முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்

  1. பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்
  2. வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்
  3. சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்
  4. உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை
  5. நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!
  6. 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்
  7. முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்
  8. முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

ஹாலிவுட் திரைப்படம் மாட்ரிக்ஸ்-ல் நாயகம் நியோ சிவப்பு மாத்திரையை தேர்ந்தெடுத்த பிறகு கண் விழிக்கிறான். நிர்வாணமாகவும், பலவீனமாகவும், திரவம் நிரப்பப்பட்ட கூட்டுக்குள் அடைக்கப்பட்டு தானும் எண்ணற்ற பிற மனிதர்களைப் போல ஒரு சிக்கலான மின் கட்டுமானத்தில் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்கிறான். நீல மாத்திரையை தேர்ந்தெடுத்திருந்தால் இந்த உண்மை நிலையை உணராமலேயே ஓடிக் கொண்டிருந்திருப்பான்.

இன்றைய உலகில் சிவப்பு மாத்திரை நமக்கு தெரிவிப்பது என்ன? நாம் அனைவரும் நூற்றுக் கணக்கான இழைகளால் ஒரு சிக்கலான மின்னணு கட்டமைப்புக்குள் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிவிக்கிறது. விபரங்களை புரிந்து கொள்ள படியுங்கள்…

7

Derivative logic

Framed in terms of diversification and derivatives’ innate search for yield, there is a momentum in accumulation that exists beyond bubbles and lax regulation

முதலாவதாக, உலகில் எந்த விதமான ‘புறநிலை’ நிதி நங்கூரமும் இல்லை என்ற பின்னணியில் புதிய வகை நிதிக் கருவிகள் உருவாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். அன்னியச் செலாவணி வீதங்களும், வட்டி வீதங்களும் நிலையற்று ஏறி இறங்கும் நிலையில், குறிப்பிட்ட ஒரு நாட்டு நாணயத்தில் குறிப்பிடப்படும் ரொக்கப் பணம் இயல்பாகவே கணிசமான அபாயங்களை கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி வீதம் குறைந்த மட்டங்களுக்கு தள்ளப்பட்ட நிலையில், அவற்றின் மீதான மூலதன ஈவு வீதம் டாலரின் நிலையற்ற தன்மை உருவாக்கும் அபாயத்தை ஈடுகட்டுவதாக இல்லை. மோசமாகிக் கொண்டே போகும் அமெரிக்க பொருளாதார குறியீடுகளால் இந்த அபாயம் இன்னும் அதிகமாகிறது. நிதி சொத்துக்களை வைத்திருப்பதற்கான எந்த விதமான பாதுகாப்பான (அபாயம் இல்லாத) வழியும் இல்லாத நிலையில், முதலீட்டாளர்களின் எதிர்வினை சொத்துக்களை பன்முகப்படுத்துவதாக அமைந்தது. மேலும், பங்குச் சந்தை மற்றும் பிற பாரம்பரியமான சொத்துக்களுக்கு எதிர்நிலையில் விலை ஏறி இறங்கும் சுழற்சியை கொண்டுள்ள சொத்துக்களை தேடிச் செல்ல ஆரம்பித்தனர். பெறுமதிகளிலும், பிணைய பத்திரங்களிலும் வர்த்தகம் செய்வது எதிர்பார்க்கப்பட்ட எதிர்வினையாக இருந்தது. மேலும், குடும்பங்களின் வருமான தவணைகள் (அடமானக் கடன்கள் மீதும் பிற கடன் தவணைகள் மீதும் உருவாக்கப்படும் கடன் பத்திரங்கள்) புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்தன.

இரண்டாவதாக, பன்முகப்படுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக பெறுமதிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தது, அதிக லாபத்தை தேடுவதற்கான உள்ளார்ந்த உந்துதலை உருவாக்கியது. ஒரு கடன் பத்திரம் (அரசு கடன் பத்திரம் என்று வைத்துக் கொள்வோம்) என்பது முதலீட்டின் மீது லாபத்தை (வட்டி தவணை) உருவாக்கும் ஒரு சொத்து, ஆனால், பெறுமதிகள் வேறு வகையிலானவை. ஒரு சொத்தின் செயல்பாட்டின் அடிப்படையிலான அதன் விலை அதற்கு அடிப்படையாக இருக்கும் சொத்தின் செயல்பாட்டின் ஏற்றத் தாழ்வுகளோடு ஏறி இறங்குகிறது. அல்லது அது இன்னொரு சொத்து அல்லது குறியீட்டு எண்ணின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்ட செயல்பாட்டின் மீது உருவாக்கப்படுகிறது. ஆனால், அவை தம்மளவில் எந்த லாபத்தையும் உருவாக்குவதில்லை. பெறுமதிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட லாப வீதத்தோடு இணைந்த சொத்துக்கள் இல்லை, மாறாக அவை போட்டியின் மூலமாக கணக்கிடப்பட்ட லாப வீதத்தை உள்ளடக்கிய சொத்துக்கள். மூலதன சமன்படுத்தலுக்கான ஒப்பந்தங்களாக, லாப தேடல் (மற்றும் அதன் உள்ளார்ந்த கணக்கீடுகளும்) பிரிக்க முடியாமல் பிணைந்துள்ளது.

பெறுமதிகளின் உள்ளார்ந்த லாப தேடுதலை பன்முகப்படுத்தல் என்ற வகையில் சொல்ல வேண்டுமானால், குமிழிகளையும், தளர்வான ஒழுங்குமுறை அமைப்பையும் தாண்டி மூலதனக் குவிப்புக்கான உந்துதல் பெறுமதிகள் செயல்படுகின்றன. மதிப்பை சேமிப்பதற்கு பாதுகாப்பான பிற வாய்ப்புகள் இல்லாததால் பகுதியளவாவது பன்முகப்படுத்தல் தூண்டப்படுகிறது என்றால் விசித்திரமான பெறுமதி பத்திரங்கள் வாங்கப்படுவது ஊக வணிகம் என்று வகைப்படுத்தப்பட வேண்டுமா அல்லது மதிப்புக்கான நிலையான அலகு இல்லாமையை வெளிப்படுத்துவதாக கருத வேண்டுமா? பெறுமதிகளின் கட்டமைப்பிலேயே லாப தேடல் உள்ளார்ந்து இருக்கிறது என்றால், அந்த தேடலை ‘ஊக வணிகம்’ என்ற சட்டகத்துக்குள் பொருத்த வேண்டுமா? அது கோரும் தார்மீக மற்றும் ஒழுங்குமுறை விளைவுகளோடு அப்படி பொருத்த வேண்டுமா? அல்லது அதனை கணக்கிடுவதற்கான ஒரு அவசர முறையுடன் பிரிக்க முடியாமல் இணைந்தத்து என்று கருத வேண்டுமா?

பெறுமதிகளும் நெருக்கடிகளின் அரசியலும்

Derivatives Logic

the logic of derivatives while precipitating the global financial crisis, remains an on-going feature of, and site of innovation in, contemporary capitalism.

அபாயத்தை கையாள்வதில் தோல்வி, சந்தை வெளிப்படைத்தன்மை இன்மை, ஊக வணிகம், பணக்காரர்களுக்கான நிதி மீட்பு ஆகியவை தொடர்பான கவலைகள் ஊக வணிகத்தையும் மிகை செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதை நோக்கிய பல்வகையான ஒழுங்குமுறை பரிந்துரைகளை உருவாக்கியிருக்கின்றன. அதன் மூலம் நிதித் துறையை பொருளாதாரத்தில் ஒரு துணைநிலை பாத்திரத்துக்கு திருப்பி அனுப்புவதற்கு முயற்சிக்கப்படுகிறது. வங்கித் துறையின் பயன்பாட்டு செயல்பாடுகளை, ‘சூதாட்ட’ செயல்பாடுகளிலிருந்து பிரிக்க வேண்டும் என்றும், நிதித்துறை பரிவர்த்தனைகள் மீது வரி விதிக்க வேண்டும் என்றும், நிதித்துறை சம்பளங்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த வகையான செயல்பாட்டு பரிந்துரைகள் எதுவும் பெறுமதிகளின் தர்க்கத்துக்குள் சென்று, மூலதனத்தில் உள்ளார்ந்து இருக்கும் உந்துதலை ஆய்வு செய்ததன் அடிப்படையிலான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை. இந்த உந்துதல் உலக நிதி நெருக்கடியை தோற்றுவித்ததோடு, சமகால முதலாளித்துவத்தின் ஒரு தொடரும் அம்சமாகவும், புத்தாக்கத்திற்கான களமாகவும் உள்ளது. இதற்கு மாறாக, பெறுமதிகள் விற்பனையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மீட்சி ஊகவணிக நிலைப்பாடுகளை புத்துருவாக்கம் செய்வதாகவும், அடுத்த வீழ்ச்சிக்கு முன்நிபந்தனைகளை உருவாக்குவதாகவும் பரவலாக பொருள் கூறப்படுகிறது.

சந்தைகளை மேலும் வெளிப்படைத்தன்மையானதாக மாற்றுவதை எதிர்ப்பதோ, நிதித் துறை சம்பளங்கள் மிதப்படுத்தப்படுவதை எதிர்ப்பதோ கேள்வி இல்லை. இந்த செயல்பாட்டு திட்டங்கள் நிதித்துறையிலும், நிதித்துறை நிர்வாகத்திலும் இருக்கும் குறைகளை தேடுகிறதே தவிர நிதித்துறை புத்தாக்கங்கள் நிகழ்த்தும் உருமாற்றங்களையும் முரண்பாடுகளையும் தேடவில்லை என்பதுதான் கேள்வி. அவை நெருக்கடிக்கான எதிர்வினையாக நிதித்துறையை ‘உண்மையான’ உற்பத்திக்கு கீழ்ப்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குவது என்ற வகையில் பேசுகின்றன. உண்மையில், அவை பெறுமதிகளின் தோற்றத்துக்கு முந்தைய முதலாளித்துவ பொருளாதாரம் என்ற இலட்சியவாத கருத்தாக்கத்தை தூசி தட்டுகின்றன. ஆனால், ‘உண்மையான’தற்கும் ‘நிதித்துறை’-க்கும் இடையேயான இரட்டை நிலை மிகச் சாதகமான சூழலில் செயல்பாட்டு அடிப்படையிலானது மட்டுமாகவும், மிக மோசமான சூழலில் வலிந்து உருவாக்கப்பட்டதாகவும், வரலாறு அற்றதாகவும் உள்ளது. இது ஆய்வு ரீதியாக தூக்கிப் பிடிக்க முடியாததாகவும், ஒழுங்குமுறையில் அமல்படுத்த முடியாததாகவும் உள்ளது.

Our lives run by Finance algorithms

Our lives run by Finance algorithms

மூலதனத்தின் பெறுமதி வடிவம் ஏதோ வழு இல்லை: அது முதலாளித்துவத்தை ஆதாரமான பல வழிகளில் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், எப்போதுமே நெளிவுத் தன்மை கொண்டதாக இருக்க விரும்பிய மூலதனத்துக்கு அது ஓடும் தன்மையை கொடுக்கிறது; அங்கு நிலைத்தன்மை என்பது போட்டிரீதியாக பலவீனமானது. ஆனால், ஓடும் தன்மை ஒழுங்குபடுத்தலின் பகைவன். மாற்றுகள் சொத்தின் ஒரு வடிவத்தை இன்னொரு வடிவமாக தோன்றுவதை அனுமதிக்கிறது எனவே, குறுகிய கால நிதி நீண்ட காலத்தினதாக தோன்றச் செய்ய முடிகிறது. ஊகவணிக பரிவர்த்தனைகள் என்று சொல்லப்படுபவற்றை நீண்டகால முதலீடுகளாக காட்ட முடிகிறது. போட்டிரீதியான செயல்பாட்டில் ஈடுபடுவதை சாத்தியமாக்கும், அதே நேரம் அதற்கு அடிப்படையான சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்ளாமலேயே சாத்தியமாக்கும் சொத்துக்களாக பெறுமதிகள் முதலாளித்துவத்தில் சொத்துடைமை என்ற கருத்தாக்கத்தையே மாற்றியமைக்கின்றன. பெறுமதிகள் பங்குகளுக்கும் கடனுக்கும் இடையேயான வேறுபாட்டை தகர்க்கின்றன., அதன் மூலம் ‘சொந்தமாக்கிக்’ கொள்வது என்பதன் பொருளை தகர்க்கின்றன. மார்க்சிஸ்டுகள் பொதுவாக சிந்திக்க விரும்புவதைப் போல மூலதனம் என்ற வர்க்கம் தனிநபர் சார்ந்ததாகவோ (கொழுத்த முதலாளி), நிறுவனமாகவோ கூட (பெரு நிறுவனம்) தோன்றுவது குறைந்து விடுகிறது. ‘மூலதனத்தை எதிர்க்கும் போது உழைப்பு யாரை எதிர்க்கிறது’ என்ற கேள்விக்கான விடை கூறுவது எப்போதுமே கடினமாகவே இருந்திருக்கிறது. இது இப்போது இன்னும் சிக்கலாக மாறியிருக்கிறது. நாம் ‘மூலதனம்’ என்று அழைக்கும் ஒரு போட்டிரீதியிலான கணக்கீட்டு முறையைத்தான் உழைப்பு இப்போது எதிர்கொள்கிறது.

மேலும், உழைப்பே கூட இன்னும் பல புதிய வழிகளில் மூலதனத்துக்குள் உள்வாங்கப்படுகிறது. தீவிரமாக்கப்பட்ட போட்டி கணக்கீட்டைத் தொடர்ந்து வரும் பணியிட ஒழுங்குமுறையின் மூலமாக மட்டுமின்றி, பிணையமாக்கல் நடைமுறை மூலமாகவும் இது நடக்கிறது. சிலர் இந்த புதிய மாற்றத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அதை வளர்ந்து வரும் குடும்பக் கடன் என்றும், அதன் மூலம் உழைப்பின் வருவாயிலிருந்து வட்டி செலுத்தல் கைப்பற்றப்படுவதை உபரி மதிப்பின் மீது கூடுதல் ‘கைப்பற்றல்’ என்றும் சித்தரிக்கின்றனர்.48 ஆனால், இது இந்த மாற்றத்தின் அடிப்படையான அம்சம் இல்லை, நிச்சயமாக புதிய அம்சமும் இல்லை: உழைப்பாளர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வட்டி (மற்றும் வீட்டு வாடகை, கூலியிலிருந்து அதே போல கைப்பற்றப்படுவது) செலுத்தி வந்திருக்கின்றனர். உழைப்பு பிணைய பத்திரங்களுக்கான வருவாய் தவணைகளை வழங்குவதாகவும் சொத்து பன்முகப்படுத்தலையும் லாப தேடுதலையும் வசதியாக்குவதாகவும் மாற்றியமைக்கப்படுவதுதான் அடிப்படையான புதிய மாற்றம். அடகுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை, கல்விக் கடன், கூடவே தொலைபேசி, எரிசக்தி, மருத்துவ சேவை இவற்றின் அதிவேக வளர்ச்சி அனைத்தும் உலக முதலீட்டாளர்களின் வேண்டலுக்கு ஏற்ற பிணைய பத்திரங்களை உருவாக்குதற்கான மூல ஆதாரங்களை தருகின்றன. உண்மையில் ராபர்ட் ஷிட்டல் 2003-ல் கூறியது என்னவென்றால் :

பங்குச் சந்தைகளை விட உலக நாடுகளின் பொருளாதாரங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, கூலி/சம்பள வருவாய்களும் நமது வீடுகள், குடியிருப்புகள் போன்ற நிதித் துறை அல்லாத வாழ்வாதாரங்களும் ஆகும். அங்குதான் நமது சொத்துகளில் பெருமளவு காணப்படுகிறது.49 உழைப்பின் செலவினங்கள் சாத்தியப்படுத்தப்பட்ட வேண்டலை கொள்கையின் அடிப்படையான வகையினமாக கீன்ஸ் நியமித்ததை விட இப்போது மூலதனத்தின் லாபத்துக்கும், அபாய நிர்வாக உத்திகளுக்கும் உள்ளார்ந்து இணைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்க வாழ்க்கை நிலைமைகள் – பல வருவாய் ஈட்டும் குடும்பங்கள்; ஓய்வூதியம், கல்வி, மருத்துவம் போன்றவற்றின் தேவைகள், பிணைய பத்திரங்களின் அடிப்படையாக அமையும்படியான தவணை செலுத்தலுக்கு முன் உரிமை கொடுக்கும் வகையில் மாற்றி வடிவமைக்கப்படுகின்றன. ‘உழைக்கும் வர்க்கம் என்ன செய்கிறது?’ என்ற கேள்வியை இப்போது மேலும் மேலும் அதிகமாக நிதித்துறை புத்தாக்கத்தின் மூலமாக கட்டமைப்பு ரீதியாக அபாயம் இடம் மாற்றப்படுவதன் அடிப்படையில் முன் வைக்க வேண்டியிருக்கிறது. குடும்பங்களை நிதித்துறையின் ‘கடைசி கட்ட அதிர்ச்சி தாங்கிகள்’ என்று சர்வதேச நாணய நிதியம் சித்தரித்தது இந்த நிகழ்முறையின் முக்கியமான பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது.50

(தொடர்ச்சி இறுதி பகுதியில் 8)

From analysis of derivatives markets  by Dick Bryan and Michael Refferty. originally published in Socialist Register vol 47 in 2011

Series Navigation<< 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-7-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.

நமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம்  வரும்   17  சனிக்கிழமை  2018 அன்று நடைபெறும்.

தொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை

இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை  குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது....

Close