விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை – மக்கள் அதிகாரம் தர்ணா!

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி….

காவிரியை தடுத்து மோடியும் ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக – ரெட்டி – ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்.

இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

 • தமிழக விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்.
 • நெற்பயிர் ஏக்கருக்கு ரூ 25,000, கரும்பு ஏக்கருக்கு ரூ 50,000 மானவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20,000 இழப்பீடு வழங்கு,.
 • வேலையிழந்த விவசாயத் தொழிலாளிக்கு ரூ 20,000 இழப்பீடு வழங்கு.
 • அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு, இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கு.
 • தஞ்சை,நாகை,திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வந்து மீண்டும் விவசாயம் செய்யும் வரை மின் கட்டணம்,கல்வி கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் வசூலிப்பதை நிறுத்து.
 • டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்கு ரேசன் கடை மூலம் மாதம் தேவையான அரிசி மளிகை பொருட்களை இலவசமாக வழங்கு.
 • குடிநீர் பஞ்சம், விவசாயம் அழிவு, விவசாயிகள் மரணம் ஆகியவற்றை பேரிடராக கருதி தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம், கால்வாய்களை தூர் வாரி மராமத்து செய்வதை இந்த ஆண்டு முழுவதும் அரசு வேலையாக அறிவித்து பொதுப்பணித்துறையின் கீழ் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கு.
 • விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலையை தீர்மானிக்கும் உரிமை விவசாயிகளுக்கே வழங்க சட்டம் இயற்று!
 • தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடு.

உலகுக்கே சோறுபோட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல, ஆதரவு கரம் நீட்ட இந்த சமூகம் முன்வருமா! இந்த அரசு நம்மை காப்பாற்றுமா? என நம்பிக்கையிழந்து தற்கொலையாலும் அதிர்ச்சியாலும் மரணமடைகிறான் விவசாயி. நாங்கள் இருக்கிறோம். இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள். இப்போது வரும் பொங்கல் அனைவருக்கும் கருப்பு நாள். நமக்கு பொங்கல், உழவர் திருநாள் என்பது விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தருவது தான்.

தொடரும் தமிழக விவசாயிகளின் அகால மரணத்திற்கு காரணம்!

 • மத்திய,மாநில அரசுகளின் தனியார்மய- தாராளமயக் கொள்கை
 • காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை மறுக்கப்பட்டது
 • ஆறு, ஏரி, குளம் தூர் வாராமல் குடி மராமத்தை தமிழக அரசு செய்யாதது
 • அதிமுக-மன்னார்குடி மாஃபியா கும்பல் ஆற்று மணலை கடந்த பத்து ஆண்டுகளாக வரைமுறையற்று கொள்ளையடித்தது.
 • மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு

ஆகிய அனைத்தும் விவாசாயம் அழிந்து வருவதற்கும் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சி மரணத்திற்கும் அடிப்படை காரணம்.

 • மழை பெய்யவில்லை, இயற்கைதான் காரணம், என்ன செய்ய முடியும்? என்ற வாதம் விஞ்ஞான வளர்ந்த 21 நூற்றூண்டில் பேசுவது பித்தலாட்டம் மட்டுமல்ல விவசாயிகளை ஏமாற்றுவது, நிலங்களை பறித்து மீத்தேன்,ஷேல் போன்ற பன்னாட்டு கம்பெனி தாரை வார்க்கும் சதித்திட்டமும் ஆகும்.
 • மேலும் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் செயலிழந்து மக்களின் எந்த பிரச்சினையையும் தீர்க்க வக்கில்லாமல் தோல்வி அடைந்ததுடன் மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகவும் மாறிவிட்டது.

தர்ணா

11-01-2017 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
புதிய ரயில் நிலையம் அருகில், திருவாரூர்

தகவல்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-farmers-suicide-peoples-power-protest/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
அப்ரைசல் Spoof வீடியோ – “நெருப்பு மாதிரி வேல செய்யணும், தியாகம்தான் உன்னை உயர்த்தும்”

"போ குமாரு, இனி 3 வருசம் அங்கதான். யாருக்கு தெரியும், அங்கேயே செட்டில் ஆயிடலாம். புராஜக்ட் மட்டும் முடிச்சிடு. நெருப்பு மாதிரி வேல செய்யணும், தியாகம்தான் உன்னை...

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – கருத்துப் படம்

உருவாக்கியவர் : சரண் கிருஷ்ணா

Close