மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீர்!

அன்பார்ந்த ஐ.டி.துறை நண்பர்களே!

தீபாவளி எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

மகாவிஷ்ணுவின் 10 அவதாரத்தில் ஒரு அவதாரத்தின்போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்துமதம்.

யார் இந்த நரகாசுரன்?

narakasur

நரகாசுரன் கொலை

இரண்யாக்‌ஷன் எனும் ஒரு ராக்ஷசன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு, பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை செய்த அசுரனாம். இதனை தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிடவே அவர் கிருஷ்ண அவதாரத்தின்போது நரகாசுரனைக் கொன்றாராம். கொல்லப்படும்போது, தனது மரணத்தைக் கொண்டாடும்படி நரகாசுரன் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கொண்டாடப்படுவதுதான் தீபாவளியாம்.

பகுத்தறிவைக் கேலி செய்கிறது, தீபாவளிப் புளுகு!

உருண்டையான பூமியை சுருட்டமுடியுமா? அப்படியே சுருட்டிய பூமியை கடலுக்குள் ஒளிப்பதென்றால், கடல் என்ன அந்தரத்திலா இருக்கும்? பூமி என்பதே கடலும் நிலமும் சேர்ந்தது தானே?

ஒரு மனிதன் பன்றியாக முடியுமா? ஒரு மனிதனுக்கும், பூமிக்கும் குழந்தை பிறக்க முடியுமா?

முடியாது என்று சொல்லுகிறது, உங்களது பகுத்தறிவு. பகுத்தறிவை புளுகுமூட்டைகளால் மழுங்கடிக்கிறது, வேதமதம்!

புளுகுமூட்டைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் சதி!

narakasura

மகிஷாசுரன்

நரகாசுரனின் கொலைக்குப் பின்னே ஒரு மறைக்கப்பட்ட வரலாறும், திட்டமிட்டு பின்னப்பட்ட சதியும் ஒளிந்து இருக்கிறது.
நரகாசுரன் கதை வெறும் தசாவதாரக்கதை அல்ல. மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக இந்தியாவுக்கு ஆரியர்கள் வந்தபோது, இந்த மண்னின் மைந்தர்களான திராவிடர்கள், நாகர்கள் போன்ற பூர்வகுடிகளை வென்றடக்க முயன்றார்கள். சுரா என்கிற மதுவைக் குடித்த ஆரியர்களை சுரர்கள் எனவும், மது குடிக்காத மண்ணின் மைந்தர்களை அசுரர்கள் என்றும் அடையாளப்படுத்தியது, ஆரியம்.

ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மண்னின் மைந்தர்களை கொன்றும், போர்களில் வென்றும் ஆரிய வந்தேறிக் கூட்டம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. படுகொலை செய்யப்பட்டதன் குறியீட்டுப்பதிவே புராணங்களும், இதிகாசங்களும். மண்ணின் மைந்தர்களான இராவணன், மகிஷாசூரன், இரணியகசிபு, நரகாசுரன் போன்றோரை சதிகள் செய்து கொன்றது, ஆரியக்கும்பல். ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்தனியே வஞ்சகத்தால் ஆரியர்கள் தோற்கடித்ததைச் சொல்லுபவைதான் பத்து அவதாரக் கதைகளும்.

வென்றவர்கள் எழுதியதே வரலாறு!

ravana

ராவணன் கொலை

மண்ணின் மைந்தர்களது கொலையைக் கொண்டாடவும் செய்தது, அவ்வாறான கொண்டாட்டங்கள் தான் இராமலீலா, விஜயதசமி, தீபாவளி போன்றவை. இந்த கொண்டாட்டங்களை நியாயப்படுத்துவதற்காக, மண்ணின் மைந்தர்களை அயோக்கியர்களாக, கொடூரர்களாக, பெண்பித்தர்களாக, கொலைவெறியர்களாக சித்தரிக்கின்றன, புராணங்கள்.

கொல்லப்பட்டவர்களது உருவங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். கறுத்தும், பெருத்தும் கிடக்கின்ற உடல் முழுவதும் ரோமங்கள் மண்டிக் கிடக்கின்றன. தலையில் கொம்பு, அச்சமூட்டுகின்ற பற்கள்,சிவந்த கண்கள். இதுதான் அசுரர்களது உடலமைப்பு. இந்த உடலமைப்பு உழைக்கும் மக்களது உடலமைப்பு அல்லவா? கொன்றவர்களது உருவங்கள் எப்படி இருக்கின்றன? சிவந்த, மெல்லிய உடல்; நளினமான பேச்சு; நாகரிகத்தின் உறைவிடம்; கார்ப்பரேட்டுகள தோற்றமும் இப்படித்தானே இருக்கிறது?

நாகர்கள்

நாகர்கள்

தோற்றது நாம்; வென்றது ஆரியக்கும்பல் என்கிற உணர்வு உங்களுக்கு எழவில்லையா? ஒடுக்கப்பட்டவன் என்கிற கோபம் கொப்பளிக்கவில்லையா, உங்களுக்கு?

முப்பாட்டன் கொலையை கொண்டாட முடியுமா?

தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் படையெடுத்து, ஆட்சியை நிலைநாட்டியதற்கு முன்புவரை இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதில்லை. அதற்குப் பின்னர்கூட பார்ப்பனர்களும், சில உயர்சாதியினரும் தான் தீபாவளியைக் கொண்டாடினர். இதுவே காலப்போக்கில் அனைவருக்குமான கொண்டாட்டமாக்கப்பட்டு விட்டது. நம் குடும்பத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு அவரை அயோக்கியன் எனச் சித்தரித்துப் புராணம் எழுதி நம்மையே அதைக் கொண்டாட வைத்தது நயவஞ்சகமில்லையா?

ஏன் இந்த நயவஞ்சகம்?

ஆதிக்க வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறது, ஆரியம். பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஆபாசக்கதைகளைச் சொல்லி, அறிவியக்கத்தை மூடப்புராணம் தோற்கடிக்கிறது. இதைத் திட்டமிட்டுச் செய்யும் சிந்தனைக்குழாம்-பார்ப்பனியம்- அதன் கலாச்சாரம்தான் உயர்வானதென்றும், பிறரின் கலாச்சாரம் இழிவானதென்றும் நிறுவ முயல்கிறது. வந்தேறிகள், மண்ணின் மைந்தர்களை அடக்கியும், இழிவுபடுத்தியும் வருகின்ற அயோக்கியத்தனத்தை புனிதப்படுத்தி வருகிறது. இதைக் கொண்டாடுவதானது, ஆதிக்கத்தைக் கொண்டாடுவதாகும். ஒடுக்குமுறையைக் கொண்டாடுவதாகும். அவமானத்தைக் கொண்டாடுவதாகும்.

வேறு எதைக் கொண்டாடுவது?

கொண்டாட்டம் என்பதென்ன? நாம் மகிழ்ச்சியடைவதற்கும், பெருமைப்படுவதற்கும், உற்சாகமடைவதற்கும் எந்த நிகழ்வு நம்மைத் தூண்டுகிறதோ அதைத் தான் கொண்டாட்டம்! எந்த நிகழ்வு நம்மை இழிவுபடுத்திறதோ, எந்த நிகழ்வு நம்மை அடக்கியாள்கிறதோ, எந்த நிகழ்வு நாம் வெறுக்கத்தக்கதாக இருக்கிறதோ அதை அவமானம் என்கிறோம்.

8 மணிநேர வேலை உரிமைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளது நினைவாக மே தினத்தை போராட்ட தினமாக உயர்த்திப் பிடிக்கிறோம். ஏனெனில், அது நமது உரிமைக்குரலை பிரதிபலிக்கிறது.

puthiya-thozhilali-october-2016-featured

உழைக்க மட்டும் தெரிந்த அழுக்குச் சட்டைகள் என்று எள்ளி நகையாடப்பட்ட தொழிலாளர்களால் நாட்டை ஆளவும் முடியும், முதலாளித்துவம் உருவாக்கிய வறுமை, நோய், வேலையின்மை போன்றவற்றிலிருந்து மீளவும் முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சிநாள் ( 1917, நவம்பர் 7 ) நமக்கு கொண்டாட்ட தினம். ஏனெனில் ரசியப்புரட்சி உலகெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் ஒரு நம்பிக்கை ஒளி. நமது சொந்த பெருமிதம்.

  • நம்மை இழிவுபடுத்துகின்ற தீபாவளியை தீ-வாளி என தூக்கி எறிவோம்!
  • சுயமரியாதைமிக்கவர்கள் நாம் என்பதை நிலைநாட்டுவோம்!

இதுபற்றி மேலும் பேசுவோம்.. அழையுங்கள் 90031 98576 / 99403 84451

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
https://www.facebook.com/NDLFITEmployeesWing/
email id: combatlayoff@gmail.com
90031 98576 / 99403 84451

Permanent link to this article: http://new-democrats.com/ta/diwali-a-tale-of-suppression-of-indigenous-people/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு -  உறுப்பினர் கூட்டம்  தேதி: 21-7-2018, சனிக்கிழமை. நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை இடம் :...

பா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்

"இந்தப் போராட்டத்துக்கு வன்முறைக்கும் எஸ்.சி,எஸ்.டி சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தியது மட்டும் காரணம் இல்லை. இது வரை இல்லாத அளவில் தலித் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் கடும்...

Close