பன்றி தொழுவத்திற்கு பன்னீர் தெளிக்கும் அருமை அங்கிள் வைத்தி – தினமணி தலையங்கம்

ஜனநாயக விரோதம்! – தினமணி தலையங்கம்

கண்ணோட்டம்:

திர்கட்சிகளின் அமளி துமளியால், எந்த விவாதமும் நடத்த முடியாமல் கடந்த வாரத்தைப் போல இந்த வாரமும் பாராளுமன்றம் முடங்கிவிடுமோ என்றும், இதனால் பாரளுமன்ற ‘ஜனநாயகத்தின்’ மீதே மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுமோ என்றும், இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூணின் முக்கியப் பிரதிநிதியான தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தனது ஆதங்கத்தை இன்றைய (20/03/2018) தலையங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம், ஏன் தண்ணீரைக் கூட காசு கொடுத்துத்தான் வாங்கிப் பருக வேண்டும் என்ற ஒரு கையறு நிலை உருவாகி இருக்கிறதே, அதைப் பற்றிய விவாதம் நாடளுமன்றத்தில் நடந்துள்ளதா – நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட WTO ஒப்பந்தம்.

அதாவது, நீரவ் மோடி மற்றும் இந்திய வங்கிகளின் மோசடிகள் குறித்து சரியான விவாதமின்றி கடந்துவிடும் என்றும், குறிப்பாக உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளையோ, பொதுநல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளையோ எழுப்ப முடியாத நிலை தொடர்கிறது என்று கனத்த நெஞ்சுடன் கண் கலங்குகிறார்.

130 கோடி மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் என்றால், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளோ நீண்ட கால பிரச்சினைகளோ நம் நாடளுமன்ற உறுப்பினர்களால் அவையில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட்டு வருகிறது என்றால் கீழ்கண்ட பிரச்சினைகள் பாராளுமன்றத்தில் தீர்க்கப்பட்டதற்கான தரவுகளைதினமணி வைத்தியநாதன் கொடுக்க வேண்டும்.

  • ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம், ஏன் தண்ணீரைக் கூட காசு கொடுத்துத்தான் வாங்கிப் பருக வேண்டும் என்ற ஒரு கையறு நிலை உருவாகி இருக்கிறதே, அதைப் பற்றிய விவாதம் நாடளுமன்றத்தில் நடந்துள்ளதா, ஒருவேளை நடந்திருந்தால், அந்தப் பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டுமே, தினமணியின் தலையங்கத்தின் படி.
  • தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, நீட் தேர்வு பற்றி என்ன விவாதம் செய்தார்கள், ஏன் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை?

இந்தியா நாடாளுமன்றம் பற்றிய இந்த கார்ட்டூனுக்காக அசீம் திரிவேதி மீது 2012-ல் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டு அது உச்சநீதிமன்றத்தில் 2015-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

நம்மில் பல பேர் ஜனநாயகம் என்றால், 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமக (திருவிழா) குளத்தில் குளித்தால் நம் பாவமெல்லாம் போக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறார்களே, அது போலத்தான் 5 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் தேர்தலின் மூலம் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது என்று நினைக்கிறார்கள், அப்படித்தான் நினைக்கவும் சொல்கிறார் தினமணி ஆசிரியரும்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தான் கொடுத்த வாக்குறுதிகளை, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத பட்சத்திலும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் பட்சத்திலும் அவரின் அந்தப் பதவியானது பறிக்கப்பட வேண்டும், அதுவே உண்மையான ஜனநாயகம். ஆனால், நமது பாராளுமன்றமோ ஐந்து வருடக் குத்தகைகாரர்கள் குழுமிப் பேசி கூத்தடிக்கும் கூடாராமாக இருக்கிறது.

இப்போதிருக்கும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு பூஜை செய்யும் தரகர்களால் நடத்தப்படுகிறது, ஆகவே அது அப்படித்தான் இருக்கும்!

நமக்குத் தேவை, மக்களால் மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் ஜனநாயகம், அது தான் புதிய ஜனநாயகம்!

– R. ராஜதுரை
பொருளாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/dinamani-tries-to-make-pigsty-smell-sweet/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
“நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை” – தொலைக்காட்சி விவாதம்

"முதலாளிகள் மட்டும் FICCI-ல இருக்கீங்க, நாஸ்காம்ல இருக்கீங்க. எங்களுக்கு சங்கம் வேண்டாமா?" - ஊழியர்கள்

மாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு

‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான் அரசு எந்திரம் கூறும் நடுநிலையின் இலட்சணம்.

Close