அறிவியலை போலி அறிவியலிலிருந்து பிரித்துப் பார்ப்பது எப்படி?

 அறிவியல் என்பது என்ன? அதற்கு முந்தைய அறிவு பாரம்பரியங்களிலிருந்து அது எப்படி வேறுபடுகிறது?

நாம் ஒரு தலைகீழ் உலகில் வாழ்வதாகத் தோன்றுகிறது

உதாரணமாக,

 • வங்கியில் வீட்டுக் கடனை முன்பாகவே கட்டினால் அதற்கு தனிக் கட்டணம் ஏன்? கடன் கொடுத்தவர் பணம் சீக்கிரம் திரும்பக் கிடைத்தால் மகிழ்ச்சியடையத்தானே வேண்டும்!
 • தக்காளி விளைச்சல் அமோகமா இருந்தால் விவசாயிகள் ஓட்டாண்டிகள் ஆவது ஏன்? அதிகமாக உற்பத்தி செய்தால் அதிக பணம் கிடைக்க வேண்டுமே!
 • ராக்கெட் ஏவுவதற்கு முன்பு அந்த புராஜக்ட் மேலாளர்கள் திருப்பதிக்கு சென்று வேண்டுதல் நடத்துவது ஏன்? ராக்கெட்டை மேலே செலுத்துவது அறிவியல்தானே, அங்கு ஆண்டவனுக்கு என்ன ரோல்?
 • ஆண்டு முழுவதும் பொறுப்புடன் வேலை செய்யும் ஊழியருக்கு, மேலாளருடன் சுமுகமாக இருக்கும் சக ஊழியரை விட குறைந்த ரேட்டிங் கிடைப்பது ஏன்?

இது போல சொல்லிக் கொண்டே போகலாம்.

கடந்த 400 ஆண்டுகளில் வெள்ளமென பெருகி வந்த ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை பல வகைகளில் பாதித்துக் கொண்டே இருக்கின்றன. அதே சமயம், நம்மை அறியாமை நிறைந்த முந்தைய கால நிலைமைக்கு பின்னுக்கு இழுத்துப் போகும் முயற்சிகளும் தொடர்ந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே, அறிவியல் என்றால் என்ன என்பதையும், அது முந்தைய அறிவு பாரம்பரியங்களிலிருந்து எப்படி அடிப்படையில் வேறுபடுகிறது என்பதையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

அறிவியல் விதிகளின் தன்மை குறித்து 20ம் நூற்றாண்டின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ரிச்சர்ட் ஃபெய்ன்மான் வழங்கிய உரையில் இருந்து சில குறிப்புகள்.

உரையின் வீடியோ பதிவு

(உரை வடிவம்)

 • நவீன அறிவியலின் மற்றும் இயற்கையை உண்மையிலேயே புரிந்து கொள்வதற்கான அடிப்படை – ஒரு பொருளை அவதானித்து, தகவல்களை பதிவு செய்து, அந்தத் தகவல்களில் கோட்பாட்டு ரீதியான புரிதலை வந்தடைவதற்கான ஒரு வழிகாட்டல் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பது.
 • மீண்டும் பொருட்களை அவதானித்து, தகவல்களை பதிவு செய்வதன் மூலம் அத்தகைய ஒரு கோட்பாடு சரிபார்க்கப்படுகிறது. ஒரு விதி சரியானதாக இருந்தால் அதைப் பயன்படுத்தி இன்னொரு விதியை கண்டு பிடிக்கலாம். மேலே சொன்ன வழிமுறையில் ஒரு விதியின் மீது முழு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, ஏதோ ஒன்று அதற்கு மாறாக இருந்தால் அது வேறொரு கண்டுபிடிப்புக்கு நம்மை இட்டுச் செல்லலாம்.

feynmanஆனால், நாம் வாழும் இந்த வினோத உலகில் நமது அறிவில் ஏற்படும் எல்லா புதிய முன்னேற்றங்களும் 2,000 ஆண்டுகளாக இருந்து வந்த முட்டாள்தனங்களை தொடர்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

 • அனைத்து அறிவியல் விதிகளும்
  – கணித வடிவில் எழுதப்படுகின்றன.
  – துல்லியமானவை அல்ல.
 • மனித அறிவுப் புலம் விரிவடைய விரிவடைய நாம் இயற்பியல் விதிகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
 • செயல்பாட்டில் சிக்கலானவையாக இருந்தாலும் அவற்றின் கணித வடிவத்தில் எல்லா இயற்பியல் விதிகளும் எளியவையாக உள்ளன.

இயற்கை அன்னை தனது பின்னலாடையை மிக நீளமான இழைகளால்  நெய்திருக்கிறாள், எனவே அவளது படைப்பின் ஒவ்வொரு சிறு பகுதியும் ஒட்டுமொத்த முழுமையின் வடிவமைப்பை காட்டுகிறது.

தனது அறிவுப் புலத்தின் பலவீனங்கள், வரம்புகள் தொடர்பாக, அறிவியலுக்கு இருக்கும் அடக்கத்தையும், அறிவியல் படைத்த சாதனைகளை பயன்படுத்தியே தமது அறியாமையையே பேரறிவாக உரக்க பிரகடனப்படுத்தும் போலி அறிவியல்களின் ஆணவத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-differentiate-science-from-pseudo-science-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
1917 : ஐரோப்பிய பிற்போக்கின் கொத்தளம் தகர்க்கப்பட்டது

கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும்,...

ஒப்பந்த உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கம் – அழைப்பு வீடியோ, படங்கள்

ஜனவரி மாதம் 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர் உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கு தொடர்பான அழைப்பு வீடியோ, புகைப்படங்கள்.

Close