வெறியர்களாக இருக்க விரும்பும் படித்த மேட்டுக்குடி

ல்லை, இந்த வருடத்திற்கு சூட்டுவதற்கு புகழ் மாலைகள் எதுவும் இல்லைதான். முடிந்து போன இந்த ஆண்டுக்கு வைக்கத் தகுதியானது ஒரு கல்லறைக் கல் தான். ஜனவரியிலிருந்தே ஒரு வாக்கியம் 2016 ஆண்டு முழுவதும் பயணித்திருக்கிறது. உன்மையில் அது முழு வாக்கியம் கூட இல்லை. தனது 27வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு மாணவன் எழுதிய 570 வார்த்தைகளைக் கொண்ட தற்கொலைக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்ட “ஒரு மனிதனுடைய மதிப்பு அவனுடைய உடனடி அடையாளமாக குறுக்கப்பட்டிருக்கிறது” என்ற வாக்கியத் துண்டுதான் அது.

ரோகித் வெமுலா, கன்னையா குமார்

ரோகித் வெமுலா, கன்னையா குமார்

  • தெற்கு கரோலினாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், ஒரு ஜெனரல் முஸ்லிம் தீவிரவாதிகளை பன்றி ரத்தத்தில் தோய்க்கப்பட்ட குண்டுகளால் சுட்டுக் கொன்றதைப் பற்றி வர்ணித்த போது அந்த வாக்கியம் சாட்சியாக நின்றது.
  • லண்டனில் பிரெக்சிட் ஆதரவாளர்களின் பேரணி ஒன்றுடன் அந்த வாக்கியமும் நடந்து சென்றது.
  • குஜராத்தின் ஊனாவில் 7 தலித் இளைஞர்கள் பசுவைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு தாக்கப்பட்ட போது அந்த வாக்கியம் தேம்பி அழுதது.
  • தைமூர் என்று பெயரிடப்பட்ட பச்சிளங் குழந்தையின் தொட்டிலை பிடித்து அது உலுக்கியது.

2016-ல் வேற்றுமை பாராட்டல் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் வெற்றி வாகை சூடியதென்றால் இந்தியாவில் அது புதிய இயல்பு நிலையாக ஆகியிருக்கிறது. சகிப்பின்மைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிப்பதற்கு பதிலாக, சகிப்பின்மை பற்றிய ஒத்த கருத்து என்று உருவானது. திடீரென, வெற்றியின் மமதையிலான தன்னம்பிக்கையையும், கெட்டிதட்டிய உறுதியையும், பயமுறுத்துகின்ற நிச்சய தொனியையும் அது பெற்றுக் கொண்டது.

டொனால்ட் டிரம்ப் - நரேந்திர மோடி

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி

எழுத்தாளர் ஹில்லாரி மேன்ட்டல் நியூயார்க்கர் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் ட்ரம்ப்பின் வெற்றியைப் பற்றிய செய்தியை கேட்ட தருணத்தை நினைவு கூர்கிறார். அட்லான்டிக் பெருங்கடலின் மீது விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்தச் செய்தியை அறிவித்த விமான ஊழியர், “அவருக்கு யார்தான் வாக்களித்தார்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிராக உள்ளது” என்று சொன்னதாகக் கூறினார்.

“நமக்குத் தெரிந்த யாரும் வாக்களிக்கவில்லை, அது தான் பிரச்சனையே. பல பத்தாண்டுகளாக நல்லவர்கள் எல்லோரும் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த பொறாமை, கோபம், வெறி போன்றவற்றை மறைத்துக்கொண்டு தாங்கள் பங்கேற்ற எல்லா தளங்களிலும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.” என்று அவர் எழுதினார்.

இது மேற்குலகம் உண்மையை உணர்ந்து கொண்டதற்கு ஒரு சான்று. இந்தியாவில் நடப்பதோ வேறு விதமான ஒன்று.

  • நாம் பேசிக்கொண்டிருக்கும் நல்லவர்கள், பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென சகிப்பற்றவர்களாக மாறிப் போனார்கள்.
  • திடீரென சாதிவெறியனாகவோ மதவெறியனாகவோ மாறியது டிவிட்டரில் நம்மை பின்தொடரும் யாரோ அறிமுகமில்லாத நபரோ இதுவரை சந்தித்திராத முகநூல் நண்பரோ அல்ல.
  • தங்கள் முகமூடிகளை விலக்கிக்கொண்டது நமது நண்பர்களும் உறவினர்களும் தான். டீக்கடைகளிலும், அலுவலகங்களிலும், குடும்ப வாட்ஸ்-அப் குழுவிலும், முகநூல் சுவற்றிலும், பிளவு மேலும் துலக்கமாகவும், அசிங்கமாகவும், சிக்கலாகவும் மாறியது.

அமெரிக்காவில், தாராளவாதம் பேசும் மேட்டுக்குடிக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையேயான வர்க்கப் பிளவைப் பற்றி கட்டுக்கட்டாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இவ்விசயம் ஒரு தலைமுறை தோல்வியாக உள்ளது. தாராளவாதத்தின் குழந்தைகளான படித்த மேட்டுக்குடியினரில் பெரும் பகுதியினர் அப்பட்டமான வெறியர்களாக இருக்கின்றனர்.

modi-bhakts

தன்னகங்காரத்தோடு செருமிக்கொள்ளும் சகிப்பற்ற வெறியர்கள் அதிகாரத்தின் முன் சாஷ்டாங்கமாக கீழ்ப்படிகிறார்கள்.

இது போன்ற வெளிப்படையான ஆணாதிக்கத்தையும், சாதிவெறியையும், மதவெறியையும் கசப்பான தேசவெறியையும் நாம் எப்படி எதிர்கொள்வது? என்றும் தினந்தோறும் காலையில் வாட்ஸ்-அப் அறிவிப்பில் ஆஜராகும் ஓரவஞ்சனைக்கு என்ன எதிர்வினையாற்றுவது? என்றும் இந்திய தாராளவாதி மலைத்துப் போய் நிற்கிறான். இத்தகைய விவாதங்களில் அமைதியாக இருந்து விடுவதோ, உள்ளொடுங்கி ஒதுங்கி விடுவதோ, அமைதியாக தலையசைத்துக் கொண்டிருப்பதோ போதுமான எதிர்வினையாக இருக்க முடியாது.

2016-ல் உரையாடலின் வரம்புகளை புரிந்து கொண்டோம். இந்த ஆண்டில் கருத்துப் பரிமாற்றம் பெரும் நெருக்கடியை சந்தித்தது. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதை எளிதாக்கிய தகவல்தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், நாம் முதன்முறையாக இப்போதுதான் ஊமையாக்கப் பட்டிருக்கிறோம்.

தன்னகங்காரத்தோடு செருமிக்கொள்ளும் சகிப்பற்ற வெறியர்கள் அதிகாரத்தின் முன் சாஷ்டாங்கமாக கீழ்ப்படிகிறார்கள். பணம் செல்லாததாக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப் பட்டபோது கூட, அவர்கள் கடமை உணர்வோடு வரிசையில் காத்திருந்தார்கள். தங்கல் திரைப்படத்தில் கதையின் ஊடாக வரும் தேசிய கீதத்திற்குக் கூட (படம் ஆரம்பிப்பதற்கு முன்போ, முடிந்த பிறகோ ஒலிப்பது அல்ல) பார்வையாளர்கள் எழுந்து நின்றார்கள்.

இந்த வருடம் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரைப் போல இருந்தது. அதாவது எதிர்தரப்பிலும் நாம் கவனமாக கட்டி எழுப்பியிருக்கும் சுவர்களுக்கு அப்பாலும் இருப்பவர்களிடம் கருத்துககளை பரிமாறிக் கொள்ளத் தெரியாமல் போன ஆண்டாக இருந்தது.

மோடிக்கு முன் வீராப்பு பேச சஹாரா டைரியின் பழைய தாள்களை மட்டுமே வைத்திருந்த ராகுல் காந்தியைப் போல, பின்-உண்மைகளை (post-truths) எதிர்கொள்ள தாராளவாதிகளிடம் வலுவான தரவுகளில்லை. அதற்காக, பின்-உண்மைகள் தரவுகளைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதாகவும் நான் சொல்ல வரவில்லை.

எனவே, வெறியர்களை எதிர்கொள்வதற்கு மறுக்கமுடியாத தரவுகளையும் இணங்கவைக்கக் கூடிய சொல் வன்மையையும் பெற்ற புதிய மொழியை இதுவரை மெத்தனமாக இருந்து விட்ட தாராளவாதிகள் உருவாக்க வேண்டும்.

தாராளவாதியை வரையறுப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தாராளவாதி அல்லாதவரை அடையாளம் காண்பது எளிது தான். நாம் 2017-ம் ஆண்டில் காலடி வைக்கும் தருணத்தில், வெறியர்கள் அணிவகுத்து முன்னேறுகிறார்கள்.

ஆங்கில மூலம் :

மொழிபெயர்த்தவர் : நேசன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/educated-elite-chooses-to-be-illiberal/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
டி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை!

அமருவதற்கு நாற்காலி, கணினி கிடைப்பதற்கு சிலமணி நேரம் முன்பே வேலைக்கு வரவேண்டும் என்பார்கள். அவ்வாறு வந்தாலும் நடுவில் வெளியே சென்று வரும்போது அதை இன்னொருவர் எடுத்துக்கொள்வார். அவருடன்...

கீழடி அகழ்வாராய்ச்சியை முடக்கும் பார்ப்பன மேலாதிக்கம்

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அதே வேளையில் தமிழர்களின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் கீழடியின் கண்டுபிடிப்புகளை பாதுகாக்கவும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் தமிழ் சமூகம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Close