந்த மாதிரி இருக்கும் போது சேர்த்து வைக்க முடியல.

6. வயதான குடும்பத் தலைவி

கணவருக்கு 10,000 ரூபாய் சம்பளம், 5-ம் தேதி வாக்கிலதான் சம்பளம் கொடுத்தாங்க.. 8-ம் தேதி இது வருது. மளிகை சாமான் வாங்கப் போனா 500, 1000 வாங்க மாட்டேன்னுட்டாங்க. தெரியாத கடையில கிடையாது. டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ, ஸ்வைப் பண்றதோ கிடையாது. 10,000 வந்தா செலவு இருக்கும். பால் பாக்கெட் அரை லிட்டர் கார்ட் போடறதுக்கு பால்காரம்மா வந்து 500, 1000 ரூபா கொடுத்துறாதீங்க. 650 ரூபாய் கொடுங்கம்மா என்றார்.

இன்னொரு வயசானவருக்கு மாசம் 1000 ரூபா அனுப்பிகிட்டிருக்கேன் போஸ்ட் ஆஃபிஸ்ல. அங்க போனா மாத்திக்கலாம்னு சொன்னாங்க. 1000 ரூபாய போடப் போனதுக்கு வாங்க மாட்டேனுட்டாங்க. ஆதார் கார்டு, ஐ.டி கார்டு கொடுத்து ஃபார்ம் ஃபில் அப் பண்ணித்தான் மாத்திக்கணுமே தவிர, மணி ஆர்டர் அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்னோட ஃபோன் நம்பர், அட்ரஸ், தாரேன்னு சொல்லியும் கேட்கல. என்னால மணி ஆர்டர் அனுப்ப முடியல.

2000 ரூபாய் நோட்டுக்கு 200 ரூபா பொருள் வாங்கினா 1800 ரூபாய் யாரும் திருப்பித் தர்றது கிடையாது. அதனால் பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துட்டோம்.

7. வசதியான குடும்பத் தலைவி

எனக்கு அன்னைக்கு நைட்டுதான் தெரிஞ்சுது. எங்கிட்ட 3, 500 ரூபாய நோட்டு இருந்திச்சி. உடனே போய்ட்டு அதுக்கு மொதல்ல தேவையே இல்லாத சாமானுங்கள வாங்கிட்டு வந்தேன். வந்த நியூஸ் இன்னைக்கு நைட்டோடு செல்லாதுன்னு வந்தது.

பேங்க் முழுதும் ஜனமான ஜனம். கொஞ்ச நேரம் கூட நிக்க முடியல. ரெண்டு நாள் போய்ட்டு போய்ட்டு திரும்பி வந்துட்டேன். மூணாவது நாள் ரெண்டு 2000 ரூபா நோட்டு கொடுத்தாங்க. நீங்க நம்ப மாட்டீங்க, நான் இன்னைக்கு வரைக்கும் அந்த ரெண்டு 2000 ரூபா நோட்ட மாத்தவே இல்ல.

இவ்வளவு நாள் வாழ்நாள்ள பண்ணாத ஒண்ண நான் பண்ணியிருக்கேன். தெருமுனைல அண்ணாச்சி கடைல போய்ட்டு ஒரு சின்ன நோட்டு போட்டு கொடுத்திருக்காரு. அண்ணாச்சியாலதான் ஓடுது. அவரு வீட்டில கேன் தண்ணி போடும் போது, அக்கா எங்கிட்டயே சாமான் வாங்குங்கன்னு சொல்லுவாரு. நாங்க அங்க வாங்கறதில்ல. குவாலிட்டி, பிராண்டு-ன்னு சூப்பர் மார்க்கெட்ல போய்தான் வாங்குவோம். ஆனா, இப்போ முழுதும் உதவி பண்றது அவருதான். உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் சாமான் வாங்கிக்கோங்க.

8. இல்லத்தரசி

மளிகை சாமான்லாம் பூட்டி வச்சிட்டு ஒரு பெரிய மெனு கொடுத்து இத சமைச்சுக் கொடுன்னு சொல்ற மாதிரி இருக்கு. சில்லற 500, 1000 தடை பண்ணிட்டு 2000 ரூபா கொடுத்து செலவு பண்ணச் சொன்னா எப்படி பண்ணுவாங்க. ஒரு கடைல மளிகை சாமான் வாங்கினா 500 ரூபா கொடுத்தாதான் வாங்குவாங்க.

காய்கறி வாங்கப் போனா இந்தக் கடையில ஃபிரெஷ்ஷா இருக்கு. ஆனா, அங்க காசு கொடுத்து வாங்கணும். நம்ம பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு போனா கார்ட் ஸ்வைப் பண்ணிக்கலாம்னு அங்க போனா, காய்கறி நல்லாவே இல்ல. ஆனா வேற வழியில்லாம அதத்தான் வாங்கிட்டு வர்றோம்.

9. புவனேஸ்வரி, வங்கி ஊழியர்

நான் வேலை செய்றது சவுகார்பேட்டை, மின்ட் தெரு கிளை. அந்த இடத்தில் பெரிய பணக்காரங்க வருவாங்க, அல்லது ரொம்ப அடிமட்ட மக்கள் வருவாங்க.

ரெண்டாவது நாளே 4000 பேர் வந்து நிக்கிறாங்க. அதுக்கான ஊழியர்கள் தேவையான அளவுக்கு எடுத்தாங்களா. கெடையாது. அதுக்கான சிஸ்டம் இருக்குதா, கெடையாது.

எந்த விதத்தில உழைச்சாங்க, எந்த விதத்தில சேமிச்சாங்க. என் புள்ளைக்கு ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டணும். என் பிள்ளைக்கு புடிச்சா மாதிரி ஒரு டிரெஸ் எடுத்து தரணும்னு அம்மா வந்து அப்பாக்கு தெரியாம ஒழிச்சு வச்ச காசெல்லாம் வரும்போது நம்பளுக்கே வருத்தம் வருது. நம்ப எக்ஸ்சேஞ்க்கு, 2000 ரூபாய் நோட்டுதான் கொடுக்கிறோம். 500 ரூபாய் சேஞ்ச் கொடுக்கிறதுக்கு எங்க கிட்ட காசு இல்ல.

2000 ரூபா தாளுக்கு அவசியம் என்னன்னு யாருமே சொல்லலை. 500, 1000 பதுக்கி வைக்கிறாங்க, 2000 ரூபாய் தாளுடைய அவசியம் என்ன இருக்கு. செல்லாத 500 ரூபா, 1000 ரூபா நோட்டும் – 2000 ரூபா நோட்டும் எங்களுக்கு ஒண்ணேதான்னு மக்கள் சொல்றாங்க. இத நான் கொண்டு போய் எங்க மாத்துவேன்.

2000 ரூபா தாளை வெச்சி டீ குடிக்க முடியுமா? 5 ரூபாய்க்கு இட்லி சாப்பிட முடியுங்களா? அப்படீங்கிறாங்க. இந்த நிலைமை இப்படியே போனா ரொம்ப பெரிய பிரச்சனை உருவாகறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

10. ஜலஜா, வங்கி ஊழியர்

இயற்கையினால உயிரிழந்ததற்காக, செயற்கையாக ஒரு அரசு எடுத்த முடிவுக்கு எல்லாரும் சாக வேண்டியது அவசியமில்லை. எடுத்த முடிவுக்கான தயாரிப்புகள் நடக்கவில்லை. நம்ம நாட்டை அமெரிக்காவுக்கு நிகரா கேஷ்லெஸ் நாடா கொண்டு வரணும்னு சொல்றாங்க. அது எப்ப நடக்கும். நம்ம நாடு இன்னும் ஏழை நாடுதான். அந்த ஏழை மக்களை முதலில் உயர்த்தி நம்முடைய வாழ்க்கைத் தரம் அமெரிக்கா அளவுக்குப் போனாத்தான் நம்முடைய பிளாஸ்டிக் கார்ட நம்மால பயன்படுத்த முடியும்.

11. சம்பளம் வாங்கறவங்களுக்குத்தான் வங்கி எல்லாம் சரியா வரும். அன்றாடம் கூலி வாங்கி சாப்பிடுற மனிதர்கள். 5-வது நாளே, வேற்று மாநிலத்திலிருந்து வந்து கூலித் தொழில் செய்யும் மக்கள் புழங்கும் பகுதியில நான் இருக்கேன். காலையில 5 மணியில இருந்து நான் பொதுமக்கள சந்திக்கிறேன். ஒரு நாளைக்கு பொருள் குடும்பத்துக்கு வாங்குறது 20 ரூபாய் 25 ரூபாய்க்குத்தான் வாங்குறாங்க. 2 ரூபாய்க்கு பூண்டு, 3 ரூபாய்க்கு மிளகான்னு வாங்கி குடும்பங்கள் நடக்கும். ஒரு சின்ன பால் வாங்கி 10 பேர் குடிப்பாங்க.

12. நான் சேரி பகுதியில இருந்து வருகிறேன். தினமும் பெண்களை சந்திக்கிற அமைப்பில இருந்து வருகிறேன். முன் ஏற்பாடு செய்யாம இப்படி அறிவிக்கலாமா? முதலில் 2000 ரூபாய் அச்சடித்ததை, 1000, 500 முதலில் அச்சடிச்சிருக்கணும். முதல் தேவையே 500 ரூபாய், 100 ரூபாய் எடுத்துட்டு போக முடியும். 2000 ரூபாய் வெச்சிட்டு பொதுமக்கள் சின்னச் சின்னக் குடும்பத்தில் நிக்கிற பெண்களுக்கு பேங்க்ல ஸ்வைப் பண்றதுன்னா தெரியாது. ஏ.டி.எம் கார்டு பத்தி தெரியாது. எப்படி செல்லுபடியாகும்.

50,000 போட்டா பேன் கார்ட் கேட்கிறாங்க. யார்கிட்டயும் பேன் கார்டு அவ்வளவா இருக்காது. 49,000 தான் போட முடியும். நிறைய பெண்கள் அதெல்லாம் வச்சிருக்க வாய்ப்பே கிடையாது.

13. ஒரு பேங்க்ல ஒரு வாரத்துக்கு 20,000 எடுக்கலாம்னு சொல்றாங்க. ஆனா, எத்தனை பேங்க்ல அத கொடுக்க முடியுது. பேங்கல இருந்து எடுக்க 4,000 மேல கொடுக்க மாட்டேங்கறாங்க. அதுக்கும் ஒரு நாள் முழுக்க நின்னுதான் எடுக்கணும். இன்னும் வங்கி வசதி எல்லாம் இல்லாத கிராமங்கள்தான் நிறைய இருக்கு. அவங்களுக்கெல்லாம் பணம் எப்ப போய் சேரும். அவங்கெல்லாம் என்ன பண்ணுவாங்க.

பெண்கள் கணவருக்கு தெரியாம சேர்த்த நிறைய பணம் எங்க கொண்டு போய் சேக்கறதுன்னு தெரியாது.

14. வாரக்கூலி வாங்கறவங்க பயங்கரமா பாதிக்கப்படறாங்க. கட்டிடத் தொழில் செய்றவங்க வாரக்கூலிய என்ன செய்ய முடியும். அவங்க போய் பேங்க்ல மாத்தணும்னா அடுத்த நாள் கூலிய இழக்கிறாங்க. வெளி மாநிலத்திலருந்து இங்க வந்து தங்கி இருக்கிறவங்களுக்கு, என்ன ஆதாரம் இருக்கும். அவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க?

எங்க வீட்டுக்கு கூர்க்கா வருவாரு, கையில ஒரு அமவுண்ட் வச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியலங்கிறாரு.

15. புவனேஸ்வரி

கூலித் தொழிலாளர்கள்ள நிறைய பேரு வெளிமாநிலங்கள் இருந்து வந்தவங்க. அவங்க கூலி வாங்கி அதை அக்கவுண்ட்ல டெப்பாசிட் பண்ணி அவங்க குடும்பம் வெளிமாநிலத்தில எடுத்துதான் செலவு பண்றாங்க. இப்ப புதுசா, நான் உங்க அக்கவுண்ட்ல டெப்பாசிட் பண்ணணும்னா உங்க கையெழுத்து போட்ட ஒரு லெட்டர் வேணும். அப்பதான் காச வாங்கிப்பாங்க. ஊர்ல இருக்கிற அப்பா அக்கவுண்ட்ல எப்படி காசு போடுவாங்க, ராஜஸ்தான்ல இருந்து இங்க கூலித் தொழில் பண்றாங்க, பீகார்ல இருந்து வந்து இங்க கூலித் தொழில் பண்றாங்க, அவங்க எப்படி காசு அனுப்புவாங்க. இவங்க அனுப்புற காச நம்பி உக்காந்திருக்கிறவங்களுக்கு எப்படி போகும். இதனுடைய அவசியம் என்னன்னே யாரும் சொல்லலை.

16. ஜலஜா

வாராக்கடன்ல எதுவுமே வரலை. இந்த நடவடிக்கையினால வாராக்கடன்ல யாரும் தப்பித் தவறி மறந்தும் கூட அந்த அக்கவுண்ட்ல போடல.

17. தனியார் நிறுவன அதிகாரி

நாடு முழுவதும் 40 கொலைகள் நடந்திருக்கு இந்த demonetisation நடவடிக்கைக்கு அப்புறம். அத்தனை இறப்புமே தள்ளுமுள்ளுலேயும், அடுத்தவன் அடிச்சுப் புடுங்கியோ நடக்கல. எல்லாமே நெஞ்சு வலிச்சி, மனசு உடைஞ்சி, மனம் நொந்து தற்கொலை பண்ணிய இறப்புகள் நடந்திருக்கின்றன.

நாட்டு நன்மைக்காக நிறைய பேரு சாகலாம். பசங்க கஷ்டப்பட்டதான் முன்னுக்கு வருவாங்கன்னு சொல்றாங்க. நாடு நல்லா இருக்கணும். இது ஒரு நல்ல திட்டம் அதுக்காக 40 பேர் சாகுங்கன்னு சொல்ற உரிமைய உங்களுக்கு யாரு கொடுத்தா? அந்த 40 பேர்ல சாதாரண 100 நாள் வேலைல இருக்குறவங்க, பென்ஷன் வாங்குற முதியோர்கள், சாதாரண பெண்மணிகள். எனக்கு தெரிஞ்சி முதுகரைல ஒரு பெண் வரிசைல நின்னதால கால் உடைஞ்சு இறந்து போயிருக்காங்க. நிக்க முடியல. ஒண்ணுக்குப் போக வசதி இல்ல. நீங்க கருப்புப் பணத்தை புடிங்க, எல்லாரையும் ஏன் திருடர்களாக மாத்துறீங்க. எல்லாரையும் குற்றவாளி மாதிரியான மனநிலைக்கு தள்றீங்க என்பதுதான் கேள்வி

நீ (அம்மா உணவகத்துக்குப் போய்) 5 ரூபாய்க்கு போய் சாப்பிடுன்னு சொல்ற உரிமைய உங்களுக்கு யார் கொடுத்ததுன்னு கேட்கிறேன். நான் 5 ரூபாய்க்கு சாப்பிட விரும்பல, 50 ரூபாய்க்கு சாப்பிட விரும்பறேன். இந்த கிரைசிஸ் பீரியட் 120 கோடி மக்களுக்கும் பொருத்தமா இருந்தா நல்லது. 20% மக்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. 80% மக்களுக்கு மட்டும் ஏன் நெருக்கடி.

நாட்டு மக்களை இவ்வளவு கஷ்டப்படுத்திதான் கருப்புப் பணத்தை கொண்டு வரணும்னு இல்ல. 2 நாளுக்குள்ள மாற்று கரன்சி வந்திருந்துன்னா பொதுமக்கள் இவ்வளவு கஷ்டத்துக்கு உள்ளாக மாட்டாங்க.

ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து போட்டு இந்த நோட்ட நீ எங்க எடுத்துட்டு போனாலும், நாடு முழுவதும் செல்லும்னு ஒரு பிராமிஸ் பண்ணி கொடுத்திருக்கிற ஒரு நோட்டை ஒரே இரவில் செல்லாதுன்னு சொல்லி அறிவிக்கிறது என்பது எந்த சட்டத்தின் கீழ் வரும். என்னுடைய உரிமை பாதிக்கிறதுக்கு என்ன நிவாரணம்?

இந்த மாதிரியான முன்னேற்பாடு எதுவுமே செய்யாத அரசாங்கத்தை பத்தி நிறைய கேள்விகள் இருக்கு.

எந்தத் திட்டமும் செய்யாத ஒரு விஷயத்தை இந்தத் திட்டத்தில செஞ்சிருக்காங்க. மக்களுடைய உணர்வுகளோட விளையாடுற விஷயம் இந்த திட்டத்தில நடந்திருக்கு.

என் குழந்தை 5-ம் கிளாஸ் படிக்குது. அந்தக் குழந்தைக்கு சேமிப்பு பத்தி சொல்லி கொடுக்குறோம். சேர்த்து வைக்கிறது பத்தியும், ஒரு டப்பால 1 ரூபாய்கள சேர்த்து வைன்னு சொல்லி வைக்கிறோம். போன முறை என் பிறந்த நாள் வந்த போது என் குழந்தை எனக்கு குடையும், ஒரு வாட்சும் வாங்கிக் கொடுத்தது.

நேத்து பிறந்த நாள் வந்திச்சி. காலையில “டே என்னடா கொடுக்குற அம்மாவுக்கு”ன்னு கேட்டா, “நீதான் என் உண்டியல உடைச்சு எடுத்துட்டயேன்னனு சொல்றான். உணர்வு அங்க உடையுது.

குழந்தைகளை கூப்பிட்டுட்டு வெளியூர் போயிருக்கேன். எல்.கே.ஜி படிக்கிற 4 வயது குழந்தை 10 ரூபாய் காசுக்கு பஞ்சு மிட்டாய் கேக்குது. அத வாங்கிக் கொடுக்க முடியல. இது என்ன மட்டுமில்ல. எல்லா தாய்மார்களுக்கும், எல்லா பெற்றோர்களுக்கும் இந்த பிரச்சனைதான்.

நாட்டு நலனுக்காக நீ இதெல்லாம் செய்யணும். ராணுவத்தில எல்லையில கஷ்டப்படலையா, நீ ஏன் கஷ்டப்படக் கூடாதுன்னு என்னை கேட்கறதே கூட பெரிய ஸ்ட்ரெஸ்-ஆ இருக்கு, ஒரு பிரச்சனையா மாறுது. குழந்தைகள கூப்பிட்டு கேளுங்கள. குழந்தைகளோடு உண்டில்கள், உணர்வுகள் எவ்வளவு உடைக்கப்பட்டிருக்குன்னு அவங்க பேசுவாங்க. மக்களுடைய உணர்வுகளை பாதிச்சி ஒரு திட்டத்தை அறிவிச்சி, தம்மாத்தூண்டு கருப்புப் பணத்தை பிடிக்க முடியாத ஒரு கையாலாக அரசாங்கத்தை என்ன கேள்வி கேட்க முடியும்.

17. 2 நாள் பேங்க், ஏ.டி.எம் மூடினாங்க. மக்கள் என்ன நம்பிக்கைல இருந்தோம். இவங்க உடனே புது நோட்டு கொண்டு வந்து இறக்கிடுவாங்க, பண்ணிடுவாங்கன்னு நினைச்சோம். ஒரு சிம்பிள் கணக்குங்க. 2000 ரூபாய், அதுக்கு அடுத்தது 100 ரூபா நோட்டு. நீங்க கடையில போய் கொடுத்தா எப்படி சேஞ்ச் கொடுப்பாங்க. நீங்கள இறக்கியிருந்தாதானே. நாங்க எல்லாம் மோடிய நம்பினோம். ஆனா அது இல்ல. இன்னைக்கு வரைக்கும் பிரச்சனை சால்வ் ஆகல, எப்ப சால்வ் ஆகும்னும் தெரியாது.

18. புவனேஸ்வரி

ஏ.டி.எம்-ல் லோட் பண்ண காசு கொடுத்தாதான் செய்ய முடியும். ஒரு வங்கி ஊழியரா சொல்றேன். வங்கில ஊழியர்களுக்கு விதிமுறைகள் இருக்கு. ஆனா, 8.30 வரைக்கும் சர்வீஸ். அதுக்கப்புறமா, எல்லாத்தையும் டேலி பண்ணிட்டு எங்க ஹெட் கேஷியர் 3 மணிக்கு கிளம்பி சவுகார்பேட்டையில இருந்து காலையில 4.30 மணிக்கு தாம்பரத்துக்குப் போய்ட்டு குளிச்சிட்டு வந்து உக்காந்தா, கஸ்டமர் முன்னாடி நின்னுட்டு என்னய்யா நீ 2000 ரூபா தர்ற. என்ன பண்றன்னு திட்றாங்க.

நாங்கதான் மோடியை இப்படி ஒரு திட்டம் போடுங்கன்னு சொன்னதா நினைக்கிறாங்க. அன்னைக்கு ராத்திரியும் 9.30 மணி வரைக்கும் காசு வாங்கும் வேலை செய்தோம்.

இது தனியார்மயத்தை நோக்கி நகருது. தனியார் வங்கிலதான் 12 மணி நேர சேவை தரோம்னு ஆரம்பிச்சாங்க. தனியார் வங்கிக்குதான் நல்ல குறைந்த மதிப்பு நோட்டுகள் அனுப்புறாங்க. தாராளமாக வெளிப்படையாக இது தனியார்மயத்தை நோக்கி போய்கிட்டு இருக்கு. கீழ இருக்கிற எல்லா மக்களையும் அடிச்சி உலையில போட்டுட்டு மேல இருக்கிறவன் கார்ட் பேமன்ட் பண்ணி பழகச் சொல்றாங்க.

50 நாள்ல pos வாங்கச் சொல்றாங்க. pos வாங்கறதுக்கு சட்டப்படி நம்மளுக்கு சிஸ்டமே கொடுக்க அனுமதிக்காது. என்னுடைய பேங்கல 3 நாள்க்கு முன்னதான் pos அறிமுகப்படுத்தியிருக்காங்க. அது இன்னும் வாடிக்கையாளருக்குக் கொடுக்க வரலை. அந்த மாதிரி எத்தனை எத்தனை அரசு வங்கில pos சிஸ்டமே இல்லாம இருக்கு.

எப்படி திடு திடுப்னு நான் நோட்டு எல்லாம் கேன்சல் பண்றேன். நீ கார்ட பண்ணுன்னா, கார்டுக்கு எங்க போவாங்க. கார்ட வச்சு என்ன செய்ய முடியும். மீண்டும் மீண்டும் அவங்க பெரிய ஆளுங்களுக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்றாங்க.

2,000 ரூபாய் கரன்சி அறிமுகம் பண்ணியதிலிருந்து இப்போது வரைக்கும். முன்னாடி எல்லாம் 1.5 கோடி ரூபாய் வாங்குவேன். இப்போ 8 கோடி ரூபாய் வாங்கிகிட்டு இருக்கேன். அத்தனை காசையும் எண்ற அளவுக்கு மெசின் தந்தீங்களா, கம்ப்யூட்டர் தந்தீங்கள, ஆள்பலம் தந்தீங்களா. ஒய்வு ஆனவங்களுடைய உதவி எடுத்துக்கோங்கன்னு சொல்றாங்க. அவங்க உதவியை எப்படி எடுக்க முடியும்?

நாங்க ஒருத்தருடைய அக்கவுண்ட்ல காசு டெப்பாசிட் ஆகணும்னா எங்களுடைய கைரேகை வைக்கணும். ஓய்வு பெற்ற ஊழியர்களோட கைவிரல் ரேகையை ஏத்துக்காது சிஸ்டம். இதை பத்தி எந்த ஒரு கவலையும் இல்லாது அரசு இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்தது என்றால் இது சரியா தப்பான்னு பேச எனக்கு உரிமை இல்லை. ஆனா, இந்த அமல்படுத்திய முறை சரியே இல்லை.

மக்களை திரும்பத் திரும்ப தனியார் மயத்தை நோக்கி கொண்டு போறாங்க. 9.30 மணி வரைக்கும் வேலை பார்க்கிறது தனியார் வங்கியிலதான் முடியும். அங்க போட்டீங்கன்னா காசு, பேங்க் எப்ப திவால் ஆகும்னு நமக்கு தெரியாது. மக்களை திசை திருப்பறதுக்கும், நிறைய அரசியல் பண்றதுக்கும் மட்டும்தான் கொண்டு வந்திருக்காங்க. கருப்புப் பணம் வெளிய வரும்னு யாரும் நம்பாதீங்க.

கருப்புப் பணம் எந்தப் பணக்காரனும் 500 ரூபா, 1000 ரூபாயா எல்லாம் வச்சிருக்கல. கருப்புப் பணம் வைச்சிக்கிறதுக்கு ஏகப்பட்ட வேற வடிவங்கள் எல்லாம் இருக்கு. அந்த வடிவங்களை எல்லாம் விட்டு விட்டு ஏழை எளிய மக்களுடைய வயித்தில அடிக்கிறாங்க.”

வீடியோ நன்றி : நியூஸ்18 தொலைக்காட்சி

உரை வடிவம் : குமார்

Series Navigation<< டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-black-money-digital-money-women-speak-sense/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
பா.ஜ.க பினாமி போலீசின் சட்ட விரோத அராஜகம் – தோழர் கோவன் கைது : வீடியோ

பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் தோழர் கோவனை கைது செய்ய வந்திருக்கிறது. அந்த பகுதி மக்கள் போலீசை முழு மூச்சுடன் எதிர்த்து தடுத்திருக்கின்றனர்....

“ஜனநாயக அரசியல் இல்லாமல் சட்ட உரிமைகள் சாத்தியமா?” – ஐ.டி சங்கக் கூட்டம்

ஜனநாயக உரிமையான தொழிற்சங்க உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கே நாம் அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவாலுக்கும் ஆதரவு தெரிவித்து அவர்களது போராட்டங்களில் இணைந்து கொள்ள...

Close