மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!

This entry is part 18 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

ரிசர்வ் வங்கியின் மௌனமும், பணமதிப்பு நீக்கம் பற்றி எண்கள் சொல்லும் தீர்ப்பும்.

“ரூ 12.44 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” என்று டிசம்பர் 13-ம் தேதி ரிசர்வ் வங்கி துணை ஆளுனர் அறிவித்ததற்குப் பிறகு பொதுமக்கள் வங்கியில் செலுத்திய செல்லாத நோட்டுகளைப் பற்றிய புள்ளிவிபரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

நவம்பர் 8-க்குப் பிறகு ரிசர்வ் வங்கியால் புதிதாக புழக்கத்துக்கு விடப்பட்ட 500 ரூபாய, 2000 ரூபாய், மற்றும் பிற சிறிய மதிப்பிலான நோட்டுகள் பற்றிய விபரங்களும் வெகுகாலமாக வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக, டிசம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூட ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. நவம்பர் 10 முதல் பொதுமக்களுக்கு வினியோகித்ததாக வங்கிகள் வெளியிட்டுள்ள விபரங்களில் இருந்து குத்துமதிப்பான மதிப்பீட்டை மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக ரிசர்வ வங்கி வெளியிட்ட கடைசி புள்ளிவிபரத்தின்படி நவம்பர் 19 வரை ரூ 5.93 லட்சம் கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தன் கைவசம் இருக்கும் தகவல்களை வெளியிடுவதில் கஞ்சனைப் போல நடந்து கொள்ளும் ரிசர்வ் வங்கியின் இந்தப் போக்கையும் தாண்டி, என்ன நடந்தது என்பது குறித்த ஓரளவு துல்லியமான சித்திரத்தை பெறுவது சாத்தியமாகியிருக்கிறது. வேறு வகையில் விளக்கம் கூற முடியாத ரிசர்வ் வங்கியின் அதிகரித்துக் கொண்டே போகும் ரகசியத்தன்மை பற்றிய விளக்கத்தையும் இந்தச் சித்திரத்திலிருந்து பெற முடிகிறது. எப்படி என்று பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கி வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வெளியிடும் வைப்பு நிதி பற்றிய அறிக்கைகளில் புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுகள், அதாவது பொதுமக்களிடமும் வங்கிகளிடமும் இருக்கும் ரொக்கத்தின் கூட்டுத் தொகை பற்றிய புள்ளிவிபரம் கிடைக்கிறது.

 • பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்பு நவம்பர் 4-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அந்த நாளில் சுற்றில் இருந்த பணத்தின் மதிப்பு ரூ 17.97 லட்சம் கோடி.
 • பண மதிப்பு நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகள் 2 நாட்கள் வேலை செய்த பிறகு நவம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின்படி இது ரூ 17.88 லட்சம் கோடியாக இருந்தது.
 • மேலும், கடைசியாக டிசம்பர் 28-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி டிசம்பர் 23-ம் தேதி இந்த மதிப்பு ரூ 9.42 லட்சம் கோடியாக இருந்தது.

அதாவது, புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு நவம்பர் 4-ம் தேதியில் இருந்ததை விட டிசம்பர 23-ம் தேதி ரூ 8.55 லட்சம் கோடி குறைந்துள்ளது. உண்மையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் மதிப்பு குறைந்து கொண்டே சென்றிருக்கிறது. அதாவது, இந்த காலகட்டத்தில் வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை விட குறைந்த மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள்தான் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன என்று இதைப் புரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு நாளிலும் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு பொதுமக்களிடமும் வங்கிகளிடமும் இருக்கும் செல்லாத மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பின் கூட்டுத் தொகையாகும். அது வரை வரை ரிசர்வ் வங்கிக்கு போய்ச் சேர்ந்து விட்ட செல்லாத நோட்டுகள் அதிலிருந்து கழிக்கப்பட்டிருக்கும், ஆனால், பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தி இன்னும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படாத நோட்டுகள் அதில் சேராது.

நவம்பர் 8 அன்று சுற்றில் இருந்த செல்லாத நோட்டுகளின் மதிப்பு ரூ 15.44 லட்சம் கோடி என்பதும் நமக்குத் தெரிந்த விபரம்.

A police officer stands guard in front of the RBI head office in Mumbaiஇந்த விபரங்களின் அடிப்படையில் டிசம்பர் 23-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ 9.42 லட்சம் கோடியில் செல்லும் நோட்டுகள் எவ்வளவு, செல்லாத நோட்டுகள் எவ்வளவு என்பதற்கு சாத்தியமான 21 கூட்டுத் தொகைகளை அட்டவணை போட்டு பார்க்கலாம்.

பின்வரும் அட்டவணையில்

 • முதல் இரண்டு நெடுவரிசைகள் இந்த 21 சாத்தியங்களை (முறையே செல்லாத, செல்லும் நோட்டுகள்) காட்டுகின்றன.
 • செல்லாத நோட்டுகளின் மதிப்பு 0-லிருந்து 2 லட்சம் கோடி வரை அதிகரித்துப் போகும் போது, ரூ 15.44 லட்சம் கோடியிலிருந்து இந்த மதிப்பைக் கழிப்பதன் மூலம் ரிசர்வ் வங்கிக்கு போய்ச் சேர்ந்து விட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பை கணக்கிட்டு மூன்றாவது நெடுவரிசையில் தந்துள்ளோம்.
 • நவம்பர் 4-ம் தேதிக்கான புள்ளிவிபரம் நவம்பர் 8 வரை மாறவில்லை என்று எடுத்துக் கொண்டால் நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 ரூபாய்க்குக் குறைவான நோட்டுகளின் (100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய்) மதிப்பு ரூ 2.53 லட்சம் கோடி. இந்த மதிப்பை செல்லும் நோட்டுகளின் மதிப்பிலிருந்து கழிப்பதன் மூலம் ரிசர்வ் வங்கியால் புதிதாக வெளியிடப்பட்ட நோட்டுகளின் மதிப்பை வந்தடையலாம். அந்த மதிப்பு 4-வது நெடுவரிசையில் தரப்பட்டுள்ளது.

4-வது நெடுவரிசையில் உள்ள புதிய நோட்டுகளின் மதிப்பையும், 3-வது வரிசையில் உள்ள திருப்பி செலுத்தப்பட்டு விட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பையும் ஒப்பிடுவதன் தன் வசம் திரும்பி வந்து விட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பில் எத்தனை சதவீதம் நோட்டுகளை ரிசர்வ் வங்கி பதிலீடு செய்து விட்டிருக்கிறது என்ற கணக்கை வந்தடையலாம்.

3-வது, 4-வது நெடுவரிசைகளுக்கு இடையேயான வித்தியாசம் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு சுற்றில் இருக்கும் நோட்டுகளின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியின் அளவான ரூ 8.55 லட்சம் கோடியாக இருக்கும்.

டிசம்பர் 23 அன்று புழக்கத்தில் இருந்த செல்லா நோட்டு டிசம்பர் 23 அன்று புழக்கத்தில் இருந்த செல்லும் நோட்டு ரிசர்வ் வங்கிக்கு போய்ச் சேர்ந்து விட்ட செல்லா நோட்டு புதிதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட நோட்டு (நிகர மதிப்பு) செல்லாத நோட்டுகளில் புதிதாக வெளியிடப்பட்ட நோட்டுகளின் சதவீதம்
0 9.42 15.44 6.89 44.62
0.1 9.32 15.34 6.79 44.26
0.2 9.22 15.24 6.69 43.9
0.3 9.12 15.14 6.59 43.53
0.4 9.02 15.04 6.49 43.15
0.5 8.92 14.94 6.39 42.77
0.6 8.82 14.84 6.29 42.39
0.7 8.72 14.74 6.19 41.99
0.8 8.62 14.64 6.09 41.6
0.9 8.52 14.54 5.99 41.2
1 8.42 14.44 5.89 40.79
1.1 8.32 14.34 5.79 40.38
1.2 8.22 14.24 5.69 39.96
1.3 8.12 14.14 5.59 39.53
1.4 8.02 14.04 5.49 39.1
1.5 7.92 13.94 5.39 38.67
1.6 7.82 13.84 5.29 38.22
1.7 7.72 13.74 5.19 37.77
1.8 7.62 13.64 5.09 37.32
1.9 7.52 13.54 4.99 36.85
2 7.42 13.44 4.89 36.38

அட்டவணையிலிருந்து பின்வரும் மறுக்க முடியாத உறுதியான முடிவுகளை வந்தடையலாம்:

1. டிசம்பர் 23 வரை ரிசர்வ் வங்கி பதிலீடு செய்துள்ள புதிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, நவம்பர் 8-ம் தேதி சுற்றில் இருந்த செல்லாத நோட்டுகளின் மதிப்பில் 45%-ஐ விட குறைவாகவே உள்ளது. டிசம்பர் 23 அன்று செல்லாத நோட்டுகள் எதுவுமே புழக்கத்தில் இல்லை என்று எடுத்துக் கொண்டால் கூட இது தெளிவாக தெரிகிறது.

2. டிசம்பர் 23 அன்று வங்கிகளிடமும், பொதுமக்களிடமும் இருக்கும் செல்லாத நோட்டுகளின் மதிப்பு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு ரிசர்வ் வங்கி பதிலீடு செய்த பகுதி குறைவாக இருக்கிறது எனபதை அட்டவணையின் முதல் மற்றும் கடைசி நெடுவரிசைகளின் எண்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் வெற்றியையும், செயல்திறனையும் அளவிடுவதற்கான இரண்டு அளவீடுகள் ஒன்றுக்கொன்று எதிரெதிராக உள்ளன.

ரிசர்வ் வங்கியின் பத்திரிகை செய்தியின்படி டிசம்பர் 19 வரை வெளியிடப்பட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ 5.93 லட்சம் கோடி என்று எடுத்துக் கொண்டால் டிசம்பர் 23-ம் தேதி நிலைமை முதல் 10 சாத்தியங்களில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்யலாம்.

அதன்படி டிசம்பர் 30-க்கு ஒரு வாரம் முந்தைய நிலையைப் பொறுத்தவரை பின்வரும் இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன.

 1. ரிசர்வ் வங்கிக்கு திருப்பி அனுப்பபடாத பழைய 500 ரூபாய், 1000 ரூபாய நோட்டுகளின் மதிப்பு சொற்பமானதாகவே இருக்கும் என்று சொல்ல முடியும். 1 லட்சம் கோடி ரூபாயை விடக் குறைவான இந்தத் தொகை நவம்பர் 8 அன்று புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகளின் மதிப்பில் 6.5%-க்கும் குறைவானது. இதில் ஒரு பகுதி வங்கிகளிடம் இருக்கும் என்பதை கணக்கில் கொண்டால் பொதுமக்களிடம் இருக்கும் அத்தகைய நோட்டுகளின் மதிப்பு இன்னும் குறைவாகவே இருக்கும். மார்ச் 21, 2017-க்குப் பிறகு திருப்பப்படாத செல்லாத நோட்டுகளின் மதிப்பை ரத்து செய்வதன் மூலம் ரிசர்வ் வங்கி ஈட்டும் மதிப்பு எந்த முக்கியத்துவமும் இல்லாத அளவு சொற்பமாகவே இருக்கும்.
 2. 2. புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்ட நோட்டுகளை பதிலீடு செய்வது மிகவும் பின்தங்கி, டிசம்பர் 23 வரை பாதிக் கிணற்றைக் கூட தாண்டியிருக்கவில்லை. கடுமையான நோட்டுகள் பற்றாக்குறை டிசம்பர் 30க்கு வெகுகாலம் பின்னரும் தொடரப் போகிறது. அதிலும் அளவுக்கதிகமான நோட்டுகள் 2000 ரூபாய் நோட்டுகளாக இருக்கும் நிலையில் இதன் விளைவு இன்னும் கடுமையாகிறது.

அரசின் பார்வையிலிருந்து பார்க்கும் போது

 • தொடக்கத்தில் பெருமளவு மதிப்பிலான கருப்புப் பணம் திருப்பப்படாமல் போய் விடும் என்று சொல்லப்பட்ட என்ற வாதம் தவிடுபொடியாகியிருப்பதோடு அல்லாமல்,
 • டிசம்பர் 30-க்குள் பணப் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு விடும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவதிலும் பெருத்த இடைவெளி நிலவுகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

புள்ளிவிபரங்கள் யதார்த்தத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி விடும் என்பதுதான் ரிசர்வ் வங்கி அவற்றை வெளியிடுவதற்கு காட்டும் தயக்கத்திற்கான காரணமா? அரசுக்கு சங்கடமான கேள்விகளை எழுப்பும் இந்த சித்திரத்துக்கு, குறிப்பாக பண மதிப்பு நீக்கம் மக்களுக்கு இழைத்த ஆழமான கஷ்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, எந்த மாதிரியான கதையை கட்ட வேண்டும் என்று முடிவு செய்வதற்காக அரசுக்கு அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி காத்துக் கொண்டிருக்கிறதா?

ரிசர்வ் வங்கியின் மௌனத்துக்கு வேறு எந்த விளக்கத்தையும் சொல்வது ஆகாத காரியமாகத்தான தோன்றுகிறது. ஏனென்றால், இந்த புள்ளிவிபரம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்பதோ, அதை கணக்கிடுவது சாத்தியமில்லை என்பதோ கிடையாது எனபது உறுதியான ஒன்று.

புள்ளிவிபரங்கள் தொடர்பான அதன் மௌனம், ரிசர்வ் வங்கியே வெளியிட்டிருக்கும் தரவுகள் மறைமுகமாக சொல்லும் செய்தியை உறுதிப்படுத்துகிறது. எப்படியிருந்தாலும் விரைவில் கலைக்கப்பட வேண்டியிருக்கும் இந்த மௌனம், இந்தியாவின் மத்திய வங்கியின் நம்பகத் தன்மையை மேலும் சேதப்படுத்துவதை விட வேறு எதையும் சாதிக்கப் போவதில்லை.

சுரஜித் மஜூம்தார் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.

ஆங்கில மூலக் கட்டுரை

மொழிபெயர்த்தவர் : குமார்

கட்டுரை, படம் நன்றி thewire.in

Series Navigation<< பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-data-proves-modis-incapability/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்

நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை அக்டோபர் 28 , 2017 அன்று நடைபெறும். இடம் : பெரும்பாக்கம் நேரம் : மாலை 4 மணி முதல்...

உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது?

உலகின் தனிநபர் உற்பத்தித் திறன் மிக அதிகமான நாடாக வரிசைப்படுத்தப்பட்ட பெர்முடாவில் நடக்கும் ஒரே உற்பத்தி நடவடிக்கை, கடலோர பார்களில் தயாரிக்கப்படும் காக்டெய்ல்களும், பிற மேட்டுக்குடி சுற்றுலா சேவைகளும்தான்.

Close