கல்வியா கரன்சி விளையாட்டா?

ர்நாடகா வைதேஹி மெடிக்கல் காலேஜ் அறங்காவலர்களில் ஒருவரது வீட்டிலிருந்து ரூ 43 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ 500, ரூ 1000 நோட்டு பண்டில்களாக வைக்கப்பட்டிருந்த பணம், மருத்துவ படிப்பு உட்பட மாணவர் சேர்க்கைக்காக வசூலித்த பணத்தில் ஒரு பகுதி.

வைதேஹி குழுமத்தை உருவாக்கியவர் சாராய வியாபாரி டி.கே ஆதிகேசவலு. இந்த குழுமம் மருத்துவ, பல் மருத்துவ, துணை மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகளை நடத்துவதோடு ஒரு இலவச மருத்துவமனையும் நடத்துகிறது. இந்தக் குழுமம் லேக்சைட் ஹாஸ்பிடல்சுடனும், பல மருத்துவ பரிசோதனை நிலையங்களுடனும் கூட்டு அமைத்திருப்பதோடு, பீடாரிலும், மேற்கு வங்கத்திலும் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் முதலீடு செய்துள்ளது. இந்தக் குழுமத்தின் தற்போதைய உரிமையாளர் ஆதிகேசவலுவின் மனைவி.

“இதுவரை யாரும் கல்லூரியில் சேருவதற்காக நன்கொடை கொடுத்ததாக புகார் கொடுக்கவில்லை ஆதலால், இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப் போவதில்லை.” என்கிறது மாநில அரசு.

vydehi-medical-college-management-quota-2016-admission_4சென்ற ஆண்டு பாண்டிச்சேரியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ 82 கோடிதான் நாட்டிலேயே அதிக அளவு பணம் கைப்பற்றப்பட்டதாகும். டிசம்பர் 2015-ல் ராய்ச்சூரில் உள்ள நவோதயா கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்து ரூ 19.5 கோடி கைப்பற்றப்பட்டது.

சென்ற மாதம் எம்.எஸ்.ராமையா குழுமத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கையில் ரூ 275 கோடிக்கு கணக்கில் காட்டாத வருமானம் இருப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறது நிர்வாகம். ராமையா குழுமம் கல்வி, மருத்துவம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் தொழில் செய்கிறது. ஒரே குடும்பத்துக்கு சொந்தமான இந்த குழுமத்தின் இயக்குனராக மாநில திட்ட மற்றும் புள்ளிவிபரத் துறை அமைச்சர் எம்.ஆர்.சீதாராம் உள்ளார்.

2013-ல் 5 மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு கற்பிக்கும் மருத்துவமனையிலும் நடத்தப்பட்ட தேடுதலில் ரூ 28.3 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ 174.85 கோடி என்று மதிப்பிடப்பட்டது.

கல்வித் துறையில் முன்னாள் சாராய வியாபாரிகள், இன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட தனியார் லாப நிறுவனங்கள் செயல்படுவது பல ஆயிரம் கோடி கறுப்புப் பணம் புரள்வதற்கு வழி வகுப்பதோடு, கல்வியின் தரத்தை சீரழித்து, மக்களின் சேமிப்புகளையும் கொள்ளை அடிக்கிறது. கல்வித் துறையில் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதுதான் இதற்குத் தீர்வு. நீட் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் எதையும் சரி செய்யப் போவதில்லை. இந்த ஆண்டு, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கூடுதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஏதாவது நுட்ப காரணங்களைக் காட்டி நிராகரித்து விட்டு, பணம் கொடுத்த மாணவர்களை சேர்ப்பது என்ற உத்தியை தனியார் மருத்துவக் கல்லூரிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன.

செய்தி ஆதாரம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/education-becomes-currency-play-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
யூனியன் உறுப்பினர் சந்திப்பு – “ஆணவக்” கொலைகள் பற்றிய விவாதம்

நிகழ்ச்சி நிரல் : சங்க நடவடிக்கைகள் - அக்டோபர், நவம்பர் அப்டேட்கள் ஐ.டி துறையில் பணி நீக்கம் / சட்ட விரோத ஆட்குறைப்பு - அடுத்த கட்ட...

காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி

காலனிய அரசுகளின் உறுப்புகளாக விளங்கிய அனைத்து நிறுவனங்கள், அமைப்புகள், அடக்குமுறைக் கருவிகள் அவற்றின் கட்டுக்கோப்பு கலையாமல் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் நேரடி ஆட்சியிலிருந்து அதன் அடிவருடிகளிடம் மாற்றித் தரப்பட்டது.

Close