டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்

This entry is part 2 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

‘அமெரிக்காவில் 95% குடிமக்கள் வரி செலுத்தும் போது இந்தியாவில் 1% பேர் மட்டும் வரி செலுத்துவதுதான்  அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வுக்கான அடிப்படை’,

‘அமெரிக்கா வெளியிடும் டாலர்களுக்கு இணையாக வைத்திருக்கும் தங்கத்தை விட இந்தியா வெளியிடும் ரூபாய்களுக்கு இணையாக வைத்திருக்கும் தங்கத்தின் வீதம் குறைவாக இருப்பதால்தான் இந்திய ரூபாயின் செலாவணி வீதம் பலவீனமாக இருக்கிறது’,

‘ஐ.எம்.எஃப் இந்தியாவை கட்டாயப்படுத்தி தங்கக் கையிருப்பின் மதிப்புக்கு ஏற்ப ரூபாய் மதிப்பை குறைக்க வைக்கிறது’

என பல அரை உண்மைகளை, அண்டப் புளுகுகளோடு கலந்து ஒரு செய்தி வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.

உண்மை என்ன என்பதை விளக்கும் பதிவு

1. உலக நாடுகள் தமது அன்னியச் செலாவணி கையிருப்பில் குறிப்பிட்ட பகுதியை தங்கமாக வைத்திருப்பது உண்மையா?

ஆம்.

hindutva-pseudo-science

இந்துத்துவர்கள் சமைக்கும் போலி அறிவியல் கலவை

எல்லா நாடுகளுமே ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகம், வெளிநாடுகளுடனான சேவை பரிவர்த்தனைகள், கடன் கொடுத்து வாங்குதல், முதலீடு செய்தல் போன்ற தேவைகளுக்கு கைவசம் வைத்திருக்கும் சேமிப்பில் அன்னிய நாணய கையிருப்பு, வெளிநாட்டு அரசு பத்திரங்கள், மற்றும் தங்கம் ஆகியவை உள்ளடங்கியிருக்கின்றன.

2. அமெரிக்க அரசிடம் இந்திய அரசிடம் இருப்பதை விட அதிக அளவு தங்கம் கைவசம் இருப்பது உண்மையா?

ஆமாம்.

அமெரிக்காவிடம் 8,133 டன் தங்கம் உள்ள நிலையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடம் 557 டன் தங்கம் மட்டுமே உள்ளது.

3. அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் செலாவணி மதிப்பு குறைவாக இருப்பதோடு குறைந்து கொண்டே செல்வது உண்மையா?

ஆமாம்.

1980-களில் 1 டாலருக்கு ரூ 7.7 என்று இருந்த வீதம், 1991-ல் டாலருக்கு ரூ 28 என்ற குறைந்து, அடுத்த 25 ஆண்டுகளில் படிப்படியாக வீழ்ச்சியடைந்து இன்று 1 டாலருக்கு ரூ 70 என்ற அளவைத் தொட்டு நிற்கிறது.

4. ஐ.எம்.எஃப் எனும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளுக்கிடையேயான அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகளை கண்காணித்து, ஒழுங்குபடுத்தும் வேலையை செய்கிறதா?

ஆமாம்.

உலக நாடுகளிடையே “நிலையான செலாவணித் தொகையைப் பராமரிக்கவும், சர்வதேச வரவு செலவு குறுகிய கால சிறு கடன் பற்றாக்குறைகளை வழங்கவும் சர்வதேச நிதி நிறுவனம் 1946-ல் அமைக்கப்பட்டது” (நிதி நெருக்கடி – ஒரு புரிதல், அமானுல்லாகான், பாரதி புத்தகாலயம், 2011)

5. இந்தியாவை விட அமெரிக்காவில் வருமான வரி செலுத்துபவர்களின் சதவீதம் அதிகமாக உள்ளதா?

ஆமாம்.

இந்த உண்மைகளை திரியாக எடுத்து, கற்பனையையும், அரைவேக்காட்டு வாதத்தையும் கலந்து ஒரு தேர் வடத்தையே திரித்திருக்கின்றது இந்துத்துவ ‘தேசபக்த’ சிந்தனை.

இது போன்ற இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

முகேஷ் அம்பானிக்கு சொந்த வீடாக மும்பையின் ஆன்டிலியா மாளிகை உள்ளது. அது ரூ 5,000 கோடி செலவில் கட்டப்பட்டதாக மதிப்பிடுகிறார்கள். ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் பாலாஜிக்கு சொந்த வீடாக ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு ஃபிளாட் உள்ளது. அதை அவர் ரூ 50 லட்சம் வங்கிக் கடன் மூலம் வாங்கியிருக்கிறார், மாதா மாதம் ஈ.எம்.ஐ கட்டுகிறார்.

முகேஷ் அம்பானி அவரது தம்பி அனில் அம்பானியுடன் சண்டை போட்டுக் கொண்டு குடும்பச் சொத்தை பிரித்துக் கொண்டு இருவரும் தனித்தனியாக தொழில் செய்கிறார்கள். பாலாஜி தனது தம்பியுடன் சண்டை போடாமல் அவரது அப்பாவுக்கு சொந்தமான கிராமத்து வீட்டுக்கு இரண்டு பேரும் அவ்வப்போது போய் வந்து கொண்டு ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானி ரூ 1.5 லட்சம் கோடி செலவில் ஜியோ 4G செல்ஃபோன் சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். பாலாஜி ஜியோ 4G சேவை கணக்கு வாங்கியிருக்கிறார்.

ambani-family

முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரராக இருப்பதற்கும், பாலாஜி ஐ.டி நிறுவனத்தில் அவதிப்படுவதற்கும் காரணம் என்ன?

இந்த மூன்று உண்மைகளையும் ஒப்பிட்டு முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரராக இருப்பதற்கும், பாலாஜி ஐ.டி நிறுவனத்தில் அவதிப்படுவதற்கும் காரணம் சொந்த வீட்டின் மதிப்பும், தம்பியருடன் முரண்படுவதும், செல்ஃபோன் சேவையும்தான் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்!

அப்படிப்பட்ட அபத்தம்தான் அமெரிக்கா முன்னேறிய வலுவான நாடாக இருப்பதற்கும் இந்தியா பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதற்கும் காரணமாக தங்கக் கையிருப்பையும், வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையையும், ஐ.எம்.எஃப்-ன் தலையீட்டையும் இணைத்து சொல்லப்படும் கதையும்.

“தங்கம் என்பது செல்வத்தின் அடையாளமே தவிர அதுவே செல்வமாகி விடாது” (தங்கம், வே. மீனாட்சி சுந்தரம், பாரதி புத்தகாலயம்) என்ற உண்மையை மறைத்து நிற்கும் மாயத் தோற்றங்களை பயன்படுத்தி இப்படிப்பட்ட போலி தத்துவங்களையும், பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

இந்தக் கதையின் ஆரம்பமே குளறுபடிதான். இந்திய ரூபாய் என்பது முதலில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிலும் (1857 வரை), பின்னர் ஆங்கிலேய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும் (1857 முதல் 1947 வரை) இந்தியாவிலிருந்து செல்வத்தை கொள்ளைஅடித்துச் செல்லும் வகையில் நிர்வகிக்கப்பட்டது. 1991-ல் 1 டாலர்=ரூ 28 என்று இருந்த செலாவணி விகிதம்
அதனைத் தொடர்ந்த கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக வீழ்ந்து, 2.5 மடங்கு குறைந்து இன்றைக்கு 1 டாலர்=ரூ 70 என்ற மட்டத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் ஆதிக்கம் டாலர் மட்டும்தானா?

அமெரிக்காவின் ஆதிக்கம் டாலர் மட்டும்தானா?

அமெரிக்க டாலர் 1775-ஆம் ஆண்டு அமெரிக்க கான்டினென்டல் காங்கிரசால் வெளியிடப்பட ஆரம்பித்து கிட்டத்தட்ட 240 ஆண்டு வரலாற்றை பார்த்திருக்கிறது. இந்த வரலாற்றில் அமெரிக்க பழங்குடியினரை வேட்டையாடி அழித்து, கோடிக்கணக்கான ஆப்பிரிக்க கறுப்பின மக்களை கடத்தி வந்து அடிமை உழைப்பில் ஈடுபடுத்தி, இரண்டு உலகப் போர்களிலும் ஆயுதத் தளவாடங்களையும், போர் தேவைகளையும் உற்பத்தி செய்து வழங்கி பெரும் வளர்ச்சி பெற்றது. 2-ம் உலகப் போருக்குப் பின் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலம் டாலரை உலக நாணயமாக திணித்து, அதை தனது இராணுவ வலிமையால் நிலைநாட்டிக் கொண்டிருப்பது இவற்றையும் சேர்த்து பார்க்க வேண்டும். உலகெங்கிலும் போரின் மூலமும், நிதி ஆதிக்கம் மூலமும் செல்வத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கும் யதார்த்தையும் பார்க்க வேண்டும்.

அமெரிக்காவின் பொருளாதார வலிமையும், அரசியல் செல்வாக்கும் இந்த அடித்தளத்தில் கட்டப்பட்டவை. இந்தியாவின் வறுமையும், பிற்போக்கும் அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகளுக்கு சேவகம் செய்வதுதான் தேசபக்தி என்று அவர்களுக்கு ஏற்ப நமது பொருளாதாரத்தை அடகு வைக்கும் இப்போதைய மோடி மற்றும் அவருக்கு முன்பு ஆண்ட புரோக்கர்களை அடிப்படையாகக் கொண்டது.

india-farmer

வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லாத இந்திய விவசாயிகள்

வரலாற்றுப் பின்னணி, அரசியல் ஆதிக்கம், இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் பொருளாதார காரணங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக இருப்பதும், அமெரிக்காவின் கைவசம் பெருமளவு தங்க சேமிப்பு இருப்பதும், அமெரிக்காவில் வருமான வரி செலுத்தும் அளவுக்கு பெரும்பான்மை மக்களின் வருமானம் உயர்ந்திருப்பதும் நடந்திருக்கின்றன.

இதற்கு எதிரான வரலாற்று, அரசியல், பொருளாதார காரணங்களால் இந்தியர்களில் 80% பேர் அத்துக் கூலிகளாக வரி கட்டும் அளவுக்கு வருமானம் ஈட்டாமல் இருப்பதும், இந்தியப் பொருளாதாரம் அன்னிய பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டிருப்பதால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டிருப்பதும், நமது நாடும் நாட்டு மக்களும் அன்னிய நிறுவனங்களுக்கு அடிமையாக மாற்றப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படைகளை புறக்கணித்து விட்டு ‘அமெரிக்கர்கள் வரி கட்டுகிறார்கள் அதனால் அமெரிக்க டாலர் வலுவாக இருக்கிறது. இந்தியர்கள் வரி கட்டுவதில்லை அதனால்தான் இந்திய ரூபாய் பலவீனமாக இருக்கிறது’ என்பது என்ன விதமான பிதற்றல்?

அமெரிக்காவில் 2% உழைப்பாளர்கள் (சுமார் 22 லட்சம் பண்ணைகள்) மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டள்ளனர். சுமார் 15 கோடி தொழிலாளர்கள் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றுகின்றனர். சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் $52,486 (சுமார் ரூ 35 லட்சம்). எனவே, அங்கு 92% பேர் வருமான வரி கட்டுவதில் என்ன ஆச்சரியம்?

indian-war-of-independence

இந்தியாவின் காலனிய அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவதில் அடங்கியிருக்கிது இந்தியாவின் முன்னேற்றத்துக்கான பணி

இந்தியப் பொருளாதாரம் 9.2 கோடி விவசாயக் குடும்பங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 50.2 கோடி உழைப்பாளர்களில் அமைப்புசார் (organized) துறைகளில் (அரசு வேலை, பொதுத்துறை, தனியார் கார்ப்பரேட்) மாதச் சம்பளம் வாங்குபவர்களின் சதவீதம் 8% மட்டுமே. அதாவது சுமார் 4.5 கோடி பேர். எஞ்சிய சுமார் 45 கோடி உழைப்பாளர்களில் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் – 13.69 கோடி, கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் – 1.89 கோடி, மற்றவர்கள் சுயதொழில் உழைப்பிலோ (ஓட்டுனர், எலக்ட்ரிஷியன், மெக்கானிக்) , அமைப்புசாரா துறைகளில் கூலி உழைப்பிலோ (கடை உதவியாளர், வீட்டு வேலை) ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தியாவின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் ரூ 1.15 லட்சம் மட்டுமே.

மேலும் இந்தியாவில் வருமான வரி போன்ற நேர்முக வரிகள் மொத்த வரி வருவாயில் 35% மட்டுமே. அனைத்து மக்கள் மீதும் பாயும் மறை முக வரிகளான சேவை வரி, மதிப்புக் கூட்டல் வரி போன்றவை 65% வரி வருவாய்க்கு பங்களிக்கின்றன. எனவே இந்தியாவில் 1% பேர்தான் வரி செலுத்துகிறார்கள் என்பது உண்மையல்ல.

மேலும், நேரடி வரி 35% மட்டுமாக இருப்பதற்குக் காரணம் கார்ப்பரேட்டுகளும், அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கும் வரிகுறைப்பு அளிக்கப்பட்டதும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்தும்தான் காரணமே தவிர, மளிகைக் கடையில் ரூபாய் நோட்டு கொடுத்து பொருள் வாங்குவது அல்ல.

2015-16ம் ஆண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மறைமுக வரி 6.47 லட்சம் கோடியாகவும், நேரடி வரி வசூல் 7.92 லட்சம் கோடியாகவும் இருந்தது. 2009-10ல் மொத்த வரி வசூலில் 61% ஆக இருந்த நேரடி வரி விதிப்பு 2013-14ல் 56% ஆகக் குறைந்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அது இன்னும் குறைந்து சென்ற ஆண்டு அதன் பங்கு 51% ஆக குறைந்தது.

மேலும் சில விபரங்கள்

1. இந்திய ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்கும் இடையேயான செலாவணி விகிதம் இந்தியாவின் ஏற்றுமதி/இறக்குமதி, இந்தியாவுக்குள் வரும்/இந்தியாவிலிருந்து வெளியேறும் முதலீடுகள், இந்தியாவிற்கு அனுப்பப்படும்/இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பணம் ஆகியவற்றை மட்டுமே பொறுத்தது. எவ்வளவு வரி விதிப்பு என்பதைப் பொறுத்தது இல்லை.

2. நாட்டில் எவ்வளவு பணப் புழக்கம் இருக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி, செயல்பாடுகளை பொறுத்து தீர்மானிக்கிறது.

பணப் புழக்கம் M0, M1, M2, M3, M4 என்று அளவிடப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. அறுவடை காலம், வர்த்தக வளர்ச்சி, வங்கி வைப்புகளின் மதிப்பு இவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பணப் புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது.

M0 – புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் + ரிசர்வ் வங்கியில் இருக்கும் வணிக வங்கிகளின் பணம்
M1 – M0 + வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்குகள் + நடப்புக் கணக்குகள்
M2 – M1 + தபால் நிலைய சேமிப்புக் கணக்குகள்
M3 – M1 + வங்கி வைப்புக் கணக்குகள்
M4 – M3 + தபால் நிலைய சேமிப்புக் கணக்குகள்

அதாவது, பொருளாதாரத்தில் பரிவர்த்தனைகளை ரொக்கப் பணமாகவோ, நடப்புக் கணக்கு/சேமிப்புக் கணக்கு காசோலைகளாகவோ நடத்தலாம். பிற வங்கிக் கணக்குகள், தபால் நிலைய கணக்குகளையும் விரைவில் மாற்றி பயன்படுத்தலாம்.

பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தி)யை பரிவர்த்தனை செய்ய எவ்வளவு பணம் தேவை என்பதையும், பணம் எவ்வளவு வேகமாக சுற்றி வருகிறது (ஒரே நோட்டு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது) என்பதையும் பொறுத்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடுகிறது.

(22-வது உட்பிரிவிலிருந்து படிக்கவும்)

3. “The RBI follows a minimum reserve system in the note issue. Initially, it used to keep 40 per cent of gold reserves in its total assets. But, since 1957, it has to maintain only Rs. 200 crores of gold and foreign exchange reserves, of which gold reserves should be of the value of Rs. 115 crores. As such, India has adopted the “managed paper currency standard.””

How currency is issued in India?
RBI as Currency Issuing authority of India

அதாவது, ரிசர்வ் வங்கியிடம் குறைந்தது ரூ 115 கோடிக்கான தங்கம், குறைந்தது ரூ 200 கோடிக்கு தங்கம்+அன்னியச் செலாவணி கைவசம் இருக்க வேண்டும். இதனுடன் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 17.54 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் 0.006% அளவுக்குத்தான் தங்கக் கையிருப்பு இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்பது தெரிகிறது.

(33-வது உட்பிரிவை பார்க்கவும்)

எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் அரை உண்மைகளோடு புளுகுகளை கலந்து பொய்பிரச்சாரம் செய்யும் இந்துத்துவர்களால் ஆவது பண மதிப்பு நீக்கம் போன்ற மக்களை ஓட்டாண்டியாக்கி, பணக்காரர்களை கொழுக்க வைக்கும் கொடூர நாடகங்கள்தான். அமெரிக்காவுக்கு அடியாள் வேலை பார்ப்பதை விட்டு விட்டு, இந்தியாவின் உழைக்கும் மக்களுக்காக நாட்டை காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் சுதந்திரப் போராட்டம்தான் இந்தியாவை முன்னேற்றுவதற்கான வழி.

Series Navigation<< கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/hindutva-pseudo-economics-on-india-us-economic-comparison/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஐ.டி-ல என்ன சார் நடக்குது? – ஆடியோ

"யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும்...

“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்

"அரசு தலையிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தான் மானியங்கள் கொடுக்கப்பட்டன. வேலை இழப்பு நடக்கும் போது தலையிட்டு, யூனியன், நிறுவனம், தொழில்துறை என்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை...

Close