கஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை!

குறைந்தது ஒரு வீட்டிலிருந்து பிற வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் 50 மீட்டர் இடைவெளியில் பார்த்தால் கிட்டத்தட்ட நாலு கிலோமீட்டர் நடந்தே சென்று கொடுத்தது என்பதுதான் உண்மை. எங்கே என்ன தேவை என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டு அன்று இரவு கலந்துரையாடலில் இதைப் பகிர்ந்து கொண்டு அதற்குத் தேவையான மற்ற பொருட்களை, உதவிகளை தயார்செய்தோம். மீண்டும் அடுத்த நாள் தொடங்கும், இதுதான் எங்கள் பணி. இது நல்ல முறையில் சென்றடைந்தது. இதில் உண்மையான பாதிப்பு என்னவெனில் ஒருவருக்கு உரிய ஒரு தென்னை மரம் தோப்பில் 80% மரங்கள் விழுந்து விட்டன. மீதி 20% வாழ்வாதாரமாக இருக்கும். மீண்டும் ஐந்து வருடங்கள் ஆகிவிடும் அந்த தென்னை மரங்களை நட்டு அது வளர்வதற்கு. அதுவரை இந்த மக்கள் என்ன செய்வார்கள்? எந்த ஒரு ஊடகங்களுக்கும் இது தெரியாத ஆராய்ச்சியாகத்தான் நான் கருதுகிறேன்.

இவ்வளவு பெரிய இழப்புகளை பற்றி அரசு ஏன் பேச மறுக்கிறது?

80% மரங்கள் விழுந்துவிட்டன, இந்த மரங்களை பராமரிக்கும், மரங்களில் ஏறி காய் பறிக்கும், நார் உரிக்கும், தேங்காய், இளநீர் வாங்கி விற்கும், வண்டி ஓட்டும் தொழிலாளிகளது (கூலித் தொழிலாளிகளது) வாழ்வாதாரம் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. அந்த மக்கள் வாழ்வாதாரத்திற்காக கண்டிப்பாக இடம்பெயர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுளளது என்பதுதான் நாங்கள் அறிந்து கொண்ட உண்மை. இவ்வளவு பெரிய இழப்புகளை பற்றி அரசு ஏன் பேச மறுக்கிறது? உடனடியாக தீர்க்கமுடியாது என்றாலும் அரசு ஏன் வெளியே சொல்ல முடியவில்லை? ஏன் இவர்களுக்கு உதவவில்லை? என்று நாங்கள் யோசிக்கும் பொழுது இந்த மொத்த நிலப்பரப்புமே மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்றவை உள்ள பகுதி. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்கு இந்த அழிவும், கூலித் தொழிலாளிகளின் இடம்பெயர்வும் வசதியாக உள்ளது என்பதால் தான் அரசு திட்டமிட்டே மறுக்கிறது என்பது தெரிகிறது.

நான் நான்கு நாட்கள் அங்கு பணி செய்தபோது கிட்டத்தட்ட ஒரு பத்து கிராமங்களுக்கு சென்று இதே பணியை தான் செய்தேன். ஒரு பகுதியில் புயல் தாக்கியதிலிருந்து மூன்று நாட்கள் உணவின்றி தவித்துள்ளார்கள். அங்குள்ள மக்கள் உதவி கேட்பதற்கு கூட வழியில்லாமல் சிக்கிக்கொண்டார்கள். ஏனெனில் அங்கு மரங்கள் விழுந்து கிடக்கிறது, வீடுகள் சரிந்து கிடக்கிறது இதையெல்லாம் மீறி அவர் உதவி கேட்பதற்கு கூட அங்கு மக்கள் இல்லை. ஒவ்வொரு வீடும் தள்ளி தள்ளி உள்ளது. சில கிராமங்கள் போல தொடர்ச்சியான வீடுகள் கிடையாது.

இவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில் எப்படி நாம் உதவ வேண்டும் என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் அங்குள்ள மக்களுக்கு எப்படி உதவுவது? என்பது பெரிய கேள்விக்குறி.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் அங்குள்ள மக்களுக்கு எப்படி உதவுவது? என்பது பெரிய கேள்விக்குறி. வாழ்வாதாரத்திற்கு உதவிகள் செய்ய முடியாது, ஆனால் அவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான உதவிகளை செய்ய முடியும். இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனே நாம் என்ன செய்யவேண்டும் என்றால் ஒரு ஐ.டி தொழிலாளர் என்ற முறையில் நாம் இதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் அவர்களால் என்ன முடியும் என்பதை வாங்கி சரியான ஒரு அமைப்பின் வழியாக மக்களுக்கு சென்றடைய வைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்குள்ள மக்களை காப்பாற்றுவதற்கு இது உதவும் என நான் நம்புகிறேன்.

இந்த மாதிரி தருணங்களில் ஒரு சில தனிநபர்கள் செய்யும் உதவிகள் அனைத்தும் சரியான ஒரு இடத்திற்கு சென்று சேர்ந்ததா என்றால், நிச்சயம் கிடையாது என்பதுதான் என்னுடைய புரிதல். ஏனெனில் ஒரு தனிநபர் என்பவர் சுற்றிலும் வீடுகளும் மரங்களும் விழுந்து கிடக்கும் சூழ்நிலையில் அந்த கிராமத்தை அவரால் சென்றடைய முடியாது. எந்தவித சிரமமும் இல்லாமல் போகும் வழியில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே கொடுப்பார். அதே மக்கள் மீண்டும் மீண்டும் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். இது மக்களின் ஒரு மனநிலை யாரும், இதை வாங்கி மற்றவருக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வராது. தங்களுக்கே போதாமல் உள்ளது என்றுதான் பார்ப்பார்கள். அதனால் தனிநபராக செல்பவர்கள் யாரும் இந்த மாதிரியான உதவிகளைச் செய்யாமல் அந்த உதவிகளை செய்யும் ஒரு அமைப்புகளிடம் பொருளை கொடுத்து விட்டு சென்றால் மிகவும் நல்லதாக இருக்கும் என்பது எனது புரிதல்.

ஏனெனில் இந்த களப்பணியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக நான் சொல்கிறேன். ஒரு மீனவர் குடும்பத்திற்கு நான் செல்லும்போது கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் நாங்கள் மூட்டை சுமந்து சென்று கொடுத்தோம். முன்னாடி ஒருவர் பின்னாடி ஒருவர் ஒரு கொம்பு வைத்துக்கொண்டு அனைத்து பொருள்களையும் மாட்டிக்கொண்டு நாங்கள் மூன்று கிலோமீட்டர் போக வேண்டியது இருந்தது. எங்களால் ஒன்றரை கிலோ மீட்டர் வரை தான் செல்ல முடிந்தது. அதற்கு மேல் செல்ல முடியவில்லை. அங்குள்ள லோக்கல் மக்களிடம் நாங்கள் எங்கள் நிலைமையை சொல்லி அவர்களை அந்த இடத்திற்கு வரவழைத்து அவர்களும் ஒன்றரை கிலோமீட்டர் எங்களை நோக்கி வந்து நாங்கள் கொடுக்க வேண்டிய நிலைமையில் இருந்தோம். இதை ஈஸியாக நாம் ஒரு மெயின் ரோடு வழியாக வந்திருந்தால் இந்த 120 பாக்கெட்டுகளும் அந்த மக்களுக்கு சென்றடைவது வாய்ப்பே கிடையாது. முன்னாடி உள்ளவர்களே வாங்கியிருப்பார்கள். அவர்களுக்கும் தேவைதான், ஆனால் அவர்களுக்கு ஒருவேளை உணவாவது கிடைத்திருக்கும். இந்த மக்களுக்கு அதுகூட இல்லை. இது ஒரு அமைப்பாக செய்த எங்களுக்கே இந்த கதி என்றால் ஒரு தனிநபர் கண்டிப்பாக இதை செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. அமைப்பாக செய்யும்போதுதான் நமது இலக்கை நோக்கி அது சென்றடையும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரு அமைப்பாக செய்த எங்களுக்கே இந்த கதி என்றால் ஒரு தனிநபர் கண்டிப்பாக இதை செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து

நான்கு நாட்கள் எனது பணியை அங்கு முடித்த பிறகு எனக்கு சிறிது உடல் குறைவு ஏற்படும் சூழ்நிலையை நான் உணர்ந்தபோது நான் அங்கிருந்து விடைபெற்று நான் சென்னை வந்து விட்டேன். கிட்டத்தட்ட நாங்கள் இந்த பணியில் ஒரு 32 நண்பர்கள், தோழர்கள் செய்தோம். பலர் பல்வேறு பகுதிகளிலிருந்து பொருட்களுடனும், களப்பணியாற்றுவது என்றும் வருவதும் போவதும் இயல்பான நிலைமை தான். அதனால் நானும் எனக்கு முடியாத சூழ்நிலை ஏற்படும் போது வந்து விட்டேன்.

நான் திரும்பி வந்த பிறகு சென்னையிலுள்ள மக்களிடம் அங்குள்ள பாதிப்புகள், அந்த மக்களின் துயரம் பற்றிய எந்தவித பாதிப்பும் தெரியவில்லை. நான் அங்கு பார்த்தவர் நிலைமையிலிருந்து இன்னொரு உலகத்திற்கு நான் திரும்பி வந்தது போல் தான் உணர்ந்தேன். இது செய்தி ஊடகங்களும் இந்த அரசு அதிகாரிகளும் இந்த ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் செய்யும் ஒரு அயோக்கியத்தனமாகும். பிரச்சினையின் தீவிரத்தை மக்களிடமிருந்து மறைக்க எடுத்துள்ள முயற்சியின் வெற்றியாகவே பார்க்கிறேன். இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மிகவும் உதவியாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. இங்குள்ள மக்களுக்கு ஏன் இந்த உணர்வுகள் இல்லை. கண்டிப்பாக இதைப் பார்க்கும் அனைவருக்கும் உணர்வுகள் வரும். ஆனால் பார்க்க விடாமல் தடுப்பது இந்த அரசுகள் தான். அங்குள்ள மக்களுக்கு அன்றாட உணவுகூட இன்னும் போதுமான அளவு சென்றடையவில்லை. இப்போதுகூட வாய்ப்புள்ளவர்கள் சென்று புயலின் பாதுப்புகளை சந்தித்து வரலாம். நம் மக்களுக்கு உதவலாம்.

– அம்சராஜ்
(இரண்டாவது இறுதிப் பகுதி)

Series Navigation<< கஜா புயல் நிவாரணப் பணி : எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-work-it-is-not-an-easy-task/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பெரியார் வென்றெடுத்த பேச்சுரிமையை பயன்படுத்திய பார்ப்பனப் பெண்

ஒரு அமைப்பு நடத்தும் கூட்டத்தில் உள்ளே நுழைந்து கேள்வி கேட்டு கூச்சல் போடுவது நாகரீகமற்ற செயல். இருப்பினும் அவரை பேசச் சொல்லி பக்குவமாக செயல்பட்ட அந்த மாணவர்களை...

புதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்: ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்! இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்! சுயசார்பு இந்தியா:...

Close