ஆட்குறைப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வது எப்படி – அனுபவங்கள்

டந்த மார்ச் மாதம் ஆரம்பித்த லேஆஃப் நடவடிக்கைகளில் பலர் வேறு வழியில்லாமல் பேப்பர் போட்டு விட்டு வெளியேறியிருக்கிறார்கள். எச்.சி.எல்-ல் வேலை பார்த்த ஒருவர் வேலை இழந்த பிறகு, work from home என்று சொல்லிக் கொண்டே இன்று வரை ஓட்டிக் கொண்டிருக்கிறார். தனக்கு வேலை போய் விட்டது என்று கூட வெளியில் சொல்வதை தவிர்க்கிறார்.

ஆனால், சக ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு (NDLF) ஐ.டி ஊழியர்கள் பிரிவில் சேர்ந்து சரியான முறையில் தொழிலாளர் துறையை அணுகிய ஊழியர்களுக்கு முழுமையாகவோ, பகுதியளவோ நிவாரணம் கிடைத்திருக்கிறது.

  1. கோவை சி.டி.எஸ்-ல் புராஜக்ட் கொடுக்கவில்லை என்று தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் புகார்  5 ஊழியர்களுக்கு PIP-யுடன் புராஜக்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
  2. சென்னை விப்ரோ-வில் 6 மாதம் probation முடிந்து பணிஉறுதி கடிதம் கொடுக்காமல், ராஜினாமா செய்து விட்டு போகும்படி மிரட்டப்பட்டு வந்த ஊழியருக்கு பணி உறுதி செய்யப்பட்டு புராஜக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  3. சென்னை விப்ரோ-வில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு ராஜினாமா செய்யுமாறு மிரட்டப்பட்ட ஊழியருக்கு புராஜக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  4. சென்னை விப்ரோவில் 2K மனுவில் இணைத்துக் கொண்ட யாரையும் ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்துவது நின்று போயிருக்கிறது. பெஞ்சில் வைத்திருப்பது, புரொஃபைல் லாக் நீக்குவது, அது தானாக மறுபடியும் லாக் ஆகி விடுவது என்று கண்ணாமூச்சி நடந்து கொண்டிருக்கிறது.
  5. கோயம்புத்தூரில் 2A மனு போட்ட 2 பேரை எப்படியாவது வாபஸ் வாங்க வைத்து விட வேண்டும் என்று சி.டி.எஸ் நிர்வாகம் முயற்சித்து வருகிறது. அதை எதிர்த்து விடாப்பிடியான போராட்டம் தொடர்கிறது.
  6. சென்னை சி.டி.எஸ்-ல் ராஜினாமா செய்யும்படி மிரட்டப்பட்டு வந்த ஊழியர் அதை மறுத்து சங்கத்தில் உறுப்பினராக இணைந்தார். அவரை PIP-ல் சேர்த்து புராஜக்ட் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
  7. சென்னையில் 2A மனு தாக்கல் செய்த 2 வழக்குகளில் சமரச பேச்சுவார்த்தை முறிந்து வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்துக்கு செல்கிறது. 2 வழக்குகள் பேச்சுவார்த்தையில் உள்ளன.

25 ஆண்டுகளாக கேட்பார் இல்லாமல் தமது விருப்பம் போல் ஊழியர் கொள்கைகளை வகுத்துக் கொண்டு, தமது விருப்பம் போல செயல் பட்டுக் கொண்டிருந்த இந்நிறுவனங்கள் இப்போது சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற நிலைமை வரும் போது திகைத்து நிற்கின்றன.

இவ்வாறு தொழிற்சங்கம் மூலமாக அனைவரும் சேர்ந்து போராடும் போதுதான் மென்பொருள் நிறுவனங்கள் சட்டத்துக்கு பணிந்து ஊழியர் நலனை உறுதி செய்ய வைக்க முடியும்; சக ஐ.டி ஊழியர்களுக்கும், பின்னால் வரப் போகும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்க முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-face-layoff-threat-and-win-experiences/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
எங்கள் சம்பளப் பணத்தை என்ன செய்தீர்கள் : பேருந்து ஓட்டுனர் கேள்வி

"தெர்மாக்கோல்" போன்ற திட்டத்தை மக்களுக்கு தந்து தந்து அழியா புகழ் பெற்ற தமிழ்நாட்டு MLA-க்கு மாதசம்பளம்... Rs.1,05,000/= அவ்வளவுதான்!!! MLA-க்கு இணையான சம்பளத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கவில்லை!! அரசியல்...

“இல்லுமினாட்டி” – புத்திசாலித்தனமான ஏமாற்று கட்டுக்கதை

இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன.

Close