விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – சமூக ரீதியில் திட்டமிட்ட தீர்வு வேண்டும்

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – 5 (இறுதி பகுதி)

மோடி வெளிநாடு போனாரு, அங்க போனாருன்னு அதுக்கான விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவு பண்ற இந்த அரசு ஒவ்வொரு மாவட்டத்திலையும் ஒவ்வொரு ஊர்லயும் திட்டங்கள் வகுத்து “இந்த மாதிரி திட்டம் நடக்குது, போய் சேருங்க”ன்னு கொண்டு வரலாமே, ஏன் செய்வதில்லை. தகவல் அறியும் மனு போட்டா “இது மாதிரி நாங்க skill development program நடத்திருக்கோம்”னு கணக்கு காட்டுவீங்களே தவிர அது பலனுள்ளதாக இல்லேன்றது தான் நிலைமை . அது பலனுள்ளதாக இருந்தா அது நிறைய பேருக்கு இதை கிடைத்திருக்கும்.

ஜின்டால் ஆலை வேணும், ஸ்டெரலைட் ஆலை வேணும் என்று ஒரு எதிர் தரப்பு வாதம் வரலாம். வேலை வய்ப்புன்றது தனியார் நிறுவனங்கள்ல வரணும்ன்னு இல்லை. அரசு திட்டமிட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்படி சரியான நிறுவனங்களை சரியான இடத்தில் வைச்சு அதுக்கான சரியான கவனமும், விழிப்புணர்வும், ஊக்கமும் கொடுத்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

தமிழ்நாட்டுல எத்தனை ஐ.டி நிறுவனங்கள் இருக்கு? எல்லா ஐ.டி நிறுவனத்திலும் தமிழ்நாட்டுல படிச்ச மாணவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலங்களிலிருந்தும் இருக்காங்க. நாடு முழுதும் சலிச்சு தங்களுக்கு ஏத்தபடி ஆள் எடுத்து கொண்டு வர்றாங்க. ஏன் உள்ளூர் இளைஞர்கள் நிறைய பேரை கேம்பஸ் இன்டர்வியூல எடுக்கிறதில்லை என்று கேட்டால் ஸ்கில் செட் ன்ற காரணத்தை கொண்டு வர்ராங்க. இந்த ஸ்கில் செட் டெவலப்மென்ட் புரோகிராம் என்னன்னு இருட்டடிப்பாகத்தான் இருக்கு.

இன்னோன்னு இந்த மைண்டு செட். ஒரு தரப்பு மக்கள் ஒரு தரப்பு படிப்பு படிச்சவங்க மட்டும் தான் உள்ள வரணும்ன்ற மாதிரியான மனநிலை இது. உதாரணமாக, சி.பி.எஸ்.இ ஆகட்டும், நீட் ஆகட்டும் இது மாதிரியான மனநிலையோட வெளிப்பாடு. இதை அரசு மாத்திக்கிற மாதிரி தெரியல. அரசு அதே பாதையில தான் போயிட்டிருக்கு. அதே பாதையில போயிட்டிருக்கும் போது நோய் எப்படி குறையும்ன்றது தெரியலை.

எல்லா ஐ.டி நிறுவனத்திலும் தமிழ்நாட்டுல படிச்ச மாணவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலங்களிலிருந்தும் இருக்காங்க. நாடு முழுதும் சலிச்சு தங்களுக்கு ஏத்தபடி ஆள் எடுத்து கொண்டு வர்றாங்க.

ஒரு வேளை சரியான நிறுவனங்கள் சரியான விதிமுறைகளின் படி வந்தாங்கன்னா எல்லாரும் வரவேற்கத் தான் செய்வாங்க. விதிமுறைகளை வரையறுப்பதும் அதை பின்பற்றுவதும் அதுக்கான கல்வியை குடுக்கிறது தான் சரியா இருக்கும்.

இங்க அரசு வேலையை பொறுத்தவரை லஞ்சம், தனியார் வேலையை பொறுத்த வரைக்கும் கார்ப்பரேட் அஜெண்டா இருக்கிறது. அதாவது ஊழல் இருக்கிறது, சாதிய அஜெண்டா இருக்கிறது. என்ன சாதி, என்ன மதம், எந்த மாநிலம், எங்கு படித்தீர்கள் என்று ஒதுக்கி வைக்கும் அஜெண்டா உள்ளது.

திருச்சி நகரில் சில நிறுவனங்கள கொண்டு வரலாம். அதை சுத்தி உள்ள கிராமங்களுக்கு அதுக்கான வாய்ப்பு கிடைக்கும், அங்க போவாங்க. இல்ல வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களை செய்யலாம். இந்த மாதிரி விசயங்கள் கேட்டா எல்லாமே இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா, நடைமுறையில் எதுவும் இல்லை.

மன் கீ பாத்ன்னு மோடி வந்து பேசுறாரு, எடப்பாடி பழனிச்சாமி எல்லா இடத்திலையும் போயி பேசுறாங்க. அதுக்கு பதிலா வேலைவாய்ப்புகளை உருவாக்க முறையான திட்டங்கள் தீட்டி, அதை அமல்படுத்தி அதை கொண்டு சேர்க்கணும். அரசின் செயல் திட்டங்கள்ன்னு சொல்லிட்டு ஒவ்வொரு தியேட்டர்லயும் படம் போடுறத விட இது மாதிரி வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும்படி திட்டம் போட்டு அது எங்க எங்க இருக்கு அதுக்கான பயிற்சி திட்டம்  என்ன இருக்கு அப்பிடின்றத ஒரு தியேட்டர்ல ஒரு 2 நிமிட படமா காண்பிக்கலாம். இதை பார்க்கிற எல்லாரும் பார்த்து பயனடைவாங்க. இதெல்லாம் இல்லாமதான் வெளிநாடுகளுக்கு போய் ஏமாறுராங்க.

இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.

இன்னோன்னு பொருளாதார நெருக்கடி. ராணுவ வீரர் ஒருத்தர் பென்சன் வாங்குறாரு, இது மாதிரி ஏன் விவசாயத்தை பின்புலமா கொண்டவங்களுக்கு அரசு ஓய்வூதியம்  மாதிரியான முறையை கொடுத்தீங்கன்னா அவங்க வாழ்க்கையை மாசம் மாசம் ஓட்டுறது ஒரு பெரிய பிரச்சனையா இருக்காது. நெருக்கடியில் விழ மாட்டாங்க. வாழ்நாள் முழுதும் உழைச்ச விவசாயிகளும், தொழிலாளிகளும் இந்த மாதிரி பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் போது தான் தப்பு நடக்குது.

இது சாதாரண பிரச்சனை கிடையாது. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?

8 வழி சாலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிலத்தை  இழக்க போறாங்க. அரசு குடுக்கிற எல்லா பணமுமே திரும்பி அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போக போகுது. அரசியல் கட்சி பின்புலம் இருக்கிற ஆளுங்க தான் இது மாதிரி குற்றங்களை துணிந்து செய்றாங்க. அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போலீஸ் சப்போர்ட்டும் இருக்கு. மத்தபடி அவங்களை அடக்கி ஆளுற அதிகாரமும் அந்த திமிரும் இருக்கு.

தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவங்களை கொண்டு வர்றதோட அவங்க வேலையை முடிச்சிக்கிறாங்க. அதுக்கப்பறம் மூல காரணத்தை எதிர்த்து எதுவும் செய்றதில்ல. இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.

– சரவணன்

(முடிந்தது)

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தலைவர் சியாம் சுந்தர் எழுதிய “ஐ.டி ஊழியர்கள் வாழ்க்கை – ஜாலியா, பிரச்சனைகளா?” என்ற நூலை வாங்கி படிக்கவும்.

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Series Navigation<< விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-5/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வாஞ்சிநாதனை விடுதலை செய்

சாமானிய ஒரு நபர் தனது தரப்பு நியாயத்தை பெறுவதற்கு பை நிறைய பணம் வைத்திருந்தால் சாத்தியம் என்ற சூழலில், மக்களுக்காக அக்கறையுடன் இயங்கும் இதுபோன்ற வழக்கறிஞர்களைத்தான் தற்போது...

செலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்

பங்குச் சந்தையில் பணத்தை பன்மடங்காக்கும் வித்தை, அதில் அமெரிக்காவின் வாரன் பஃபெட், மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்து கொண்டிருக்கும் மாயாஜாலம் இவற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு முன்பு...

Close