கஜா புயல் நிவாரணப் பணி : எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும்?

நான் அம்சராஜ், NDLF IT Employees Wing மூலமாக கஜா புயல் நிவாரண பணிக்கு சென்றிருந்தேன். எனது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கஜா புயலானது 16-ம் தேதி இரவு சரியாக இரண்டு மணியில் இருந்து நாலு மணி வரை தாக்கியுள்ளது. இதன் தாக்கத்தைப் பற்றி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஊடகங்களும் மக்களுக்கு உண்மைகள் எதையும் சொல்லவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த அறிக்கையில் “ஆளுங்கட்சி சரியான ஒரு முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது, சிறப்பான நடவடிக்கை” என்று தெரிவித்தார்.

உண்மையான பாதிப்புகளை ஊடகங்களும் மறைத்துவிட்டன, இதனால் வெளிஉலகிற்கு உண்மையான பாதிப்புகள் மறைக்கப்பட்டுவிட்டது. ஆளுங்கட்சியும் சாதகமாக இதைப் பயன்படுத்திக் கொண்டது. ஆளும் கட்சியின் ஒரு அமைச்சரை அங்குள்ள மக்கள் கோபமடைந்து துரத்திய போது தான் வேறு வழியில்லாமல் ஊடகங்கள் பேசத் துவங்கியது. மக்களை பற்றி கவலை இல்லாமல் இந்த அமைச்சரைப் பற்றி கவலைப்பட்டு வெளிவந்து தான் இந்த புயல் தாக்கம் வெளியே தெரிய வந்தது.

மக்கள் மிகவும் கவலையான நிலையில் உள்ளார்கள். பிழைப்புக்கு வழி இல்லாத சூழ்நிலையில் உள்ளார்கள். அங்கு மின்சாரம் எதுவும் கிடையாது. வாழத் தகுதியற்ற ஒரு நிலமாக உள்ளது என்பதை வெளியே கொண்டு வந்தது. இதற்குப் பொருள் உதவியும் தேவை என்பதை மக்களுக்கு உணர்த்தியது. அதன் அடிப்படையில் நான் எனது யூனியன் மூலமாக நான் அங்கு சென்று மக்களுக்கு உதவ முன்வந்தேன். நிவாரண பணிகளில் கலந்து கொண்டேன்.

இப்பொழுது நாம் எப்படி அங்கு செல்லவேண்டும் என்பதை எனது அனுபவம் மூலமாக இங்கு சொல்ல விரும்புகிறேன். முதலில் நமக்கு தேவையான குறைந்த சில பொருட்கள் வைத்திருக்க வேண்டும். போர்வை, சாப்பிடும் தட்டு, டம்ளர், பவர் பேங்க் போன்றவை போதும். நாம் நீண்ட தூரம் போக வேண்டியது என்றால் இவை எடை குறைவானதாக இருந்தால் மிகவும் நல்லது. அதேபோல் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கும் அதற்கு தகுதியான கருவிகளை எடுத்துக்கொண்டு செல்வதும் மிகவும் நல்லது.

எடுத்துக்காட்டாக ஒரு சாலையை பராமரிக்கவும் ஒரு வீட்டை பராமரிக்க தேவையான ஆயுதங்களான மண்வெட்டி, கொத்து, அரிவாள் இது போன்ற சாதனங்கள் இருந்தால் அதையும் கூட எடுத்து வருவது மிகவும் நல்லது. ஒரு கூட்டாக கிளம்பும்போது அனைத்தையும் மொத்தமாக ஒரு பார்சலாக கட்டி அதை எடுத்துக் கொள்ளலாம். தனித்தனியாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் ஒரு பார்சலை எடுத்து செல்வது மிகவும் நல்லது. அப்படி எடுத்து வரும்போது அதன் மீது ஒரு லேபில் ஒட்டிக்கலாம். ஏனெனில் இது போலீஸ்காரர் மற்றும் அரசு ஊழியர்கள் யாரும் சந்தேகப்படும் படியாக இருக்காது.

நாம் கிளம்பும் நேரம் அதனுடைய பாதை முழுவதும் தெரிந்து கொள்ளுவது மிகவும் நல்லது. அது மிகச் சீக்கிரமாக பாதிக்கப்பட்ட பகுதியை சென்றடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அங்கு நமது தோழர் யாராவது ஒருவர் இருந்தால் அவரிடம் தொடர்பு கொண்டு அதற்குத் தேவையான பாதைகளையும் மற்றும் எப்படி செல்ல வேண்டும் எந்த பாதையில் செல்ல வேண்டாம், உதாரணமாக அது கூகுள் மேப்பில் சிறந்த பாதையாக காட்டும். ஆனால் உண்மையில் அங்கு மரங்கள் விழுந்து கிடக்கும் அடைபட்டுக் கிடக்கும். அதனால் அங்குள்ள நமது தோழரின் உதவி தேவைப்படும். இது மிகவும் முக்கியம். இதுவே நாம் தயாராகும் ஒரு ஒரு சிறந்த நிலை என நான் கருதுகிறேன்.

அங்கு களப்பணியில் என்ன நடந்தது, இப்பொழுது அங்கு என்ன நிலவரம் என்று நான் கொஞ்சம் விரிவாகவே சொல்ல விரும்புகிறேன்.

உணவுப் பொருட்களையும், வேறுசில பொருட்களையும் பகிர்ந்து கொடுக்கும் பணிகளையும் கொடுத்தார்கள்

காலைல கரெக்டான ஸ்பாட்டுக்கு நாங்க போய் சேரும் பொழுது பத்து 45 மணியிருக்கும். ஒரு சில ரூட்ல பஸ்கள் இயங்கியது. அதிகாரிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ளாத இடங்களில் பஸ்ஸில் எங்கும் செல்லமுடியவில்லை. அப்படின்னா என்ன? ஒரு அமைச்சர் வந்தால் கைதட்டி வரவேற்பு கொடுக்காத இடங்களிலெல்லாம் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் நாங்கள் சிறிது காலதாமதமாகத்தான் அங்கு போய் சேர்ந்தோம்.

தோழர்கள் உடனடியாக பணிகளைத் தொடங்குவதற்கு சொன்னார்கள். உணவுப் பொருட்களையும், வேறுசில பொருட்களையும் பகிர்ந்து கொடுக்கும் பணிகளையும் கொடுத்தார்கள். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டு செய்யத்தொடங்கி விட்டோம். இந்த பணி என்பது அவரவர்களின் செய்யக்கூடிய பணிக்கு தகுந்த மாதிரி கொடுக்கப்பட்டது. நல்ல திடகாத்திரமான நபர்களுக்கு மரம் வெட்டுதல், சீரமைத்தல் போன்ற பணிகளையும், அதற்கும் கீழே உள்ளவர் உணவு விநியோகம் செய்ய செல்லலாம். அந்த மாதிரி அடிப்படையில்தான் கொடுக்கப்பட்டது.

மக்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் வீடுகள், பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை முடிந்துவிட்டது. அடுத்து வாழ்வதற்கு என்ன வழி? அதற்கு ஏதாவது செய்யுங்கள் என்பதுதான்.

தோழர்கள் சொன்னதும் உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஒரு 80 பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு நாங்கள் வேனில் ஏறி வினியோகத்திற்கு சென்றோம். கிட்டத்தட்ட 80 வீடுகள்தான் நாங்கள் பிளான் பண்ணது. ஆனால், 80 வீடுமே ஒவ்வொன்றும் 50 மீட்டர் இடைவெளியில் உள்ளது. எங்கள் டீமிற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் தவிர நாங்கள் வேறு பகுதியிலோ, மெயின் ரோட்டிலோ கொடுக்கக்கூடாது என்ற கட்டளைப்படி நாங்கள் எதுவுமே ரோட்டில் கொடுக்கவில்லை. கிராமங்களில் உள்ளே சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் அந்த உணவுப் பொருட்கள் சென்றடையும் விதத்தில் எல்லா மக்களிடமும் கொடுத்து வந்தோம். ஆனால் மக்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் வீடுகள், பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை முடிந்துவிட்டது. அடுத்து வாழ்வதற்கு என்ன வழி? அதற்கு ஏதாவது செய்யுங்கள் என்பதுதான்.

இது ஒரு சாதாரணமான, அரசு சார்பற்ற, அதிகாரம் அல்லாத பிற மக்களிடம் சென்று அவர்களிடம் இருந்து பொருளுதவியை வாங்கி மீண்டும் இந்த மக்களுக்கு நாம் கொடுக்க வந்துள்ளோம். இதுதான் நம்முடைய உச்சகட்ட பணி. இந்தப்பணியில் அவருடைய எதிர்பார்ப்புகளை நாம் செய்ய முடியாது. அந்த இழப்பு என்பது என்னவென்றால் கிட்டத்தட்ட 80% மரங்கள் தரையோடு இறங்கிவிட்டது. குடிசை வீடுகள் அழிந்துவிட்டன. தற்போதைக்கு இவர்களுக்கு உடனடி தேவையான தார்ப்பாய், உணவுப் பொருள்கள். இது மட்டும் தான் நம்மால் செய்ய முடியும். ஓரளவிற்கு மீண்டும் இதை புனரமைத்து கொடுப்பது செய்யலாம். அதற்கு மேல் முழுமையாக என்பது நம்மால் முடியாத காரியம். மக்களுக்கான ஒரு அரசால்தான் செய்யமுடியும், அதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆனால் உணர்ந்து கொண்டு மக்களுடைய அந்த தாக்கத்தை நாங்கள் வாங்கிக்கொண்டுதான் வந்தோமே ஒழிய அதற்கான ஒரு தீர்வை நாம் சொல்வதற்கு இனிமேல் தான் நாம் செய்ய வேண்டும்.

எங்களுடைய பணி என்னவெனில் மிகவும் பாதிக்கப்பட்ட, சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு நாம் சேகரித்த பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பது தான். அதை நாங்கள் சிறப்பாகவே சென்றுவந்தோம்.

– அம்சராஜ்

(அடுத்த பகுதியில் முடியும்)

 

Series Navigation<< கஜா புயல் : யார் முறையான நிவாரணம் வழங்க முடியும்?கஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-reliefe-work-how-to-prepare/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
காவிரிப் பிரச்சினை – சமூக வலைத்தள கருத்துப்படங்கள்

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் கருத்துப்படங்களின் தொகுப்பு

நெடுவாசல் : ஒரு ஐ.டி ஊழியரின் போராட்ட அனுபவம்

ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியவுடன் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதி போராட்டத்தின் 12-ம் நாள் முதல் 19-ம் நாள் வரை நெடுவாசல் போராட்டக் களத்தில்...

Close