பண மதிப்பு நீக்கம் – ஓராண்டுக்குப் பின்

பொதுவாக பணப் புழக்கம் குறைவாக இருப்பதாகவும், உங்களுக்கு வரும் வருமானம் சுருங்கியிருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு காரணம் தேவையான அளவு பணத்தை வெளியிடாத மோடி அரசின் மூர்க்கம்தான்.
1. நோட்டுகள் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து விட்டன – நோட்டுகளை செல்லாததாக்கி கறுப்புப் பணத்தை பிடிக்கும் மோடியின் தந்திரம் புஸ்வாணமாகி விட்டது.
இப்போது பா.ஜ.க-வின் அரசியல் எதிரிகள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை நடவடிக்கைகள் என்ற நாடகம் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது. அதே நேரம், பா.ஜ.க-வின் கூட்டாளிகள் கருப்புப் பணத்தில் மிதக்கிறார்கள்.
உதாரணம் : அ.தி.மு.க-வின் சசிகலா கும்பல் மீது வருமான வரித்துறை தேடல் நடப்பது குறித்து ஊடகங்களில் பிரச்சாரம் நடக்கிறது. ஆனால், ஆர்.கே நகர் பண வினியோகம், பொதுத்தேர்தல் கன்டெய்னர் பணம், இன்னும் பல ஊழல்களின் சூத்திரதாரிகளாக இருந்த இருக்கும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி போன்றவர்கள் பா.ஜ.கவின் நிழலில் சுபிட்சமாக இருக்கிறார்கள்.
2. இப்போது பொருளாதாரத்தில் இருக்கும் நோட்டுகளின் மதிப்பு ரூ 15 லட்சம் கோடி. அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் நவம்பர் 2016-க்கு முந்தைய அளவான ரூ 17 லட்சம் கோடியை எட்டி விடும் – மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்துக்குள் பிடித்துத் தள்ளி விடும் சங்க பரிவாரத்தின் பயங்கரவாதமும் மூக்கடிக்க விழுந்து கிடக்கிறது.
ரொக்கப் பணத்தை பயன்படுத்தி பழக்கப்பட்ட மக்கள், மோடி அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நிதி நிறுவனங்கள் அவர்கள் டிஜிட்டல் பணத்துக்கு மாற வேண்டும் விரும்பினாலும் ரொக்கப் பணத்தில்தான் புழங்குவார்கள். அது இந்த 1 ஆண்டில் தெள்ளத் தெளிவாகியிருக்கிறது.

நோட்டுகள் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து விட்டன – நோட்டுகளை செல்லாததாக்கி கறுப்புப் பணத்தை பிடிக்கும் மோடியின் தந்திரம் புஸ்வாணமாகி விட்டது.
3. பொதுவாக பணப் புழக்கம் குறைவாக இருப்பதாகவும், உங்களுக்கு வரும் வருமானம் சுருங்கியிருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு காரணம் தேவையான அளவு பணத்தை வெளியிடாத மோடி அரசின் மூர்க்கம்தான்.
பொருளாதாரத்தில் தேவைப்படுவதை விட குறைந்த அளவு ரொக்கப் பணத்தை மட்டும் வெளியில் வைத்திருக்கும் அரசின் முடிவு, பொருளாதாரத்தை தொடர்ந்து தாக்கி வருகிறது – முடங்கிய வேண்டலுக்கும், முடங்கிய வளர்ச்சிக்கும் அதுவும் ஒரு காரணம்.