பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!

This entry is part 11 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

நியூஸ் 7 தொலைக்காட்சியில் “கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை : நீர்த்துப் போகச் செய்வது வங்கி அதிகாரிகளா?” என்ற தலைப்பில் விவாதம்.

வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த தாமஸ் ஃபிராங்கோ, பா.ஜ.கவின் மாநில செயற்குழு உறுப்பினர் இராமசுப்பிரமணியன், வங்கி மேலாளர் உஷா, மற்றும் பொருளாதார நிபுணர் சுமந்த் சி.ராமன் என்று நான்கு பேர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க தரப்பைப் பொறுத்தவரை இராமசுப்பிரமணியன் ஆரம்பிக்கும் போதே, “பா.ஜ.க தரப்பில் இது போல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் எங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியது” என்று சீரியசாகவே ஆரம்பித்தார். அவரது ஓட்டுனர் பெட்ரோல் நிலையத்தில் வரிசையில் நிற்கும் போது, “ஏம்பா, உங்க சார் ஏன் இந்த பண மதிப்பு நடவடிக்கையை ஆதரிச்சே பேசிகிட்டு இருக்கார். நாங்க எல்லாம் இவ்வளவு கஷ்டப்படுறோம்” என்று கேட்டார்களாம். அவரது உதவியாளரை வங்கிக்கு பணம் எடுக்க அனுப்பிய போது, அங்கும் இதே போல கேட்டிருக்கிறார்கள். நடைமுறை யதார்த்தம் பா.ஜ.க-வினரின் தடித்த தோலுக்கும் பொருளாதாரவியலை உறைக்க வைக்கிறது.

“மோடி எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் வங்கி அதிகாரிகளில் பல கருப்பாடுகள் இந்தத் திட்டத்தை சீர்குலைக்கிறார்கள். ரிசர்வ் வங்கிக்கு திறமை இல்லை, நிர்வாகத்தில் சொதப்புகிறார்கள்” என்றார். “தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லாமே தலைமையில் இருப்பவர்கள்தான் என்று பேசுகிறோம். மோடியே சென்று ரிசர்வ் வங்கியில் உட்கார முடியுமா, வங்கிகளை கண்காணிக்க முடியுமா, எல்லாவற்றையும் மோடியின் மீது சுமத்தாதீர்கள்” என்று கோபப்பட்டார்.

56 இஞ்ச் மார்பளவு, துல்லிய தாக்குதல், எங்க ஆள்தான் கருப்புப் பணத்தை தன்னந்தனியாக ஒழித்துக் கட்டுகிறார் என்று உதார் விட்டது எல்லாம் குளறுபடிகள் நடக்கும் போது பலியாடுகளை தேடுகிறது. “ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் பட்டேல்தான் பொறுப்பு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.

பண மதிப்பு நீக்கம் செய்ய வேண்டும் என்றால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்யாதது அவரது தவறு என்கிறார்கள். வட்டி வீதத்தை குறைக்க மறுத்து சுயேச்சையாக செயல்பட்டதால்தான் ரகுராம்ராஜனுக்கு பதவிக் கால நீட்டிப்பு கொடுக்க மறுத்தார்கள். இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ரகுராம் ராஜன் ஒப்புதல் அளிக்க மறுத்ததால்தான் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை என்கிறார்கள்.

நீட்டிப்பு கொடுக்க மறுத்தது யார்? அரசியல் தலைமை, மோடியும், அருண் ஜெட்லியும், ஆர்.எஸ்.எஸ் சிந்தனை குழாமும் அதற்கு பொறுப்பு ஏற்காமல் கைகழுவுகிறார்கள்.

ரிசர்வ் வங்கி 45 நாட்களில் 67 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. விடுமுறை நாட்களையும் சேர்த்து, ஒரு நாளைக்கு சராசரியாக 1.5 அறிவிப்புகள், வேலை நாட்களை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு 2 அறிவிப்புகள்.

இதில் பல அறிவிப்புகள் என்ன அடிப்படையில் வெளியிடப்பட்டன, அதை அமல்படுத்தும் வசதி இருக்கிறதா என்பதைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவை. உதாரணமாக, கையில் மை வைப்பது பற்றிய அறிவிப்பை வங்கி மேலாளர் குறிப்பிட்டார். “எங்களிடம் அந்த மை இல்லை, எங்கு வாங்குவது என்றும் தெரியவில்லை. கடை கடையாக அலைந்தோம். கடைசியில் 3 நாட்கள் கழித்து மை வந்து சேர்ந்தது. அதுவும் அழிந்து போய் விடுகிறது என்று கைவிட நேர்ந்தது.”

“5,000 ரூபாய்தான் கணக்கில் போட முடியும் என்ற அறிவிப்புக்கும் நிதி அமைச்சகத்துக்கும் தொடர்பு இல்லை” என்கிறார் ராமசுப்பிரமணியன். “ஆனால், நிதி அமைச்சக அதிகாரிதான் முதலில் அது குறித்து பேசினார், அதன் பிறகுதான் ரிசர்வ் வங்கி அறிவிப்பு அனுப்புகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ்தான் பல அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் வெளியிடுகிறார்.” என்று பதில் கிடைக்கிறது. ரிசர்வ் வங்கி கேலிக்குரிய நிறுவனமாகி விட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி தவறாக கணக்கு போட்டிருப்பதாக சக்தி காந்த தாஸ் கூறியிருக்கிறார்.

“டிசம்பர் 3-வது வாரமே 15.6 லட்சம் கோடியில் 13 லட்சம் கோடி வந்து விட்டது. கணிசமான அளவு பணம் வங்கிக்குள் வராமல் இருந்தால்தான் திட்டம் வெற்றியடைந்ததாக காட்ட முடியும் என்பதற்காக 5,000 ரூபாய் கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றார் சுந்தர் சி. ராமன்.

“வங்கி ஊழியர்கள்தான் பணத்தை கருப்புப் பண முதலைகளுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று குற்றம் சுமத்தினார்” இராம சுப்பிரமணியம். “இதுவரை ரெய்டுகளில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ 3,200 கோடி. அதில் ரூ 80 கோடி மட்டுமே புதிய 2000 ரூபாய் நோட்டுகள்” என்று அறிவித்திருப்பதாக தாமஸ் ஃபிராங்கோ குறிப்பிட்டார்.

மேலும், ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சகத்திலிருந்தே நேரடியாக வெளியில் கசிந்திருப்பதாக ப. சிதம்பரம் குற்றம் சாட்டியிருப்பதையும், வினியோகிக்கப்பட்ட பணத்தில் தனியார் வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட விகிதாச்சாரம் அதிகமாக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“எவ்வளவு பணம் அச்சிடப்பட்டது, எந்த வங்கிக்கு எவ்வளவு அனுப்பப்பட்டது. எந்த மாநிலத்துக்கு எவ்வளவு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்” என்று அவர் கோரினார். ஒரே வங்கிக் கிளைக்கு ரூ 400 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். முறைகேடு செய்ததாக பிடிபட்ட வங்கி ஊழியர்களில் பெரும்பான்மையினர் ஆக்ஸிஸ் வங்கியைச் சேர்ந்தவர்கள்.

“எங்கள் கிளைக்கு வரும் நோட்டுகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் கணினியில் உள்ளன. கணினியில் கட்டுப்பாடுகளை மீறி நாங்கள் எதையும் செய்ய முடியாது. பிடிபட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை அவற்றின் வரிசை எண்ணிலிருந்து கண்டு பிடித்து விட முடியும். அந்தத் தகவலும் ரிசர்வ் வங்கியிடம்தான் இருக்கிறது” என்கின்றனர் வங்கி அதிகாரிகள்.

இதுவரை அரசை ஆதரித்து பேசிக் கொண்டிருந்த ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டச்சார்யா  இப்போது கையை கழுவி விட்டாராம்.

“வங்கியில் போடப்பட்ட பணம் அனைத்தும் வெள்ளைப் பணம் இல்லை. அதில் கருப்புப் பணத்தை வருமானவரித்துறை ஆய்வு செய்து கண்டு பிடிக்கும்” என்றார் ராம சுப்பிரமணியன். “லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகளை தணிக்கை செய்து, நோட்டிஸ் அனுப்பி, விசாரித்து, அது நீதிமன்றத்துக்கு போய் கருப்புப் பணம் என்று நிரூபிக்கவோ, அதன் மீது வரி வசூலிக்கவோ பல வருடங்கள் பிடிக்கும்” என்றார் சுமந்த் சி. ராமன்.

“வங்கியில் போடப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு கூட வந்திருக்கும். எவ்வளவு பணம் என்று எப்படி கண்டு பிடிக்கப் போகிறோம்?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோவுக்குக் கீழ் சில கருத்துக்கள்

Jones Kiln7

“…… இந்நாள் வரை மோடியின் சர்ஜிக்கல் அட்டாக், அதிரடி முடிவு என்று கூவிய நாய்கள் இப்போம் பின்னங்கால் புடரியில் அடிக்க பின்வாங்கிறேயே ராமசுப்பு, ராமன். இப்போம் Reserve Bank மேல் பழிபோடுறன்…”

Abudeen Hameed

“ஏன்டா ராமசுப்பிரமணியன், சர்ஜிகல் அட்டாக். மோடி மாதிரி யாராலும் இதைப்போல செய்தி௫க்க என்று செல்லி விட்டு இப்பொழுது RBI பெயரில் போடுகிர்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை… ”

Muruganand D7

“MODI took a bold step nu sollitte vandhanga ippo apdiye plate thiruppi RBI ku pottutaenga” SEMA BJP GOVT

மொத்தத்தில் பா.ஜ.கவினரும் அரசும் இப்போது, ‘திட்டம் நல்ல திட்டம், மோடியின் நோக்கம் நல்ல நோக்கம், புதிய சிந்தனையை பயன்படுத்தி தைரியமான நடவடிக்கை எடுத்தார். அதை கருப்புப் பண பேர்வழிகளும், வங்கி அதிகாரிகளும் சேர்ந்து சீர்குலைத்து விட்டார்கள்’ என்று பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும், ‘நல்ல காலம் வரும், பணமில்லா பொருளாதாரம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு நல்லது பிறக்கும்’ என்று ஆருடம் சொல்வதை மட்டும் நிறுத்தவில்லை.

Series Navigation<< வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-tv7-debate/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
செய்தியும் கண்ணோட்டமும் : மகாராஜாக்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும்

போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் நாட்டின் பிரதம மந்திரி நடிகைகளை சந்தித்து உரையாடுகிறார், சாமியார்கள் ஆசிரமத்தில் சிலையை திறந்து வைத்து மனம் மகிழ்ச்சி கொள்கிறார்.

விவசாய நெருக்கடி, சி.டி.எஸ் ஆட்குறைப்பு, ஆர்.கே நகர் ஜனநாயகம் – கலந்துரையாடல் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- - ஐ.டி ஊழியர்கள் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் நாள் : ஏப்ரல் 22, 2017 சனிக்கிழமை நேரம் : 11 am...

Close