பணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி!

டந்த நவம்பர் 8-ம் தேதி மோடி அறிவித்த ரூ 1000, 500 நோட்டுகளது பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு மோசடி என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

நவம்பர் 2016-ல் மோடி சொன்னதெல்லாம் நடக்கவில்லையே, இப்போது என்ன சொல்கின்றனர்?

பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது மோடியும் சங்க பரிவாரமும் சொன்னது என்ன?

 • ரூ 4 முதல் 5 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வராமலே போய் விடும். அந்த அளவுக்குக் கருப்புப் பணம் செல்லாததாக்கப்படும் என்று மோடியின் அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்திலேயே சொன்னார். அதை பா.ஜ.க பொய்யர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள்.
 • நோட்டுகள் இல்லா (டிஜிட்டல்) பொருளாதாரத்தை கொண்டு வருவதுதான் நோக்கம் என்று சொல்ல ஆரம்பித்து இப்போது அதன் மூலம் வரி ஏய்ப்பை ஒழித்துக் கட்டி, கருப்புப் பொருளாதாரத்தை இல்லாமல் செய்வோம் என்கிறார்கள்.
 • இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதத்துக்குக் கிடைக்கின்றன பணம் தடுக்கப்பட்டு, தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும்; இந்தியா வல்லரசாகி விடும் என்று தேசபக்தி போதையூட்டினர்.

1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த 9 மாதங்களுக்குப் பிறகு தற்போதைய நிலவரம் என்ன?

 • அந்த நோட்டுகளில் 99% வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டன.
 • அதில் வெறும் ரூ 41 கோடி (சுமார் 0.0033%) மட்டுமே கள்ள நோட்டுகள் என்று தெரிய வந்துள்ளது.
 • பண மதிப்பு நீக்கத்துக்கு முன்பு இருந்த அளவுக்கு மின்னணு பரிமாற்றங்கள் குறைந்து விட்டிருக்கின்றன.
 • காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டம் முன் எப்போதும் இல்லாத அளவு தீவிரமடைந்து இந்திய இராணுவம் கடும் நெருக்கடியில் உள்ளது.
  என்று தரவுகள் மூலம் தெரியவருகிறது.

நவம்பர் 2016-ல் மோடி சொன்னதெல்லாம் நடக்கவில்லையே, இப்போது என்ன சொல்கின்றனர்?

அமைப்புசாரா துறைகளான கட்டுமானம், சிறு பட்டறைகள், மண்டிகள், மொத்த வியாபார மையங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் பலர் தமது வாழ்வாதாரத்தை இழந்து கிராமங்களுக்கு திரும்பிப் போகும் நிலை ஏற்பட்டது.

வங்கிகளில் பணம் போட்டவர்களில் 18 லட்சம் பேருக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறோம். ரூ 2.7 லட்சம் கோடி மதிப்பிலான வைப்புகளை விசாரித்து வருகிறோம். அதன் மூலம் கருப்புப் பணத்தை பிடித்து விடுவோம், வரி ஏய்ப்பை தடுப்போம் என்று அடுத்த கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் பா.ஜ.கவினர். இத்தனை லட்சம் வழக்குகளை ஆராய்ந்து வரி ஏய்ப்பை தடுப்பது என்பது உண்மையில் பா.ஜ.க பணிய வைக்க விரும்பும் அரசியல், தொழில்துறை புள்ளிகள் மீதான ஆயுதமாகத்தான் பயன்படும் என்பது இதுவரையிலான மோடி ஆட்சியின் அனுபவத்திலிருந்து தெரியவருகிறது.

99% ரூபாய் நோட்டுகள் அரசுக் கணக்குக்கு வந்து விட்டதென்றால், மோடி சொன்ன ரூ 45 லட்சம் கோடி கருப்புப் பணம் எங்கே? கருப்புப் பண முதலைகள் அனைவரும் மோடி தயவில் தமது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொண்டனர். கருப்புப் பணம்தான் ஒழியவில்லை… ஊழல்-லஞ்சமாவது ஒழிந்து விட்டதா? மாறாக, நவீனமாகியிருக்கிறது. பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகுதான் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ரூ 88 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பபற்றப்பட்டன. இன்றும் அரசு அலுவலகங்களிலும், அரசு காண்டிராக்டுகளிலும் லஞ்சப் பணம் கைமாறுகிறது.

எந்த தீவிரவாதமும் ஒழியவில்லை. மாறாக காவி தீவிரவாதம் அதிகரித்து, தலித்துகள், சிறுபான்மையினர், ஜனநாயக சக்திகள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், மோடி சகித்துக் கொள்ளச் சொன்ன சிரமங்கள் உழைக்கும் மக்கள் மீது கொடூரமாக இறங்கின.

 • வட இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் தமது விளைபொருட்களை சந்தையில் விற்க முடியாமல் சந்தைகள், மண்டிகள் முடக்கப்பட்டன.
 • உழைக்கும் மக்கள் தாம் கூலியாக பெற்ற பணத்தை செலவழித்து உணவு வாங்க முடியாமல், மருந்து வாங்க முடியாமல், பயணிக்க முடியாமல் அவதிப் பட்டனர்.
 • அமைப்புசாரா துறைகளான கட்டுமானம், சிறு பட்டறைகள், மண்டிகள், மொத்த வியாபார மையங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் பலர் தமது வாழ்வாதாரத்தை இழந்து கிராமங்களுக்கு திரும்பிப் போகும் நிலை ஏற்பட்டது.
 • சிறு தொழில்கள், சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல தொழில்கள் நிரந்தரமாக மூடப்பட்டன.

ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வு ஒன்று ஜனவரி – மார்ச் கால கட்டத்தில் ரூ 25 கோடிக்கு குறைவான விற்பனை மதிப்பு கொண்ட சிறு தொழில்கள் 59% விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக கூறுகிறது.

அரசு விளம்பரங்களையும், பா.ஜ.க-வின் பொய்யர்கள் படையையும் பயன்படுத்தி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது மோடி சொன்ன புளுகுமூட்டைகள் ஒவ்வொன்றாக அம்பலமாகும் போது அவை அடுத்தடுத்து புதிய புளுகுகளால் மூழ்கடிக்கப்படுகின்றன. பண மதிப்பு நடவடிக்கையை ஏதோ உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கான நடவடிக்கை, ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று மோடி வித்தை காட்டினார். உண்மை நிலவரம் என்ன?

 • ஏப்ரல் – ஜூன் காலாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 5.7% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
 • ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வு ஒன்று ஜனவரி – மார்ச் கால கட்டத்தில் ரூ 25 கோடிக்கு குறைவான விற்பனை மதிப்பு கொண்ட சிறு தொழில்கள் 59% விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக கூறுகிறது.
 • முதல் காலாண்டில் உற்பத்தித் துறை வளர்ச்சி 1.8% ஆகக் குறைந்திருக்கிறது.
 • விவசாய வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக கிராமப் புறத்தில் வாங்கும் சக்தி கணிசமாக குறைந்திருக்கிறது.
 • இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பின் மதிப்பீட்டின்படி டிசம்பருக்கும் ஏப்ரலுக்கும் இடையே 15 லட்சம் வேலை வாய்ப்புகள் காணாமல் போயிருக்கின்றன.
 • மேலும் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக வணிக வங்கிகள் வழங்கும் கடனின் அளவு சுருங்கியிருக்கிறது.
 • 300 நிறுவனங்களிடம் பிக்கி நடத்திய கருத்துக் கணிப்பில் 73% பேர் அடுத்த 3 மாதங்களுக்கு புதிதாக ஆட்களை சேர்க்கும் உத்தேசம் இல்லை என்று சொல்லியிருக்கின்றனர்.
 • இந்தியாவின் மொத்த உழைப்பாளர்களான 46.6 கோடி பேரில் 35% பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று மெக்கின்சி ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவின் மொத்த உழைப்பாளர்களான 46.6 கோடி பேரில் 35% பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று மெக்கின்சி ஆய்வு தெரிவிக்கிறது.

பணமதிப்பு நீக்கத்தின் பாதகமான விளைவுகள் தற்காலிகமானவை என்று மோடி சொன்னது தவறு என்பதும் அது நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதும் தெளிவாகியிருக்கிறது. உண்மையில், மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம் என்பது பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும், நிதி மூலதன கும்பலும் மோடிக்கு வைத்திருக்கும் இலக்குகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவின் பெரும்பான்மை விவசாய பொருளாதாரத்தையும், அமைப்பு சாரா துறைகளையும் முடக்குவது, அதைத் தொடர்ந்து அந்தத் துறைகளில் உள் நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது இதன் நீண்ட கால நோக்கம்.

குறுகிய காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தை முடக்குவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருக்கும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளின் மதிப்பை பாதுகாத்துக் கொள்வது உடனடி நோக்கம்.

பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாக இருந்து இந்திய மக்களை கொடூரமாக சுரண்டும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் எடுபிடிகளாக, அரசியலிலும், நிதித்துறையிலும் நேரடியாகவும், ஆலோசகர்களாகவும், கணக்காளர்களாகவும், குருமூர்த்தி போன்ற தணிக்கையாளர்களாகவும் சம்பாதிக்கிறார்கள், பார்ப்பன பாசிஸ்டுகள்.

ஆதார், பண மதிப்பு நீக்கம், மாடு விற்கத் தடை, ஜி.எஸ்.டி, “நீட்” என இவர்கள் அடுத்தடுத்து கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் ஒரு பக்கம் இந்திய மக்கள் மீது இந்துத்துவ பிற்போக்கு நிகழ்ச்சி நிரலை திணிப்பதையும், மறு பக்கம் பன்னாட்டு கார்ப்பரேட் நலன்களை உறுதி செய்வதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

எனவே, இதனால் வாழ்வாதாரத்தை இழந்த, மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தெருவில் இறங்கி போராடி இந்தக் கும்பலை ஒழித்துக் கட்ட வேண்டிய தருணமிது. இதைத் தவறவிட்டால், துன்ப துயரங்களிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை.

– குமார்

புதிய தொழிலாளி, செப்டம்பர் 2017

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-scam-by-mody/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சத்தியபாமா போனஸ் வழங்க உத்தரவு! சி.டி.எஸ் ஊதிய வெட்டை தடுக்க முடியுமா?

போனஸ் உரிமையை நிலைநாட்டும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் இந்த வெற்றி ஐ.டி ஊழியர்களுக்கும் முக்கியமான ஒன்று. ஐ.டி ஊழியர்களின் ஊதியம், மாறுபடும் ஊதியம், வருடாந்திர...

ஸ்டெர்லைட் படுகொலை – கார்ப்பரேட் அரசை தண்டிப்பது யார்?

கார்ப்பரேட் அரசின் ஸ்டெர்லைட் படுகொலை, கொலைகார அரசை தண்டிப்பது யார்? 100 நாள் அமைதிப் போராட்டத்தை கலவரமாக மாற்றிய அரச பயங்கரவாதம்

Close