எஸ்.வி.எஸ் கல்லூரி தீர்ப்பு : “எல்லா கேசும் சூட்கேசில் அடக்கம்”

ஸ்.வி.எஸ் கல்லூரியின் தாளாளர் மற்றும் அவரது கொலைக் கூட்டாளிகளும் அம்பலப்பட்டு கைதாகி ஏழு மாதங்கள் ஆகிறது. கிணற்றில் பிணமாக கிடந்த பிரியங்கா, மோனிஷா, சரண்யா என்ற மூன்று மாணவிகளது மரணம் (கொலை) பற்றிய தெளிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் , அந்தக் கல்லூரியின் மீதான தடையை நீக்கி கல்லூரியைத் திறக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

svs-college-2எளிய வீட்டுப் பிள்ளைகளின் உயிர் பலிக்கு விடை தெரியாத நிலையில், கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வழியில்லாத நீதிமன்றம் கல்லூரியைத் திறப்பதில் மிகுந்த வேகமும், ஆர்வமும் காட்டுகிறது.

கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவான இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது.

மேலும், கல்லூரிக்கு அருகில் இருக்கும் கிணற்றில் தான் அம்மாணவிகளின் உடல்கள் இருந்ததாகவும், கல்லூரி வளாகத்தினுள் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று கல்லூரி நிர்வாகம் கொடுத்த மனுவை அடுத்து இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது.

svs-college-students-killedஇலட்சக்கணக்கில் அடித்தட்டு மக்களிடமிருந்து பணத்தைச் சுருட்டிக் கொண்ட கொள்ளைக் கும்பலால் பாதிக்கப்பட்டு, படிப்பைத தொடராமல் பாதியில் விட்டுச் சென்ற பல மாணவர்களது வாழ்வு சீரழிக்கப்படுவது கல்லூரி வளாகத்துக்குள்தான் நடந்தது. அதற்கு இன்னும் சட்ட ரீதியான தீர்வு கிடைத்தபாடில்லை!

ஏற்கனவே கல்லூரியின் சொத்துக்கள் சேதப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் அனைவரும் பிற கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில், கல்லூரியைத் திறப்பதற்குத் தடை ஏதும் இல்லை என்னும் இத்தீர்ப்பு ‘எல்லா கேசும் சூட்கேசில் அடக்கம்’ என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

ஆடு மாடுகளையும் , சொற்ப நிலங்களையும் விற்று , கடன்பட்டு பணம் கட்டிய ஏழை வீட்டுப் பிள்ளைகளது எதிர்காலம் சேதாரமானது பற்றி இந்த ‘நீதி’யரசர்கள் என்றுமே கவலை கொள்வதில்லை.

தொடர்புள்ள செய்தி :  Remove seal on SVS College: HC

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/highcourt-removes-seal-on-svs-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்!

இயற்கையாக தாய்மை பேறு உடைய பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு இயல்பானது. இதனால் இறைவனின் புனிதம் கெடும், மனித குலத்தைப் பாதிக்கும் என்று பேசும் இவர்கள் என்னதான் கல்வியறிவு...

மார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.

நமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம்  வரும்   17  சனிக்கிழமை  2018 அன்று நடைபெறும்.

Close