என்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – 3

தொண்டு நிறுவனங்கள் பிரச்சனையை பிரித்துப் பார்க்கும் போக்கு

இப்போது இவர்களை வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வர உதவி செய்த தொண்டு நிறுவனங்கள் பற்றி பார்க்கலாம். இவங்க பாதிக்கப்பட்ட நிறைய பேரை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர்றாங்க. கொண்டு வந்து உதவி செய்றாங்க. குடும்பத்துக்கு ஆதரவாக இருக்காங்க. ஒரு வேளை ஒருவர் வெளிநாட்டில் இறந்து போனாலும் உடலை கொண்டு வர உதவி பன்றாங்க. இந்த தொண்டு நிறுவனங்கள் செய்வதை கண்டிப்பா பாராட்டணும்.

ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலுமே தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு மாற்றாக இருக்க முடியாது. இது ஒரு எல்லாருக்குமே தெரிந்த ஒன்று.

ஒரு விசயத்த எடுத்தால் அந்த விசயத்துக்கு மூலமா இருக்கிற ஒரு காரணத்தை போய் தீர்க்கிறதுதான் நோய்க்கு மருந்தா இருக்கும். இப்போ எனக்கு அடி பட்டிருச்சு. அடிக்கு மருந்து மட்டும் போட்டிட்டிருந்தா, அடி வேற எங்கயும் பரவாம இருக்க மருந்து மட்டும் போட்டா போதாது. அந்த அடி ஏன் பட்டுச்சு, இனிமே மத்தவங்களுக்கு படாம இருக்கனும்.

அதுக்கான முயற்சிகளில் இந்தத் தொண்டு நிறுவனங்கள் எப்போதுமே இறங்கிறதே கிடையாது. பயமா அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு வரும் பணமே இந்த மாதிரி குற்றவாளிங்க கிட்ட இருந்து வருதா என்ற ஒரு கேள்வியை நான் இங்க எழுப்புகிறேன். இது இரண்டுமே காரணமாக இருக்கலாம். சில தொண்டு நிறுவனங்கள் பயத்தின் காரணமாக விலகி நிற்கலாம். பெரிய தொண்டு நிறுவனங்கள் அவங்களுக்கு வர வேண்டிய நிதியே அங்க இருந்து வர்ரதுனால வாங்கிகிட்டு பிரச்சனையை பெரிசாக்காம நான்கு பேருக்கு தெரியாம முடிக்கிறதா இருக்கலாம்.

உதாரணமா வெளிநாட்டில் இருந்து மீட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் இது மாதிரி ஒருத்தர் அங்க மாட்டிக்கிட்டார்ன்னு தெரிஞ்சா அவங்க குடும்பத்துக்கு ஆதரவு, அவரை கொண்டு வர்ரதுக்கான ஆவணங்கள், தகவல் தொடர்பு இது மாதிரி நிறைய விசயங்கள்ள உதவி பண்றாங்க. உதவி செய்து கொண்டு வர்ராங்க. ஆனா கொண்டு வந்த பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சட்ட உதவி, “இது மாதிரி செய்திருக்கீங்க, உங்களுடைய தவறு என்ன? ஏஜென்சியோட தவறு என்ன? ஏஜென்சியை தண்டிக்க என்ன செய்யணும், உங்களுடைய சட்ட உதவிக்கு அடுத்த தேவைக்கு என்ன செய்யணும்.” என்ற உதவியை கொடுக்கிறது கிடையாது.
வந்தவுடனே ஒரு பேச்சு வார்த்தை, புள்ளி விபரம் கணக்கு போட்டுக் கொள்கிறார்கள். போலீசுக்கு தகவல் சொல்றாங்க. அதுக்கு அப்பறம் அதைத் தொடர்ந்து கவனித்து “இது மாதிரி குற்றத்திற்கு என்ன ஆச்சு அது என்ன ஆச்சு? இதை பார்த்தீங்களா? அதை பார்த்தீங்களா? என்கிற ஆலோசனையும். சட்ட உதவியும் கொடுக்கிறதும் கிடையாது. (அதை மட்டும் செய்வதற்கு இன்னொரு தொண்டு நிறுவனம் இருக்கலாம், அவர்கள் வெளிநாட்டில் இருந்து மீட்பது பற்றி கவலைப்படுவது கிடையாது)

அவங்க கொண்டு வந்து அவங்க கொண்டு வந்து அவங்க வீட்ல சேர்த்து ஒன்று இரண்டு நாட்களில் அவங்க கடமையை முடிச்சுக்கிறாங்க. அதுக்கப்பறம் அடுத்த கேஸ் பார்க்க போயிறாங்க. இது சரியா என்பது  கேள்வி.

ஒரு புற்றுநோயாளி என்றால் ஒரு நாள் வயிற்று வலி வரும். வயித்து வலிக்கு மருந்து ஒரு பெயின் கில்லர் மட்டும் கொடுத்தா போதுமா? அந்த புற்றுநோயாளியை குணப்படுத்த வேண்டாமா? அவருக்கு தீர்வு கிடைக்க வேண்டாமா?

இந்த வகையில வந்து தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது கிடையாது. அது ஏன் என்பதற்கு மேலே இரண்டு காரணங்களைச் சொன்னேன்.

போலீசு யாருக்கு?

இப்போது திரும்பிகொண்டு வரப்பட்ட 6 பேர் வந்த அன்றுதான் நம்ம மாண்புமிகு துணை முதலமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சரை பார்க்கிறதுக்காக ஏர்போர்ட் போனார். இந்த 6 பேரை பார்க்கிறதுக்காக வரும் போது போலீசுகிட்ட ஸ்பெசல் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தோம் வரேன்னு சொல்லியிருந்தாங்க ஆனா கடைசியில வரவே இல்லை. “தகவலை கேட்டு வாட்ஸ் ஆப்ல (whatsapp) அனுப்பிரூங்க நாங்க பார்த்துக்கிறோம்” அப்பிடீன்னு சொல்லி விலகி போயிட்டாங்க.

இங்க எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுது? பாதிக்கப்பட்ட அதாவது ஒரு தவறு ஒரு குற்றம் அந்த குற்றத்தால பாதிக்கப்பட்ட ஒரு 6 பேர் நாடு கடந்து வர்ராங்க. அவங்களுக்கு கவனம் குடுக்கனுமா இல்ல இங்க இருக்கிற ஒரு அமைச்சர் ஒரு சொந்த விசயத்துக்காக டெல்லி போறார். எதுக்கு கவனம் குடுக்கனும். இங்க போலீசுக்கு வந்து அந்த முன்னுரிமை தெரியலையா இல்ல அந்த முக்கியத்துவம் தெரியலையான்னு தெரியலை.

ஒருத்தன் இங்க வந்து ஏமாந்து போயி குடும்பமே நிர்கதியா நிற்கும் நிலையில் வந்துட்டிருக்கான் இவனை வந்து கவனிக்க வேண்டியது தான் போலீசு துறை. பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியது தான் முதல் கடமை, இரண்டாவது தான் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு. ஆனா இங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பதோ இல்லை அவர்களுக்கு ஆலோசனை சொல்லி உதவி செய்வதை விட அரசாங்கத்துக்கு பாதுகாப்பு குடுக்கிறதுக்குத்தான் போலீசுக்கு முதல் கடமையா இருக்கு, இந்த விசயத்தில. கடைசி வரை போலீஸ் வரவேயில்லை.

ஆசைக்கு யார் வெளிநாடு போகிறார்கள்?

கேசு எடுக்கும் போதுபோலீசு சொன்னாங்க இல்லையா , “உங்க ஆசைக்கு நீங்க போய் மாட்டிகிட்டீங்க”ன்னு.

இப்போ நீரவ் மோடியை எடுத்துப்போம், மல்லையாவ எடுத்துப்போம். இவங்க எல்லாம் கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு அங்க போய் உட்கார்ந்திருக்காங்க. அவங்க பேராசையால் பெரும் தவறுகள் இழைத்து விட்டு நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள்.

ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடும்பத்தை காப்பாத்துறதுக்காக கையில் இருக்கும் பணத்தை குடுத்துட்டு போறாங்க. அங்க சம்பாதிக்கவும் முடியாம, உயிரை காப்பாத்திக்கிறதே பெரிய பிரச்சனையா வந்திருக்காங்க. இவங்களை போய் ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்வதுதான் போலீசின் இயல்பு.

சமீபத்துல கார்த்திக் ராஜ் அப்பிடின்னு திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த ஒருத்தர்  மலேசியால இறந்துட்டார். அவரோட பாஸ்போர்ட்-ன் கடைசி ஒரு பக்கம் மட்டும் வச்சு மருத்துவமனை வாசல்ல போட்டுட்டு போயிட்டாங். அதுக்கப்பறம் உலக மனித சங்கத்தில அவரை எடுத்து அவரோட குடும்பத்தை கண்டு பிடிச்சு, தகவல் போய் சேர்வதற்குள் 2 நாள் ஆகி விட்டது. அதற்குள் அவருக்கு ஈமச் சடங்கு எல்லாம் முடிச்சிட்டாங்க.

கடமை தவறும் அரசு

இது மாதிரி குற்றங்கள் தொடர்ந்து நடந்திட்டுதான் இருக்கு. அரசு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு உதவியோ இல்ல அடுத்து அவங்களுக்கான ஒரு ஆலோசனை என்ன செய்யலாம் என்ற மாதிரி திட்டமிட வேண்டும்.

இன்னோன்னு அரசு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டும் போது உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது.

என் கைய கால உடைச்சுட்டு “உனக்கு பிரியாணி பாக்கெட் குடுத்திட்டேன், கை கால் இழந்ததுக்காக உனக்கு ஒரு லட்சம் குடுத்திட்டேன்.” என்று சொன்னால் என்ன பொருள். “கை கால் உடைஞ்சதுக்கப்பறம் நான் ஒரு லட்சம் வச்சு என்ன பன்ன முடியும். வச்சு பாத்திட்டிருக்க முடியும் ஒன்னும் செய்ய முடியாது.”

அதுமாதிரி திட்டங்கள் வேலை இல்லாத இளைஞர்களை உருவாக்குவதாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று இது மாதிரி போய் பணத்தை குடுத்து ஏமாறுவார்கள், இல்லை பணத்தை ஏமாத்துற மோசடிகாரனாக மாறுவான்.

ஏன்னா அரசாங்கம் வேலை வாய்ப்பு உருவாக்கும் வாய்ப்புகளை பிரித்து பரவலாக்கவில்லை. வளர்ச்சியை பரவலாக்கினா எல்லா ஊர்லயும் வேலை வாய்ப்புகள் இருக்கும். இப்போது வேலை வாய்ப்புகள் பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன.

– சரவணன்

(தொடரும்)

Series Navigation<< வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா! – நிலம், விவசாயம், வேலை வாய்ப்புவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-3/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மெரினாவில் காவிகளின் கண்களுக்கு தெரிந்த சமூக விரோத செயல்கள் – கார்ட்டூன்

மெரினாவில் ஒலித்த தமிழகத்தின் குரல் - விவசாயத்தை பாதுகாப்போம், டாஸ்மாக்கை மூடுவோம், கல்வி உரிமையை மீட்போம் - இன்னும் பல.

உலகத் தொழிலாளர் போராட்டங்கள் – 2019 – செப்டம்பர் 8 முதல் 14 வரை

தென் ஆப்பிரிக்காவில்  சுரங்கத் தொழிற்சங்கத்தின் சார்பில்  சுரங்க தொழிற்நிறுவனங்களுக்கு எதிராக நடைப்பெற்ற  போராட்டம் ஆட்குறைப்புக்கெதிராக பங்களாதேசில் நடைப்பெற்ற தொழிலாளர்களின் போராட்டம் பெருவில் தாமிர சுரங்கத்திற்கு எதிராக விவசாய,...

Close