«

»

Print this Post

“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ

This entry is part 19 of 21 in the series பண மதிப்பு நீக்கம்

“மக்கள் செல்லா நோட்டு நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள்” என்று திமிராக பேசுகின்றனர் மோடியும், அவரது சங்க பரிவாரங்களும். “எங்களைப் போல இந்தியாவைப் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இல்லை” என்று கொக்கரிக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.

இந்நிலையில் “மோடியின் 2000 ரூபாய் திட்டத்தை” எதிர்த்து கிராம மக்களின், உழைக்கும் மக்களின் குமுறலை படம் பிடித்திருக்கிறது இந்த டிவி18 வீடியோ.

“கஞ்சி காச்சி உப்பு போட்டு குடிக்கிறோம். மெளகா வாங்குற விலை மிச்சம். இந்தப் பணப் பிரச்சனை வந்ததில இருந்து கொளம்பு சோறே சாப்பிடல சார். காய்கறியே வாங்கறது கிடையாது”

“நாலு சித்தாள் வேலைக்குப் போனா 2000 ரூபா கொடுக்றாங்க, இதை எங்க போய் மாத்தி பிரிச்சிக்கிறது”

“10 நாட்களாக பிள்ளைகளுக்கு சோறு போட முடியாம செத்துப் போகலாம்னு தோணுது”

“இன்னும் மூணு மாசம் இப்படிப் போன, நாங்க எல்லாரும் செத்துதான் போகணும்”

“நாங்கெல்லாம் சாவறதா, வாழறதா சொல்லுங்க”

“நாளைக்கு நாங்க நாலு பேரு தூக்கு போட்டுட்டு செத்துட்டா, நானும் என் பிள்ளைகளும் செத்துட்டா என்ன செய்வ”

“வேலைக்குப் போனா செல்லாத நோட்டுதான் கொடுக்குறாங்க, என்ன செய்யிறது. கஞ்சித்தண்ணி கூட இல்ல, அப்பிடியே படுத்துக் கெடந்துட்டு எழுந்து வாறேன்”

நெஞ்சைப் பிழியும் அவலக் குரல்கள்.

“இப்பிடி யாராவது கேக்க வரமாட்டாங்களான்னு குமுறிகிட்டு கெடந்தேன்” என்ற ஏக்கக் குரல்.

“எங்கூட்டு பணத்தை ஏன் கொடுக்க மாட்டேங்கறாங்க”

“பணக்காரங்கள பார்த்தா பத்தாயிரம், இருபதாயிரம் கொடுக்குறாங்க”

“வாங்கி சொருகிட்டு போறாங்க, நாங்க எங்க போய்ச் சொருகுறது”

“எங்களுக்கு 2000, 500-ன்னு கொடுக்றாங்க. அதுவும் 10 நாளைக்கு வர வேண்டியிருக்குது. நாங்க எல்லாம் எப்படி பொழைக்கறது”

“இவ்வளவு சிரமமா இருக்கும் போது எப்படி சார் நாங்க ஏழை பாழை எல்லாம் பொழைக்கிறது”

“இந்த மூணு மாசமா செம கஷ்டமா இருக்கு, சாப்பாடு கூட கஷ்டமா இருக்கு. எல்லாரும் செத்துதான் போகணும்”

“ஊருக்குத் திரும்பிப் போகலாம்னா ஊர்ல மழை இல்லையே, விறகு கூட வெட்டி பொழைக்க முடியாமத்தான் இங்க வந்தோம் சென்னைக்கு”

என்ற ஆதங்கத்துடன்

“இந்த மோடி வவுத்துல அடிச்சிருக்காங்களே..”

“கருப்புப் பணம்னா வச்சிருக்கவன போய் புடி. மோடிக்கு தெரியாதா”

“பணக்காரனுக்கு கோடி கோடியா தள்ளுபடி செய்றயில்ல”

“கருப்புப் பணம் வெச்சிருக்கறவன் வாழ்றான், எங்களாட்டம் இருக்கறவன் எல்லாம் சாக வேண்டியதுதான்”

“பணக்காரங்க வீட்டில எத்தனை 2000 ரூபா புடிச்சாங்க. எங்க வீட்டில வந்து பாருங்க ஒரு ரூபா இருக்குதான்னு பாருங்க, இல்ல!”

என்ற கோபக் குரல்களும் வெடிக்கின்றன.

விழுப்புரம் கள்ளக் குறிச்சி, கச்சிராபாளையம் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், கல்வராயன் மலைப்பகுதி மக்கள், சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பேட்டி கண்டு வெளியிட்டிருக்கின்றது டி.வி18 பத்திரிகையாளர் குழு.

தவறாமல் பாருங்கள், பகிருங்கள். இந்த மக்களை நெருங்கி பேசுங்கள், வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறது!

Series Navigation<< மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-angry-pathetic-voices-from-the-voiceless/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
விவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்!

ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன!

அரசியல் சாகசத்துக்கு சேகுவேரா! அதிகாரத் தாகத்துக்கு ஜெயா-சசி!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க.வை பலவீனப்படுத்துவதாகக் கூறி எம்.ஜி.ஆரை வளர்த்து விட்டார் வலது (போலி) கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.கல்யாணசுந்தரம். தனது பங்குக்கு ஜெயலலிதாவுக்கு ஒளிவட்டம் போடுகிறது, சி.பி.எம்...

Close