கஜா : அரசியலை புரிய வைப்பதே நீண்ட கால கடமை

நாம் ஊடகத்தில் பார்ப்பது போல எல்லாம் நடந்து முடிவதில்லை. நேரில் சென்றால் அங்கு பல பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளும் பொருட்களும் செல்லவில்லை, அதுதான் நிதர்சனம்.

நாங்கள் அங்கு வினியோகித்த பொருட்கள் சிறிதாயினும் அவர்களுக்கு ஆறுதலாக அமையும், ஒரு போதும் நிரந்தர நிவாரணமாக அமையப்போவதில்லை.

ஆனால், ஊடகங்கள் அதைப் பற்றி எதுவும் கவலைப் படவில்லை. அவர்கள் எந்த மூலை முடுக்குக்கும் செல்வதில்லை. ரோட்டிலிருந்து அல்லது புனரமைப்பு மையத்தில் இருந்தோ புகைப்படங்களை எடுத்து ஊடகத்தில் வெளியிடுகிறார்கள். நாமும் அதைக்கண்டு எண்ணம் எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று இருந்துவிடுகிறோம்.

ஆனால் அங்கு சென்று பார்த்தால் நடப்பதோ வேறு. நாங்கள் சென்ற ஒரு பகுதிக்கு எந்த அரசு இயந்திரங்களும் வரவில்லை. சில கல்லூரி மாணவர்கள் அதற்கு பிறகு நாம் தான் அங்கு சென்று இருக்கிறோம் என்று விவரிக்கின்றனர்.

மின்சார வாரிய ஊழியர்கள் மட்டும் வேலை செய்கின்றனர். ஆனால் மற்ற எந்த அரசு இயந்திரமும் அங்கு இல்லை. உதாரணமாக போலீஸ் சிறப்புப்படை, தீயணைப்பு படை வீரர்கள் என்று எந்த மாதிரியான நிவாரண பணிகளையும் மேற்கொள்ள எந்த அரசு எந்திரமும் அங்கு இல்லை. எல்லாம் மக்கள் செய்கிறார்கள் மக்களே மக்களுக்கு உதவுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு பிற அமைப்புகளோடு நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் சில விஷயங்களை கற்றுக்கொள்ள மேற்பட்டது. அதில் எல்லா அமைப்புகளும் கை கோர்த்து செய்தால் இன்னும் திறம்பட செய்யலாம் என்பதை நன்றாக உணர்ந்தோம்.

அங்கு அந்த நாள் இறுதியில் நாங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். அப்போது என்னென்ன குறைகள், எவ்வாறு நிவாரணப் பணிகளை திறம்பட செய்யலாம், எவ்வளவு விரைவாக செய்யலாம் என்பது பற்றி ஒவ்வொரு தோழர்களும் அவர்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இனிவரும் காலங்களில் திருத்திக் கொள்வதற்கு மேலும் நிவாரணப் பணிகளுக்கான திட்டங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

இங்கு நிவாரண பொருட்களை சேகரிப்பது, பின்பு அதை பிரித்து எடுத்து சமமாக பங்கு வைத்து பின்பு பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் அங்கு வினியோகித்த பொருட்கள் சிறிதாயினும் அவர்களுக்கு ஆறுதலாக அமையும், ஒரு போதும் நிரந்தர நிவாரணமாக அமையப்போவதில்லை.

இதில் இருக்கும் அரசியலை மக்களுக்கு புரியவைப்பதே நமது நீண்டகால கடமையாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

அதனால் இதில் இருக்கும் அரசியலை மக்களுக்கு புரியவைப்பதே நமது நீண்டகால கடமையாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

அங்குள்ள தோழர்கள் மூலம் அறிந்து கொண்டதில் ஒரு மந்திரி ஒருவர் ஒரு இடத்தில் நின்று கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக கூறி அவர்களுடைய குடும்ப அட்டை கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதில் என்ன புரிகிறது என்றால் இவர்கள் ஓட்டு கேட்பதற்கு மட்டும் வீடு வீடாக சொல்வார்கள் அப்போது குடும்ப அட்டை தேவையில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களை தேடி தேடி சென்று நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டுமா? இவர்கள் என்ன பிச்சை பிச்சை போடுகிறார்களா? அவர்களுடைய கடமையை செய்வதற்கு நாம் அவரைத் தேடிப் போக வேண்டுமா, அவர்கள் நம் வீடு தேடி வர வேண்டுமா?

இந்த நிலை மாற வேண்டும், அதற்கு முதலில் மக்கள் மாற வேண்டும். அதற்கான அரசியலை நம்ம ஊர் மக்களிடம் கொண்டு செல்வதுதான் இந்த நிலையை மாற்ற கூடிய ஒரே சக்தியாக நிகழும்.

– நம்பி

Series Navigation<< கஜா புயல் : வீடுகளை கட்டிக் கொடுத்தாலும் கூட வாழ்வதற்கு எந்த பொருட்களும் இல்லை!கஜா புயல் : ஒட்டு மொத்த அழிவு, எளிய மக்கள் மீது அதிக சுமை >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-long-term-task-is-political/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வட்டிக் கடன்கள் – 2

கடுவட்டிக்கு எதிர்வினையாக ஏழை எளியவர்களை பாதுகாக்கும் முயற்சிகள், வரலாற்றில் புனிதமான விருப்பங்கள் அவற்றுக்கு எதிரானவையாக மாறும் வேடிக்கையைத்தான் வெளிப்படுத்தின.

பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு

இன்றும் பிரிட்டன் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பது உண்மைதான், ஆனால், அதன் மதிப்புக்கும் செல்வாக்கும் மேற்கத்திய ராணுவ கூட்டணி, ஆங்கிலம் பேசும் நாடுகள், ஐரோப்பிய...

Close