காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்

This entry is part 4 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

தேசிய விடுதலை இயக்கத்தின் வீச்சு காரணமாக, இந்தியர்களை சுயாட்சிக்குப் பயிற்றுவிப்பது, இரட்டை ஆட்சிமுறை, நகராட்சிமுறை, பஞ்சாயத்து முறை, மாவட்ட வாரியம் எனற உள்ளாட்சித்துறை என காலனிய அரசின் ஆட்சிமுறையில் சில சீர்திருத்தங்களைப் புகுத்தினர். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவில் வரம்புக்குட்பட்டவை; அதுவும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கங்களின் பிரதிநிதிகளை மட்டுமே கொண்டவை.

ஹூயூமின் இந்திய தேசிய யூனியன், “யூனியன், அது அமைக்கப்பட்டதிலிருந்து ஆங்கிலேய முடியரசுக்கு சந்தேகத்திற்கிடமற்ற விசுவாசத்தை முற்றும் முழுதாக ஏகமனதாக வலியுறுத்துவது என்பது அந்த நிறுவனத்தின் கேந்திரமான அம்சமாகும்” என்று பிரகடனப்படுத்தியது.

முதல் இந்திய சுதந்திரப் போருக்குப்பின், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் புகுத்திய காலனிய ஆட்சிமுறை மற்றும் நிர்வாக எந்திரச் சீர்திருத்தங்கள், அவர்கள் எதிர்கொண்ட தேசிய விடுதலைப் போராட்டங்களும் அமைப்புகளும் ஏற்படுத்திய காலனிய ஆட்சிக்கு எதிரான அபாயம் மற்றும் பிற அரசியல் நிர்வாகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், நிறுவனமயமாக்குவதற்குமான நடவடிக்கைகளே ஆகும். ஏகாதிபத்தியவாதிகள் சீர்திருத்தங்கள் மூலம் தமது விசுவாசமான, நம்பகமான ஆளும் வர்க்க அடிவருடிகளிடம் நிர்வாகச் சுமையை மாற்றினாரே தவிர, நிர்வாக அதிகாரத்தை மாற்றவேயில்லை. காலனிய அரசின் ஆட்சிமுறையில் கொண்டு வரப்பட்ட எந்த சீர்திருத்தத்திலும் புரட்சிகர மக்களை தேர்தல்களிலிருந்து ஒதுக்கி வைப்பதை – தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் – திட்டமிட்டு கவனமாக செயல்படுத்தினார்கள்.

இதன் மூலம் தேசிய விடுதலை இயக்கங்களையும், அமைப்புகளையும் காலனிய அரசின் அங்கமாக நிறுவனமயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்தனர் ஏகாதிபத்தியவாதிகள்.

“இந்தியர்களை சுயாட்சிக்கு பயிற்றுவிப்பது”, “இந்தியாவில் நாடாளுமன்ற முறைக்கான தொடக்கம்”, “உள்ளூர் நிர்வாகத் திறமையை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது, வளர்ப்பது”, “இந்தியாவில் பொறுப்பான அரசாங்கத்தை மேலும் மேலும் கூடுதலாக அமைப்பது”, “இந்தியர்களுக்குப் பொறுப்புகளை உணர்த்துவதும், அரசியல் கல்வி அளிப்பதும்” – என்றெல்லாம் அவற்றை சித்தரித்தனர். ஆனால், உண்மையில் “ஆங்கிலேய காலனிய ஆட்சி ஈட்டிய வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வது, இந்திய மக்களின் சுதந்திர விடுதலை வேட்கைக்கும், எழுச்சிக்கும் வடிகாலமைத்து திசைதிருப்புவது, ஏகாதிபத்திய பேரரசுக்கு விசுவாசமான அடிவருடிகளைத் தயாரிப்பது” ஆகியவையே தம்முடைய நோக்கம் என்பதை அவர்கள் மறைக்கவுமில்லை.

1861, 1882, 1892, 1909, 1919, 1935 சீர்திருத்தச் சட்டங்களை கொண்டு வந்த மற்றும் இந்தியாவிற்கு கமிஷன்களில் தூதுவந்த ரிப்பன், கர்சன், மார்லி மிண்டோ, மாண்டேகு செம்ஸ்போர்டு, இர்வின், சைமன் மற்றும் காங்கிரசுக் கட்சி அமைத்த ஓவன், ஹூயூம், டஃபரின், லிண்டன் ஆகிய ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் வாக்குமூலங்கள் மேற்கொண்ட கருத்தோட்டங்களை நிரூபிக்கின்றன.

கோகலே, “நல்லதற்கும் கெட்டதற்கும் நமது தலைவிதி இங்கிலாந்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. பேரரசுக்குள்ளேயேதான் முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதை காங்கிரசு தங்குதடையின்றி அங்கீகரித்தது”

சான்றாக, 1919 இரட்டை ஆட்சிமுறையை முன்மொழிந்த மாண்டேகு, “இந்திய அரசாங்கம் முற்றும் முழுதாக உடன்படும் (ஆங்கிலேய) மதிப்பிற்குரிய பேரரசரின் அரசாங்கத்தின் கொள்கை, இந்தியாவில் நிர்வாகத்தின் ஒவ்வொரு கிளையிலும் மேலும் மேலும் கூடுதலாக இந்தியர்களை இணைத்துக் கொள்வதும் சுயநிர்வாக ஆட்சி நிறுவனங்களைப படிப்படியாக வளர்ப்பதும் – ஆங்கிலேயப் பேரரசின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்கிற முறையில் பொறுப்புள்ள அரசாங்கத்தை படிப்படியாக அடைவதாகும்.” என்று ஏகாதிபத்தியவாதிகளுக்கு உறுதி கூறினார்.

1885-ல் காங்கிரசுக் கட்சியைத் தொடங்கக் காரணமாக ஹூயூம் கூறியது: “சில மாநிலங்களில் சில அம்சங்களின் கண்ணோட்டத்துடன் முதிர்ச்சியடையாத நிலையில் இயக்கம் தொடங்குவதாக நான் எப்போதும் ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஆங்கிலேயப் பேரரசின் ஒருங்கிணைப்பை, எதிர்கால பாதுகாப்பு என்னும் மிகவும் உயிராதாரமான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, காங்கிரசு தொடங்குவது தொடர்பாக, உண்மையான பிரச்சனை முதிர்ச்சியடையாத நிலை அல்ல, மிகவும் காலம் தாழ்த்துவதே ஆகும்.

நமது சொந்த நடவடிக்கைகளால் உற்பத்தியான மாபெரும் வளரும் சக்திகளுக்கு வெளியே ஒரு வடிகால் அவசரமாகத் தேவைப்பட்டது. காங்கிரசு இயக்கத்தைப் போன்ற தேவையான விளைவை ஏற்படுத்தும் வேறொரு வடிகாலை வகுப்பது சாத்தியமில்லை. பல நன்மைகள் ஆங்கிலேய ஆட்சியின் சாதனைகள் என்றும், நாட்டின் சமாதானம் செழுமைக்கான எல்லா நம்பிக்கைகளும் ஆங்கிலேய ஆட்சி தொடர்வதைப் பொறுத்திருக்கிறது என்றும், மக்களை அங்கீகரிக்கும்படி கற்பிப்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்படுகிறது“.

இவை இரண்டே போதும், நிறுவனமயமாக்கும் ஆங்கிலேய கொள்கைக்கு சாட்சி சொல்ல.

 • இந்த நோக்கத்துடனேயே கவர்னர் ஜெனரல் மற்றும் கவர்னர்களின் ஆலோசனைக் குழுக்களில் ஏகாதிபத்திய அடிவருடிகளான ஒரு சில இந்தியர்களை நியமித்தார்கள். இந்தக் குழுக்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கு வரம்புக்குட்பட்ட அளவில் சட்டமியற்றும் அதிகாரமும் வழங்கினர்.
 • உள்ளூராட்சி முறைகளையும், முதலில் மாநிலத்திலும் பின்னர் மத்தியிலும் இரட்டையாட்சி முறையையும் கொண்டு வந்தனர்.
 • காலனிய அரசு மற்றும் அரசாங்கத்தில் வகுப்புவாத – வர்க்க அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அளித்தனர்.
 • காங்கிரஸ் கட்சி, சுதேச மன்னர்களின் சபை மற்றும் நிலவுடைமையாளர்களின் அரசியல் அமைப்புகளைத் தோற்றுவித்தனர்.

நேரு, “பெரும்பான்மையான தலைவர்களுக்கு சுயராஜ்யம் என்பது சுதந்திரத்துக்கும் குறைவானதே என்பது எல்லோரும் அறிந்ததே. இதன் பொருள் பற்றி வெறுமனே மேலெழுந்தவாரியாக இருந்ததோடு, தெளிவாக சிந்திப்பதைக் கூட உற்சாகப்படுத்தவில்லை”

காலனி ஆட்சிக்கான எதிர்ப்புகளை நிறுவனமயமாக்கும் இத்தகைய கொள்கையைப் பின்பற்றிய அதேசமயம், இந்தியர்கள் பங்கேற்கும் எந்த நிறுவனத்தின் முடிவுகளையும் ரத்து செய்யும் உரிமைகளையும், இராணுவம், போலீசு, அதிகார வர்க்கம் போன்ற அரசின் நிர்வாக மற்றும் பலாத்கார எந்திரத்தை முற்றிலும் தம் பிடியில் வைத்துக் கொள்வதன் மூலம் காலனிய ஆட்சியை உறுதி செய்தனர்.

ஆனால்,  தேசிய விடுதலை இயக்கங்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் தலைவர்களும் அமைப்புகளும் இந்த சூழ்ச்சிக்கு விரும்பி பலியாகினர்.  காலனிய அரசின் ஆட்சிமுறை மற்றும் சட்டவரம்புக்குட்பட்டு நடப்பதாக வாக்குறுதியும் விசுவாசமும் அளித்ததோடு, பொங்கி எழும் தேசிய விடுலை இயக்கங்களுக்கும், தேசிய கோபாவேச உணர்ச்சிகளுக்கும் வடிகால் தேடவும், திசைதிருப்பவும் அந்த அடிப்படையிலேயே ஆளும் வர்க்க அடிவருடிகளுக்கான சலுகைகளைக் கோரினர்.

இதற்கு சான்றாக, ஆங்கிலேயர் – இந்தியச் சங்கம் (1852), எஸ்.என்.பானர்ஜியின் இந்தியர்கள் சங்கம் (1876), ஹூயூமின் இந்திய தேசிய யூனியன் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு, முஸ்லீம் லீக், நீதிக்கட்சி போன்ற அமைப்புகளின் – அதன் தலைவர்களின் வாக்குமூலங்களை எடுத்துக் காட்ட முடியும்.

சான்றாக, எஸ்.என்.பானர்ஜியின் இந்தியர்களின் சங்கம் “ஆங்கிலேய அரசுக்கு விசுவாசம், ஒரு அரசியல் சட்டபூர்வ அரசாங்கம்- ஆகிய இரண்டும் இந்தியர்கள் சங்கம் எப்போதும் பிரகடனப்படுத்திய அதிகபட்சத் திட்டங்களாகும்” என்று அறிவித்தது.

ஹூயூமின் இந்திய தேசிய யூனியன், “யூனியன், அது அமைக்கப்பட்டதிலிருந்து ஆங்கிலேய முடியரசுக்கு சந்தேகத்திற்கிடமற்ற விசுவாசத்தை முற்றும் முழுதாக ஏகமனதாக வலியுறுத்துவது என்பது அந்த நிறுவனத்தின் கேந்திரமான அம்சமாகும்” என்று பிரகடனப்படுத்தியது.

முஸ்லீம் கட்சியை உருவாக்கியவர்கள்

அதன் வழித்தோன்றலாகிய இந்திய தேசிய காங்கிரசு 1930 வரை ஆங்கிலேய பேரரசுக்கு உள்ளடங்கிய சுயாட்சி அதிகாரத்தையே கோரி வந்திருக்கிறது. அதன் தலைவர்களான எஸ்.என். பானர்ஜி, “பிரிவினையை அல்ல, மாறாக ஒற்றுமை. உலகிற்கு சுதந்திரமான நிறுவனங்களின் மாதிரிகளைக் கொடுத்த மாபெரும் (ஆங்கிலேய) பேரரசின் ஓர் ஒருங்கிணைந்த அங்கம் என்கிற முறையில் நிரந்தர உறுப்பாகவே ஒற்றுமையை எதிர்நோக்கி உள்ளோம்” என்றும்;

கோகலே, “நல்லதற்கும் கெட்டதற்கும் நமது தலைவிதி இங்கிலாந்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. பேரரசுக்குள்ளேயேதான் முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதை காங்கிரசு தங்குதடையின்றி அங்கீகரித்தது” என்றும்;

நேரு, “பெரும்பான்மையான தலைவர்களுக்கு சுயராஜ்யம் என்பது சுதந்திரத்துக்கும் குறைவானதே என்பது எல்லோரும் அறிந்ததே. இதன் பொருள் பற்றி வெறுமனே மேலெழுந்தவாரியாக இருந்ததோடு, தெளிவாக சிந்திப்பதைக் கூட உற்சாகப்படுத்தவில்லை” என்றும் கூறிய சில மேற்கோள்களே நிறுவனமயமாக்கும் ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கும் இந்திய தேசிய விடுதலை இயக்கங்களும் அதன் தலைவர்களும் அளித்த ஆதரவை எடுத்துக்காட்டுவதற்குப் போதும்.

1909 இந்தியக் கவுன்சில் கூட்டத்திற்கு இந்திய கவர்னர் ஜெனரல், கவர்னர் ஆகியோரின் மற்றும்பிற ஆலோசனைக் குழுக்களுக்கு நியமனமுறை வைத்திருந்தனர்.

 • முதலில் ஆங்கிலேயர்கள் மட்டுமே இருந்தனர்.
 • பின்னர் சில இந்திய அதிகாரிகளை மட்டுமே நியமித்தனர்.
 • அதன் பின்னரும் முஸ்லீம்களை ஒதுக்கிவிட்டு இந்திய அதிகாரிகள் அல்லாதவர்களை நியமித்தனர்.
 • 1909 மறைமுக தேர்தல் முறையில் இந்து-முஸ்லீம் பிரிவினைக்கு வித்திட்டனர்.
 • அதன் உள்ளூராட்சி, மாநில, மற்றும் மத்திய சட்டமன்றத் தேர்தல்களுக்கு வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலும், பொது மற்றும் சிறப்பு அடிப்படையிலும் முறைகளைப் பின்பற்றினர்.

சாத்தியமான உச்சபட்ச அளவு புரட்சிகரமான மக்களை ஆட்சிமுறைகளில் பங்கேற்பதிலிருந்து தடுத்து நிறுத்துவதும், அதேசமயம் தமது விசுவாசமான அடிவருடிகளின் சேவையையும், பொது அதிகாரத்திற்கான சட்டபூர்வ நியாய உரிமையையும் பெறுவதே அவர்கள் நோக்கம் ஆகும். வரிகட்டும் சொத்துடையவர்களும், படித்தவர்களும் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். இதன்மூலம், பரந்து பட்ட மக்கள், குறிப்பாக முக்கால்பகுதி சிறு நிலவுடைமையாளர்கள், மற்றும் நிலமற்ற வறிய ஏழை விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை இம்முறை விலக்கி வைத்தது. பெரும் வியாபாரிகள், மிட்டாமிராசுகள், தரகுமுதலாளிகள், லேவாதேவிக்காரர்கள் போன்ற ஆளும் வர்க்க அடிவருடிகளே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பொதுத்தொகுதிகள் எனவும், தொழில் மற்றும் வர்த்த சபைகளின் – தரகு முதலாளிகளின் – தொகுதிகள் எனவும் வகுப்பு, வர்க்க மற்றும் சிறப்பு அடிப்படையில் தேர்தல் முறைகள் இருந்தன. இத்துடன் அதிகாரிகளை நியமிப்பதும் சேர்ந்து ஒருசில அதிகார வாய்ப்புகளைத் தடுப்பதோடு, சட்டம் இயற்றும் எல்லா பிரதிநிதித்துவ அமைப்பின் தீர்மானங்களையும் ரத்து செய்யும் உரிமைகளையும் ஏகாதிபத்தியவாதிகள் வைத்திருந்தனர்.

இவ்வளவு தடைகளுள்ள அதிகாரமற்ற அமைப்புகளிடம் பொதுப்பணி, மராமத்து, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. வெளிவிவகாரம், இராணுவ நியமனம் போன்ற அதிகார முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலேயே இருந்தன.

இருப்பினும், இச்சீர்திருத்தங்கள் சில குறிப்பிடத் தகுந்த அரசியல் மற்றும் நிர்வாக மாறுதல்களையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. முதல் இந்திய சுதந்திரப் போருக்குப்பின் நிதி, நிர்வாகம் மற்றும் அரசியல் தேவைகளுக்காக இந்திய சமுதாயத்தைச் சார்ந்து நிற்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட காலனிய அரசு, மேலும் மேலும் கூடுதலான நடவடிக்கைகளை எடுத்ததோடு மக்களின் கொல்லைப்புறங்களிலெல்லாம் தலையிடத் தொடங்கியது. இந்தியாவில் முன்னெப்போதும் இருந்த அரசுகளை விட அதிகமாக மனிதர்களையும் மூலாதாரங்களையும் நெறிக்கத் தொடங்கியது.

(தொடரும்)

தொகுப்பு : பகத்

Series Navigation<< இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையதுகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-4/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்

"மருத்துவமனை அதிகாரிகள் இந்த பிரச்சினையைப் பற்றி முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு அவர் அமைச்சர் தாண்டனை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு அமைதியாகி விட்டதாகவும் எங்களுக்கு தெரிய...

தமிழக விவசாயிகளை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஐ.டி ஊழியர்கள் அனைவரும் அன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் களத்தில் இறங்குவோம். விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம்!

Close