வேலையை விட்டால் 5 மடங்கு சம்பளம் வெகுமதி

சென்ற ஆண்டு (2015) இறுதியில் இன்ஃபோசிஸ் நிதித்துறை தலைமை அலுவலர் ராஜீவ் பன்சால் பதவியை விட்டு, டாக்சி அழைப்பு நிறுவனம் ஓலாவின் நிதிப் பிரிவின் தலைவராக சேர்ந்தார். அதற்கு முந்தைய ஆண்டில் ராஜீவ் பன்சாலின் ஆண்டு ஊதியம் ரூ 4.72 கோடி. 2 அல்லது 3 மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு போகும்படி கட்டாயப்படுத்தப்படும் சராசரி ஐ.டி ஊழியரைப் போல் இல்லாமல், ராஜீவ் பன்சாலுக்கு வேலையை விட்டு விலகும் ஊதியமாக அவரது ஆண்டு சம்பளத்தை விட கிட்டத்தட்ட 5 மடங்கு தொகையை (ரூ 23.02 கோடி) infosys-ex-cfo-rajiv-bansalவாரி வழங்கியிருக்கிறது, இன்ஃபோசிஸ் .

இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரும்பான்மை ஊழியர்களை தமது வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளவே தொடர்ச்சியான நெருக்கடியிலும், பணியிட தில்லுமுல்லுகளிலும் ஆழ்த்தி வைத்திருக்கின்றன ஐ.டி நிறுவனங்கள். ஆனால், நிறுவனங்களின் மேல் மட்டங்களில் புழங்கும் உயர் அலுவலர்கள் தமக்கு மட்டும் தனிச்சிறப்பான விதிகளை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கிக் கொள்கின்றனர்.

செய்தி ஆதாரம்

  1. Infosys reveals it paid outgoing CFO Rajiv Bansal over Rs23 crore
  2. Proxy firms question Infy’s severance package to ex-CFO

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/five-times-annual-salary-as-severance-pay-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
பணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி!

பணமதிப்பு நீக்கத்தின் பாதகமான விளைவுகள் தற்காலிகமானவை என்று மோடி சொன்னது தவறு என்பதும் அது நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதும் தெளிவாகியிருக்கிறது. உண்மையில், மோடி அறிவித்த பணமதிப்பு...

ஒப்பந்த உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கம் – அழைப்பு வீடியோ, படங்கள்

ஜனவரி மாதம் 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர் உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கு தொடர்பான அழைப்பு வீடியோ, புகைப்படங்கள்.

Close