மே 25-ம் தேதி யூ-டியூபில் வெளியிடப்பட்ட காட்சியில், ஆதார் மூலமாகவும், டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலமாகவும் அமைப்பே ஊழல்மயமாக்கப்பட்டு விட்டதாக கதில் சொல்கிறான். கணினி ஹெக்கர் வொயிட் டெவில் (அர்ஜூன்) பற்றி பேசும் போது, “ஆதார் கார்ட் என்பது நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐ.டி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனுசனுடைய கைரேகையிலிருந்து கண் ரெட்டினா வரைக்கும் எல்லா அடையாளத்தையும் சேர்த்து வைச்சிருக்கிற மாஸ்டர் கார்ட். பயமுறுத்தல, நடக்கப் போறத சொல்றேன்.
இன்னைக்கு டிஜிட்டல் இந்தியாங்கிற பேர்ல ஏ.டி.எம் மெசின்லருந்து வோட்டிங் மெசின் வரைக்கும் எல்லாமே டிஜிட்டல் ஆயிருச்சு. அவன் நெனைச்சா நாசிக்ல நோட்டுக் அடிக்க முடியும், ஓட்டிங் மெசின்ல ஓட்டையும் மாத்த முடியும்.
இப்ப வரைக்கும் நம்ம ஃபோன மட்டும்தான் ஹேக் பண்ணிகிட்டு இருந்தான். இனிமே நம்ம லைஃபையே ஹேக் செய்வான்.”