முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

  1. பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்
  2. வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்
  3. சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்
  4. உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை
  5. நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!
  6. 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்
  7. முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்
  8. முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

நிதி மூலதன நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளில் முதலீடு செய்து தமது முதலீட்டுக்கு மேலும் மேலும் லாபத்தை ஈட்டும்படி கட்டாயப்படுத்துகின்றன. இது தொழிலாளர்களைப் பொறுத்தவரை இன்னும் அதிக வேலைப் பளு, ஆட்குறைப்பு, சம்பள வெட்டு என்ற வடிவில் அவர்களை தாக்குகிறது. ஐ.டி/ஐ.டி சேவை துறையில் காக்னிசன்ட், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, பிற பன்னாட்டு நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் இதை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

why are the bankers not in jail

In a protest in US against banks.

இன்னொரு பக்கம் இதே நிதி மூலதனம் உழைக்கும் மக்களின் வாழ்க்கையிலும் முதலீடு செய்கிறது. வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள், காப்பீடுகள் போன்ற நிதிக் கருவிகள் மூலம் வாழ்க்கையில் ஊடுருவியிருக்கிறது. இந்த நிதிச் சொத்துக்கள் மீதான வட்டி வீத மாற்றங்கள், பிற கட்டணங்கள் என்று மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பொருதாரம் மேலும் மேலும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் வேலையை விட்டு நீக்கப்படும் போது அது குடும்பத்துக்கு பேரிடியாக அமைகிறது. இன்னொரு பக்கம் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கடன் கட்ட முடியாத நிலை ஏற்படும் போது, அதற்கு வித்திட்ட நிதி மூலதனமே நெருக்கடியில் வீழ்கிறது.

21-ம் நூற்றாண்டு முதலாளித்துவம் இந்த இருபக்க தாக்குதலில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் லாபத்தை அதிகரிக்க செலவுகளை குறைக்க வேண்டும், ஆட்குறைப்பு செய்ய வேண்டும், இன்னொரு பக்கம் கடன் கொடுத்த ஊழியர்கள் வேலை இழக்கும் போது வாராக் கடன்கள் அதிகரிக்கின்றன. இந்த நெருக்கடியிலிருந்து விடுபதறுவதற்காக சுமையை பொருதாரா ரீதியில் இன்னும் நலிந்த பிரிவினர் மீது சுமத்துகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் கட்டுப்பாடு இல்லாமல் இயற்கை வளங்களை சூறையாடுவது, சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது என்று தமது வெறியாட்டத்தை அதிகரிக்கின்றனர்.

இதை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? நிதித்துறை கடன்களைப் பொறுத்தவரை உழைக்கும் வர்க்கம் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். – விவசாயக் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்களை தள்ளுபடி செய்ய கோர வேண்டும். அரசே அனைவருக்கும் கல்வி, மருத்துவ சேவை, வீட்டு வசதி செய்து தரும்படி போராட வேண்டும்.

இப்போதோ, நிதித்துறை முதலைகளால் நிர்வகிக்கப்படும் உலகமோ எதிர் திசையில் தள்ளப்படுகிறது. அனைவரையும் சந்தைகளின் தயவில் விடுகிறது, அதாவது நிதியாதிக்க கும்பலின் ஆதிக்கத்தை வலுப்படுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினர்தான் இந்த பிரம்மாண்டமான எதிரிக்கு எதிராக போராடி உலகத்தை முதலாளித்துவ அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

டிக் பிரையன், மைக்கேல் ரெஃபர்டி எழுதிய பெறுமதி சந்தைகள் பற்றிய பகுப்பாய்வின் மொழிபெயர்ப்பின் இறுதிப் பகுதி இதோ. இது was originally published in சோசலிஸ்ட் ரெஜிஸ்டர் 47-வது இதழில் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மூலதனத்தின் கண்ணோட்டத்தில் உழைப்பு என்பது உபரி மதிப்பை படைக்கும் உழைக்கும் வர்க்கம் மட்டும் இல்லை. உழைப்பு இப்போது மூலதனத்தால் ஒரு ‘சொத்து வகையினமாக’ பார்க்கப்படுகிறது: ஜனாதிபதி புஷ் ஆதரிக்கும் ‘சொத்துரிமை சமூகம்’ என்ற கருத்தில் இல்லாமல், பங்குகள், கடன் பத்திரங்கள், கடன் பெறுமதிகள் போன்றவற்றின் வரிசையில் உட்கார்ந்திருக்கும் நிதி மூலதன முதலீட்டுக்கான இலக்காக உழைக்கும் வர்க்கம் பார்க்கப்படுகிறது. லாபத்துக்கும் பன்முகப்படுத்தலுக்கும் தேடலாக, ஒரு குடும்பமும் அதன் கூலி வருவாயும் மூலதனத்தின் லாபகரமான சொத்து கையிருப்புக்கான புதிய வாய்ப்புகளை பிரநிதித்துவப்படுத்துகின்றன. குறிப்பாக, சொந்த வீடு வேண்டும் என்ற உழைக்கும் வர்க்கத்தின் கனவுகள் நெருக்கடிக்கு இட்டுச் சென்ற கால கட்டத்திலும், அதற்கு பின்னரும் மூலதனத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு கவர்ச்சிகரமான முதலீடாக இருந்தது. தொழிலாளர்கள் வீட்டை வாழ்வதற்கான இடமாக கருதும் போது (உழைப்பாளர்களின் கண்ணோட்டத்தில் ஒரு அசையாச் சொத்து), வீட்டை சொந்தமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உழைப்பாளர்களின் விருப்பத்தின் மீது முதலீடு செய்வது பிற முதலீடுகளை விட பாதுகாப்பானது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. AAA மதிப்பீடு கொண்ட அடமானக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்கள் பரவலாக கிடைத்தது இந்த கருத்தை நியாயப்படுத்துவதாக இருந்தது.

sub-prime mortage

From around 2003 the lending was over-extended, and households took out loans that were unlikely to be repaid: the now-familiar story of ‘sub-prime’ and ‘originate-to-distribute’.

வரலாறு இப்போது நமக்குக் காட்டியிருப்பது என்னவென்றால் உழைப்பாளர்களை ஒரு சொத்தாக மூலதனமோ, சரிவர அபாய-மேலாண்மைக்கு அரசு செய்யவில்லை என்பதைத்தான். 2003 வாக்கிலிருந்து கடன் கொடுத்தல் வரம்பை மீறி நிகழ்ந்தது, இப்போது அனைவருக்கும் தெரிந்து விட்ட “சப்-பிரைம்” மற்றும் “உருவாக்கி வினியோகித்தல்” முறையில் குடும்பங்கள் திருப்பிக் கட்ட முடியாத கடன்களை வாங்கினார்கள். அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களின் வருவாய் தவணைகளாக அமைந்த கடன் தவணைகளை கட்டுவதற்கு உழைப்பாளர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் தவறினார்கள். பல பிணைய பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாக ஆனது. 2007 வாக்கில் வீடுகள் கடனில் மூழ்கும் சுழற்சி ஆரம்பித்திருந்தது, அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களை வைத்திருந்தவர்கள் வேகமாக பணத்தை இழக்க ஆரம்பித்தனர்.

எனவே, முக்கியமான வகைகளில் பார்க்கும் போது, உழைப்பு, உழைக்கும் வர்க்கமாக அதன் வலிமையின் அடிப்படையில் அல்லாமல், சொத்து வர்க்கமாக அதன் தோல்வியில் உலகளாவிய நிதி நெருக்கடியை உருவாக்கியது. “நிதி நெருக்கடிக்கு உழைப்பாளர்கள் மீது பழி சுமத்த முடியாது” என்ற நிலைப்பாட்டுடன் முரண்பட்டு, நெருக்கடியில் உழைப்பாளர்களின் பங்களிப்பு மீது நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறோம். இந்த கவனக் குவிப்பின் மூலமாகத்தான் சந்தைகளை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோருவதைத் தாண்டி அமைப்பாக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் சக்தியை கண்டறிய முடியும். உண்மையில், நிதித் துறையை பொறுத்தவரையிலான உழைப்பாளர்களின் சக்தியை புரிந்து கொள்வதில் உழைப்பு நிகழ்முறையுடன் தெளிவான பொருத்தப்பாடுகள் உள்ளன. உழைப்பாளர் அவரது உழைப்பு சக்தியிடமிருந்து (உற்பத்தியின் தனிச் சிறப்பான முக்கியமான ஒரு உள்ளீடாக உழைப்பை உருவாக்கும் ஒரு பகுதி) பிரிக்கப்பட முடியாதது போல, தொழிலாளியை அவர் செலுத்த வேண்டிய கடன் தவணைகளில் அடங்கியிருக்கும் அபாயங்களிலிருந்து பிரிக்க முடியாது. இந்த பிரிக்க முடியாமையிலிருந்து அரசியல் வலிமை வருகிறது. உற்பத்தியில் பிற உள்ளீடுகளைப் போல் இல்லாமல், மற்ற சொத்து வடிவங்களைப் போல இல்லாமல், உழைப்பு உற்பத்திக்குள்ளும் நிதித்துறைக்குள்ளும் எதிர்ப்பை காட்டுவதற்கான வலிமையை வெளிப்படுத்துகிறது. உற்பத்தியில் மூலதனம் உழைப்பின் தாக்குதலுக்கு உட்பட்டதாக எப்படி இருக்கிறதோ, அதே போல நிதித்துறையிலும் மூலதனம் உழைக்கும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு உட்பட்டதாக உள்ளது.

உழைப்பாளர்களின் வருமானத்தை கைப்பற்றும் அதே நேரத்தில் உழைப்பாளர்களை அடிபணிந்தவர்களாக வைத்திருக்கும் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிவதுதான் மூலதனத்தின் விருப்பம். அத்தகைய முதலீடுகள் ஒரே நேரத்தில் ஒருபுறம் நீடித்த தன்மை கொண்டதாகவும், மறுபுறம் தாக்குப் பிடிக்க முடியாத வட்டித் தவணை கட்ட வைப்பதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை குறுகிய காலத்தில் அல்லது இடைக்காலத்தில் ஓட்டாண்டிகளாக்குவது என்று செயல்பட முடியாது. இதை லாபா-விஸ்டாஸ் ‘நிதித்துறை உடைமை பறிப்பு”51 என்று அழைக்கிறார். பிணையமாக்கல் நடைமுறையின் மூலம் உழைக்கும் வர்க்கத்தை உலக நிதித்துறைக்குள் இணைத்ததில் மூலதனமும், அரசும் இழைத்த சமீபத்திய தவறு இது. மூலதனத்துக்குத் தேவைப்படுவது நீடித்து இருக்கக் கூடிய ஒரு உழைக்கும் வர்க்கம், அது நிதித்துறை சந்தைகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும். அதன் மூலம் பிணைய பத்திரங்கள் சந்தைகளின் வேண்டலை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகால நிதிக் கருவிகளை வழங்க வேண்டும். மூலதனத்தை அதனிடமிருந்தே பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஒழுங்குமுறை திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அவற்றில் சந்தை வெளிப்படைத்தன்மைக்கான திட்டங்களும் அடங்கும்.

Financial inclusion

Financial literacy coupled with consumer protection constitutes a particular response from states, on behalf of capital, for addressing labour as a source of financial crisis.

ஒரு சொத்து வகையினமாக உழைக்கும் வர்க்கத்தின் தோல்வியிலிருந்து மூலதனத்தை பாதுகாப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் அபாயம் இன்னும் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும். நிதித்துறை கல்வியறிவுடன், நுகர்வோர் பாதுகாப்பை இணைப்பது அரசுகளின் குறிப்பான எதிர்வினையாக உள்ளது. இதன் மூலம் மூலதனத்தின் சார்பாக, நிதி நெருக்கடியின் காரணமாக உழைக்கும் வர்க்கம் இருந்ததை சரி செய்ய முயற்சிக்கிறது. மூலதனத்தைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் (மற்றும் குடும்பங்கள்), ஒரு நிதித்துறை நிறுவனங்களாக மேலும் செயல்திறனுடன், ஒரு சொத்து வகையினம் பற்றிய மூலதனத்தின் தேவைக்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மூலதனத்தையே எடுத்துக் கொண்டால், நிதிச் சந்தைகளின் நிச்சயமின்மைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான புதிய கருவிகளை உழைக்கும் வர்க்கத்துக்கு விற்பதன் மீது அதன் கவனம் திரும்பியிருக்கிறது. ரியல் எஸ்டேட், ஊக வணிகச் சந்தைகள், வருமான காப்பீடு, ஓய்வூதிய காப்பீடு போன்ற கருவிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அரசைப் பொறுத்தவரை நிதித்துறை கல்வியறிவை அதிகரிப்பதன் மீது கவனம் குவிந்திருக்கிறது. நிதித்துறை கல்வியறிவு தொழிலாளிக்கு பலனளிப்பதாக முன் வைக்கப்படுகின்றது. அதாவது, அவற்றின் மூலம் அவர்கள் தமது சொந்த நலன்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால், இதன் உண்மையான விளைவு உழைக்கும் வர்க்கத்தை முதலீடு செய்வதற்கான மேலும் நம்பகமான சொத்தாக உருவாக்குவதாகவே உள்ளது. இன்னும் பிற நிறுவனங்களுடன் சர்வதேச நாணய நிதியம் இந்த நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தது:

“ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, வங்கித்துறையிலிருந்து குடும்பங்கள் உட்பட வங்கி அல்லாத துறைகளுக்கு அபாயம் நகர்த்தப்படுவது, நிதித்துறை கட்டமைப்பின் தாங்கும் சக்தியையும், நிலைத்தன்மையையும் அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது. குடும்பத் துறை முழுவதும் சேர்த்து நிதித்துறை அபாயங்களை பரவலாக்கம் செய்வது இதில் முக்கியமானதாகும். அரசின் கொள்கை வகுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், தர்க்கரீதியாக இதற்கு அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். குடும்பங்கள் தமது நிதித்துறை கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளவும், தமது நிதித்துறை விவகாரங்களை நிர்வகிப்பதற்கு தேவையான தரமான ஆலோசனையையும், கருவிகளையும் பெறுவதற்கும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.”
52

இலக்கில் வைக்கப்பட்டிருக்கும் நிதித்துறை கல்வியறிவை சாதிப்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.53 நிதித்துறை கல்வியறிவு திட்டங்களுக்கான தாக்கங்கள் பற்றிய ஷூபர்த் ஷூட்ஸ் பற்றிய கருத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. “நிதித்துறை கல்வியறிவு திட்டங்களின் முதன்மையான நோக்கம் நிதிச் சந்தைகள் மீதான அரசின் கட்டுப்பாடுகளை ஒழித்துக் கட்டும் வகையில் நடந்து கொள்ளும்படி விபரம் தெரியாத ஏழை மக்களை வழிக்குக் கொண்டுவருவதாகவே இருக்கிறது. பிரச்சனைகளுக்கான தீர்வு சந்தை சக்திகள் மூலம் காணப்படும் என்பதை நிறுவுவதாக இருக்கிறது.”54 ஆனால், நாம் இங்கு பார்க்க வேண்டியது, நிதித்துறை கல்வியறிவு சந்தைகளை மேலும் திறனுடையதாக ஆக்குமா என்பதோ, தொழிலாளர்களை கவனம் மிக்கவர்களாக ஆக்குமா என்பதோ இல்லை. நமது கவலை, இந்தத் திட்டம் உழைக்கும் வர்க்கத்தை மூலதனத்தின் வடிவில் மறுவார்ப்பு செய்வதை இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதே.

உழைக்கும் வர்க்கத்திற்கு இது ஏற்படுத்தும் விளைவுகள் இந்த நிலைமைக்கான எதிர்வினைக்கான கதவையும் திறந்து விடுகிறது. இந்த ஆய்வுக் கட்டுரையில் முன்வைக்கப்படும் திட்டம், அபாயத்தை சரக்காக்கும் நிகழ்ச்சிப் போக்கின் மீதான கவனத்தையும் மூலதனத்தின் அபாயத்தை இடம் பெயர்க்கும் திட்டத்தில் உழைக்கும் வர்க்கம் இணைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது. இந்தத் திட்டம் 1980-களிலிருந்து நிகழ்ந்து வரும் பெறுமதிகளின் வளர்ச்சியின் ‘மறுபக்கமாக’, இந்த வளர்ச்சி உழைக்கும் வர்க்கத்தின் தோல்வியாகவும், மூலதனத்தின் புத்தாக்கமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

இந்த வகையில் இதை பார்க்கும் போது இத்தகைய அபாய இடம் பெயர்த்தலை எதிர்ப்பது என்ற வகையிலான மாற்று அரசியல் நமக்குக் கிடைக்கிறது. கடன் கொடுப்பதிலும், அடகுக் கடன்களையும் கல்விக் கட்டணத்தையும் பிணையமாக்கலிலும் சிறந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றோ, தொழிலாளர்களின் சேமிப்புகளை கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றோ கோருவதை விட்டு அரசு வீட்டு வசதி, அரசு ஓய்வூதியம் போன்றவற்றுக்கு போராட வேண்டும். நிச்சயமாக, இது புதிய கோரிக்கை இல்லைதான். இது பழங்கால கோரிக்கையாகவும், பெருமளவு அரசை சார்ந்திருப்பதாகவும் தோன்றலாம். ஆனால், இந்த கால கட்டத்தில், அத்தகைய நிலைப்பாடுகள் அரசுத் துறையை தூக்கிப் பிடிப்பதாக இல்லை, (அரசுகளே அபாயங்களை இடம் மாற்றும் நிகழ்முறையுடன் பிரிக்க முடியாமல் இணைந்திருக்கின்றன), மாறாக மூலதனக் குவிப்புக்கான புதிய எல்லைகள் மீதான தாக்குதலாக இது அமையும்.

இன்னொரு வகையில் பார்த்தால், இது தினசரி போராட்டத்துக்கு ஒரு உலகளாவிய பொருளையும் தாக்கத்தையும் கொடுப்பதாக இருக்கும். மேலும், அபாயம் சரக்காக்கப்படுவது (மற்றும் பெறுமதிகள் சரக்குகளாக செயல்படுவது) பற்றிய விழிப்புணர்வு, நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், அபாயத்தை இடம் பெயர்ப்பதை எதிர்த்த அனைத்து போராட்டங்களும், அவை கூலி உயர்வுக்காகவும் வேலை நிலைமைகளுக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது ஓய்வூதியம், அடமானக் கடன் தவணைகள், வங்கிக் கட்டணங்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களாக இருந்தாலும் சரி, முதலாளித்துவ உற்பத்தி முறையின் களத்தில் நடக்கும் போராட்டங்கள் ஆகும்.

நிதித்துறை நெருக்கடியிலிருந்து மூலதனத் திரட்சியின் இந்த முன்னணி களத்தில், தான் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டிருப்பதை உழைக்கும் வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முன்னணி களத்தில் எதிர்பார்த்தபடி செயல்படத் தவறுவது (கடன்களை தொடர்ந்து கட்டத் தவறுவது) உலக நிதித்துறை நெருக்கடிக்கான வினையூக்கியாக இருந்தது : உழைக்கும் வர்க்கத்தின் உணர்வுக்கு அப்பாற்பட்டு அதன் வலிமையை இவ்வாறு வெளிப்படுத்தியது. நிதித்துறை புத்தாக்கத்தின் காரணமாக, புதிய, அவசர வழிகளில் மூலதனத்துக்கு உழைக்கும் வர்க்கம் தேவைப்படுகிறது.

உற்பத்தித் துறையின் வீழ்ச்சியும், நிதித்துறையின் வளர்ச்சியும் உழைக்கும் வர்க்கத்தை ஒரு வர்க்கமாக இல்லாமல் செய்து விடவில்லை. மாறாக, அதன் புத்தாக்கத்துக்கான சாத்தியங்களை காட்டுகிறது. இதன் பொருள் என்னவென்றால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வருவாய் பெற்று தருவதற்கு போராடும் தொழிற்சங்கங்கள் போன்ற வர்க்க அமைப்புகளுக்கும், உழைக்கும் மக்களுக்கு மானியங்கள் பெறுவதற்கு செயலாற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கும் அப்பால் செல்வதற்கான தேவையை இது சுட்டிக் காட்டுகிறது.

தனிநபர்களின் வருமானத்தை செலவழித்து அல்லது கடன் வாங்கி வாங்கும் சேவைகளை பெறுவதன் மீது கவனம் செலுத்தும் அமைப்புகளைப் பற்றி இல்லாமல் பொது சேவைகள் கூட்டுத்துவ செயல்பாடுகள் போன்ற வர்க்க நலன்களை வெல்வதற்காக பணியாற்றும் வர்க்க அமைப்புகள் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துகிறது. உழைப்பு சக்தி உட்பட சமூக உறவுகளை சரக்குமயமாக்கத்திலிருந்து விடுவிப்பதை நோக்கிய பயணத்தை இது கோருகிறது. பெறுமதி வடிவத்துக்கு எதிரான போராட்டத்துக்கான அவசியமான நிகழ்ச்சி நிரல் இதுவே ஆகும்.

(முடிந்தது)

Debt payment

Protest against student loan payments in the US

நன்றி Socialist Register (vol 47 in 2011)

Series Navigation<< முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-8-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
புரட்சி வரும் இல்லையா அம்மா?

    ஏய்... அம்மா! புரட்சியென்றால் என்ன? அது போராட்டமடா கண்ணா ! வீரர்கள் சண்டை போடுவார்களே... அதுவா? ஆமா குழந்தை! போரிடுவாங்க,கொல்லுவாங்க,சாவாங்க. நாம் அன்னியனை எதிர்த்துப்...

புதிய தொழிலாளி – 2017 ஆகஸ்ட் பி.டி.எஃப்

கோரக்பூர் குழந்தைகள் படுகொலை - விபத்தல்ல, படுகொலை, விநாயகனே... 'வினை' சேர்ப்பவனே, செக்யூரிட்டிகள் - சோற்றுக்கான போராட்டம், கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி?, மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட்...

Close