தொழிலாளரின் துயரத்தில் வேலை பாய்ச்சிய மோடி

 

வம்பர் 8 மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு மட்டும் மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை நான்கு சணல் ஆலைகள் மூடப்படுள்ளன. இதனால் ஏறத்தாழ 10,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையின்றி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் சணல் ஆலை

ரிலையன்ஸ் சணல் ஆலை

இதில் 25-12-2016 அன்று மூடப்பட்ட ரிலையன்ஸ் சணல் ஆலையில் இருந்து மட்டும் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலை நீக்கத்தால் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர். வடக்கு 24 பர்கானாவில் உள்ள ரிலையன்ஸ் சணல் ஆலை மேற்கு வங்கத்தில் செயல்படும் பழமையான சணல் ஆலைகளில் ஒன்றாகும்.

ஏற்கனவே செப்டம்பர் 2016 வரையில் ஹூக்ளி நதிக்கரையோரம் உள்ள 58 சணல் ஆலைகளில் 13 மூடப்பட்டிருந்தன. செப்டம்பருக்குப் பின் அவற்றில் சில ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. பல ஆலைகளில் கச்சா சணல் கையிருப்பு தீர்ந்து போய், புதிய கச்சாப் பொருளை கொள்முதல் செய்ய முடியாமல் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. 10-12% விவசாயிகள் மட்டுமே வங்கிக் கணக்குகள் மூலம் கச்சா சணலுக்கு விலையை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றனர்.

எனவே, நவம்பர் 8-க்குப் பிறகு கூடுதலாக 4 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

டிசம்பர் 5-ம் தேதி கொல்கத்தாவில் இருந்து 7 கி.மீ தொலைவில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமான் ஜூட் மில்ஸ் ஆலை நிர்வாகம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இல்லாத நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று காரணம் காட்டி ஆலையை தற்காலிகமாக இழுத்து மூடியிருக்கின்றனர். 2,500 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். தற்காலிக கதவடைப்பு காலத்தில் தொழிலாளர்களிம் ஊதியம் ரத்து செய்யப்படும் என்றும் ஆலை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அரசின் சிறுதொழில் விரோத கொள்கைகளால் நெருக்கடியில் இருந்த சணல் ஆலைத் துறைக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல வந்தது பணமதிப்பு நீக்க நடவடிக்கை. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று இதை ஒரு சாக்காக வைத்து ஆலைகளை மூடி தொழிலாளர்களை நடுத்தெருவில் விடும் வேலையில் இறங்கியிருக்கின்றனர் முதலாளிகள்.

இந்திய சணல் ஆலைகள் கூட்டமைப்பு, “அரசின் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நேரடியாக மற்றும் மறைமுகமாக 2.5 இலட்சம் சணல் ஆலைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்து உள்ளது. இவர்களில் கணிசமானோருக்கு வங்கிக் கணக்கு இல்லை, மற்றும் இவர்களது தினக்கூலி ஊதியம் இரு வாரங்களுக்கு ஒருமுறை பணமாகவே வழங்கப்படுகின்றது. தற்போது அரசின் பணமதிப்பு நடவடிக்கையால் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதும் முடக்கப்பட்டுள்ளது.

அமிர்த்சர் தானியச் சந்தையில் சாக்கு பொதிகளை சுமந்து செல்லும் தொழிலாளர்கள்

அமிர்த்சர் தானியச் சந்தையில் சாக்கு பொதிகளை சுமந்து செல்லும் தொழிலாளர்கள்

ஏற்கனவே, ஊதிய உயர்வு மறுப்பு, பி.எஃப் மறுப்பு, ஈ.எஸ்.ஐ மறுப்பு, போனஸ் மறுப்பு என மில் நிர்வாகத்தால் நசுக்கப்பட்டு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள், தற்போது மோடி அரசின் நடவடிக்கையால் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் துயரங்களை துடைக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் எதையும் செய்யாமல் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்துவதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசு, கருப்புப் பணத்தை ஒழித்து ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்தப் போகிறோம் என்று சவடால் விட்டு தொழிலாளர் வாழ்வை மேலும் துயரத்தில் மூழ்கடித்துள்ளது.

ஆனால் மோடி சார்பாக ஊடகங்களில் சாமியாடுபவர்கள் மக்கள் இச்சிரமங்களை நாட்டுக்காக பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றும், 50 நாட்களுக்கு பிறகு எல்லாப் பிரச்சனைகளும் தீர்வு கிடைக்கும் என்றும் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் இன்று அவர்கள் சொன்ன 50 நாட்களுக்குப் பிறகும் நிலைமை மாறவில்லை.

இவர்கள் மக்களிடமிருந்தும், தொழிலாளர்களிடம் இருந்து அந்நியப்பட்டு முதலாளிகளுக்கு சேவை செய்யும் அதிகார வர்க்கமாகவே செயல்படுகின்றனர் என்பதற்கு இதுவே சான்று. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் அமைப்பாகத் திரண்டு தமது உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள போராடுவதை ஒரே தீர்வு.

– மணி

செய்தி ஆதாரங்கள

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-worsens-jute-mill-workers-life/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
அ.தி.மு.க போய் தி.மு.க வந்தால் தீர்வு வருமா?

நண்பர் ஒருவர் கூறினார், தனியார்-தாராள-உலக மய கொள்கைகளுக்கு பின்தான் நம் நாட்டில் தொழில் வளர்ச்சி முக்கியத்துவம் அடைந்தது என்றும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்தியாவில் வேலை...

கோலமாவு கோகிலா செய்வது தவறில்லையா?

படத்தின் கோலமாவு கோகிலாவாகத்தான் இன்றைக்கு வாழ வேண்டியிருக்கிறது. கோகிலாவுக்கு அம்மா நோய் சிகிச்சைக்கு ரூ 15 லட்சம் என்றால், ஒவ்வொருவருக்கு குழந்தையின் படிப்புக்கு, எதிர்கால உயர்கல்விக்கு, வீடு...

Close