வதைக்கப்படும் விவசாயிகள் வாழ்வும், மோடியின் வளர்ச்சியும் – ஐ.டி ஊழியரின் அனுபவம்

னக்கு வயது 34 ஆகிறது, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை கோடை விடுமுறை நாட்களில் வடக்கு தஞ்சை மாவட்டப் பகுதியில் உள்ள எனது அம்மா பிறந்த ஊருக்கு செல்வது வழக்கம், காவிரி ஆற்றுப் பாசனம் உள்ள மிகவும் செழிப்பான பகுதி அது.

அந்தப் பகுதி கிராமங்களில் உள்ள எனது வயதை ஒத்தவர்கள் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்போடு தாமாகவே பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விடுவார்கள். சில பேர்தான் கல்லூரி வரை சென்று படிப்பார்கள், அவர்களும் படிப்பு முடிந்ததும் எந்த ஒரு அரசு அல்லது தனியார் வேலைக்கும் செல்ல மாட்டார்கள்.

ஏனென்று பார்த்தால் படித்து முடித்து வேலைக்கு செல்வதை விட, ஒரு விவசாயியாக இருப்பதற்கே விரும்பினார்கள். அந்த அளவுக்கு விவசாயம் லாபம் தரக்கூடியதாகவும், தன்னிறைவு அடைந்த தொழிலாகவும் இருந்தது.

ஆனால் இன்று விவசாயம் எவ்வளவு பரிதாபகரமான தொழிலாக உள்ளது என்று உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை, எனது வயதை ஒத்த விவசாய நண்பர்கள் முக்கால் வாசி பேர் திருப்பூர், சென்னை, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்று விட்டார்கள்.

கரைபுரண்டோடிய காவிரி கை விரித்து விட்டது, 12-20 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தாலே தண்ணீர் ஊற்று சிறப்பாக இருக்கும். ஆனால் இன்று 300 – 400 அடி வரை ‘Bore well’ அமைத்தால் தான் தண்ணீர் வருகிறது, அதிலும் கோடையில் நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விடுவதால் ‘Pump set’ ல் தண்ணீர் வராது, அதனால் கோடை விவசாயம் ‘கோவிந்தா’ தான்.

மேலும் 500 மற்றும் 1000 செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டப்பின், கைத்தறி நெசவு கூலி தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கால்வாசி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் இப்பொழுது நகரங்களில் அடிமட்ட கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்வு அதிகரிக்கும் பட்சத்தில், நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு குறைந்த கூலிக்கு (இரவுப் பணி செக்யூரிட்டி, கட்டுமான தொழிலுக்கு தேவையான சித்தாள், கொத்தனார், துணித்துறை சார்ந்த வேலைகளுக்கு) ஆட்கள் தேவைக்கு அதிகமாகவே கிடைப்பதால், இங்குள்ள தொழில் நிறுவனங்கள் நன்றாக லாபமீட்டி நல்லதொரு வளர்ச்சி அடைய முடியும்.

கிராமங்களின் இப்போதைய ‘பொருளாதாரம்’ என்பது, மக்கள் நகரங்களை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடிவருவதும், தனியார் நிறுவன முதலாளிகளால் குறைந்த கூலிக்கு சுரண்டப்பட்டு, முதலாளிகளின் வளர்ச்சிக்கு உதவுவதும் என்பதாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பதாக மோடி அரசு சொல்லும் போது யாருடைய வளர்சசியை சொல்கிறது என்று புரிகிறதா?

-ராம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-distress-and-rss-concern-an-experience/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்

இன்று முதலாளித்துவ கட்டமைப்புகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த கொடூரப்பிடியிலிருந்து மக்களை விடுவித்து உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவ நமக்கு...

அதிகரிக்கும் கொரோனா மரணங்களும்: மத்திய-மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையும்!

                                       ...

Close