டுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்

ஈவ் வில்லியம்ஸ்

“ஒரு குழந்தைக்கு குப்பை உணவை மட்டும் கொடுத்து விட்டு, அதுதான் குழந்தைக்கு பிடித்திருக்கிறது என்று கூறுவதைப் போன்றது இது”

“இப்போது நாம் பார்க்கும், எல்லோரும் ஒரே விஷயத்தை ஒரே குரலில் பேசும் ஊடகச் சூழலுக்கு தான் ரசிகன் இல்லை என்கிறார் ஈவ் வில்லியம்ஸ். இந்தச் சூழலில் பெரிதாக வளர்ந்து, பகாசுரன் போல வாய் பிளந்து நிற்கும் புதிய சமூக வலைத்தளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பகிர்வதற்கான நோக்கிலேயே செய்திகள் உருவாக்கப்படுகின்றன. அவை குப்பை உணவுகளுக்கு (fast food) இணையான செய்திகளாகவே உள்ளன”.

“மக்கள் எதைப் படிக்கிறார்களோ அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்ற அப்பாவித்தனமான கருத்திலேயே நாம் இன்னும் சிக்கியிருக்கிறோம். அதாவது, ஒரு குழந்தைக்கு குப்பை உணவை மட்டும் கொடுத்து விட்டு, அதுதான் குழந்தைக்கு பிடித்திருக்கிறது என்று கூறுவதைப் போன்றது இது.”

10 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரும், அதன் முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான வில்லியம்ஸிடமிருந்து இந்தக் கருத்து வருவது பலருக்கு ஆச்சரியமளிக்கலாம்.

குப்பை உணவு

குழந்தைக்கு உணவு ஊட்டும் பொறுப்பில் இருப்பவர் வெறும் கலோரிகளை மட்டும் கணக்கிட்டால், குப்பை உணவுதான், இன்னும் செலவு குறைவான, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிரம்பிய உணவை விட சிறந்தது என்ற முடிவுக்குத்தான் வருவோம்.

“ஒரு வலைத்தளத்தை எளிதாக உருவாக்கி விடலாம். ஒரு டுவீட்டை அனுப்புவது இன்னும் எளிதானது. ஆனால், மேலும் மேலும் அதிக அளவிலான தகவல்களே நம்மை தனிநபர்களாகவோ, சமூக அளவிலோ திறமையானவர்களாக மாற்றி விடும் என்பது மாயை”

“பேஸ்புக் லைக்குகள், டுவிட்டர் ரீட்வீட்டுகள் போன்ற எதிர்வினை முறைகளை கவனமாக பார்த்தால், அவை குறிப்பிட்ட வகையான நடத்தைகளை ஊக்குவிப்பதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கத்தை ஒரு நொடி மட்டும் பார்த்து விட்டு மூடி விடுவதற்கும், உண்மையிலேயே பலனளிக்கும் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கும் இடையே எந்த வேறுபாடும் காட்டாத இந்த அளவு முறை குழந்தைக்கு உணவு ஊட்டும் பொறுப்பில் இருப்பவர் வெறும் கலோரிகளை மட்டும் கணக்கிடுவது போலிருக்கிறது. அப்படி கணக்கிட்டால், குப்பை உணவுதான், இன்னும் செலவு குறைவான, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிரம்பிய உணவை விட சிறந்தது என்ற முடிவுக்குத்தான் வருவோம்.”

இந்தக் கருத்து இப்போது ஏன் பிரபலமாகிறது என்று பார்த்தால், டுவிட்டரை உருவாக்கிய ஈவ் வில்லியம்ஸ் இப்போது அதற்கு மாற்றாக மீடியம் என்ற சேவையை தொடங்கியிருக்கிறார். அதற்கு சென்ற ஆண்டு $5.7 கோடி (சுமார் ரூ 380 கோடி) நிதி திரட்டியிருக்கிறார். தனது புதிய நிறுவனத்தை சந்தைப்படுத்துவதற்கான முயற்சியில்தான் அவரது இந்தக் கருத்து தி கார்டியன் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. இதிலிருந்து, இன்றைய தொழில்நுட்ப உலகத்தைப் பொறுத்தவரை நிதி மூலதனம் லாபம் சம்பாதிப்பதற்கு எதன் மீது பந்தயம் கட்டுகிறதோ அதற்கான ஆதரவு கருத்துக்கள்தான் நம்மை வந்து சேர்கின்றன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

செய்திக்கான சுட்டி

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/focus-on-twitter-and-facebook-leads-to-junk-news-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கோப்ரா போஸ்ட் : காசு கொடுத்தால் கொலையும் செய்வோம் – கார்ப்பரேட் ஊடகங்கள்

'பணமாகத்தான், அதாவது கருப்புப் பணமாகத்தான், கொடுக்க முடியும்' என்று கூறினாலும் அதற்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார் டைம்ஸ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் வினீத் ஜெயின். இவர்களின் "டைம்ஸ்...

உலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி

கோவை குடிநீர் வினியோகம் சூயஸ் என்ற பன்னாட்டு கார் ப் பரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது - இவர்கள் மழை நீருக்கும் தடை போட்டு காசு வசூலிக்கக் கூடிய இலாப...

Close