எதிர்காலத்தை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

.டி துறையில் வேலை செய்யும் சில நண்பர்களிடம் பேசும்போது, “கொஞ்சகாலம்தான் இந்தத் துறையில் இருப்பேன். பிறகு வேறு வேலைக்கு சென்று விடுவேன்” என்கிறார்கள். உதாரணமாக, ஆர்கானிக் கடை (இயற்கை உணவு வணிகம்), விவசாயம், டிராவல்ஸ், டிப்பார்ட்மன்டல் ஸ்டோர், மற்றும் பல.

இன்னும் பலர் என்ன நடக்கிறது என்றே தெரியாலும், என்ன செய்வதென்று தெரியாமலும் குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் எல்லோருமே பொதுவாக, “நமது குடும்பத்தை பார்த்தாலே போதும் சார், மற்ற எல்லாமே தானாக சரியாகிவிடும்” என்கிறார்கள்.

உண்மை என்ன? நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் நாமும் ஒருவர். போடப்படும் சட்டங்களும், சொல்லப்படும் தீர்ப்புகளும், தேர்தல்கள் நடத்தப்படும் முறையும், அரசு நிர்வாகத்தின் தரமும் நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. எனவே, நம்மளவில் நம் குடும்பம், நமது எதிர்காலம் என்ற முறையில் திட்டமிடும் அதே நேரம் தவிர்க்க முடியாத பல கேள்விகள் நம் முன் உள்ளன.

முதலில் அரசியல்.

நமது நாடு ஜனநாயக நாடு, மக்களால் மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி என்று பெருமை பேசும் தேர்தல் அரசியலின் நிலைமை என்ன? ஆர்.கே நகர் தேர்தல் போன்று ஒவ்வொரு தேர்தலும் முன்னைவிட கேவலமாக மாறி வருகின்றன. மக்கள் விரோதமாக, பண பலத்துடன், அதிகார முறைகேடு செய்பவர்கள்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைமை நீண்ட காலமாகவே நிலவியது. என்றாலும் இப்போது நேரடியாக வாக்குப்பதிவு எந்திரத்திலேயே முறைகேடு நடப்பதில் வந்து நிற்கிறது. இன்னும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இரண்டாவதாக அரசு நிர்வாகம்.

மக்களுடைய வரிப்பணத்தில் மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றை செய்து கொடுக்க வேண்டிய அரசு அத்தனையையும் தனியாரிடம் கொடுத்துவிட்டது. ஆனால் வரி மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு ரூபாய்க்கு ஷாம்பூ பாக்கட் வாங்கினால்கூட அதிலும் வரி. இப்படி வரிப்பணம் மட்டுமல்ல, மக்களது வங்கி சேமிப்பு, PF பணம், என்று அத்தனையிலும் அரசே முன்னின்று கொள்ளையடிப்பதும், தனியார் நிதிநிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு துணைபோவதுமாக உள்ளது.

மூன்றாவதாக நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட்டுகள்.

“முதலாளித்துவ நிறுவனங்கள் தாங்கள் வகுத்துக்கொண்ட சட்டவிதிமுறைகளையாவது கடைபிடியுங்கள்” என்ற ரகுராம்ராஜனது வாதத்தைக்கூட ஏற்க மறுத்து அவரை திருப்பி அனுப்பி விட்டனர் இந்திய கார்ப்பரேட்டுகள். உலக அளவில் பல்வேறு நாடுகள் இணைந்து உருவாக்கிய ஒப்பந்தங்களை ஒதுக்கித்தள்ளி அராஜகமாக நடக்கிறது, அமெரிக்கா.

நான்காவதாக நீதித்துறை.

உச்சநீதிமன்ற நீதிபதிகளே மூடு மந்திரத்தை உடைத்து, ஊழலையும், முறைகேடுகளையும் பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்துகின்றனர்.

ஐந்தாவதாக மக்களின் பொருளாதார நிலைமை

விவசாயிகள் தற்கொலை மரணம், சிறு குறு தொழில்கள் நொடித்துப் போவது, மாணவர்கள் கல்வி உரிமை பறிப்பு, செவிலியர் போராட்டம் என் அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார ரீதியாக ஓட்டாண்டிகளாகி வருகிறார்கள். அதே நேரம் தனியார் பெரு முதலாளிகளுடைய சொத்து மட்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. முதலாளிகளின் இந்த வளர்ச்சிக்கு எது காரணம? பெரும்பான்மை மக்களது உழைப்பும், உழைத்தமக்கள் ஓட்டாண்டிகளாக்கப்படுவதும் தான்.

ஆறாவதாக அரசியல் உரிமைகள்.

உழைக்கும் மக்களுடைய கேள்விகேட்கும் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. சங்கம் வைக்கும் உரிமை, பணி பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்களும் திருத்தப்படும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.

இவற்றையெல்லாம் சொல்வதற்கு காரணம், சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தேடிப் போக வேண்டிய ஒவ்வொரு துறையும் அராஜகமாக மிச்சம் மீதியின்றி துடைத்தெடுக்கப்படுகின்றது. நாம் இவற்றைப்பற்றி அக்கறையின்றியோ, ஒதுக்கி கடந்துவிடவோ முடியுமா?

இப்படிப்பட்ட சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு இணைந்து இவற்றை எதிர் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுகிறது.

இது தொடர்பாகவும், நடக்கும் விஷயங்களைப் பற்றியும் இன்னும் ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். எனவே, இந்த வார இறுதியில் நமது சங்கக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

மேலும், சென்னை செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று அரசியல், சமூக நிலைமைகள் பற்றிய புத்தகங்களை வாங்கி படியுங்கள்.

– பிரவீன்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-face-the-future-challenges/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு

ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாததாக அறிவித்ததன் நோக்கம் என்ன என்பதையும் இத்தாக்குதலால் உழைக்கும் மக்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தையும் விளக்கும் தோழர் அமிர்தா, (மக்கள் அதிகாரம்)

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு – பெண்களின் உரிமை

முறைசாரா ஊழியர்கள் உள்ளிட்டு அனைத்து பெண் உழைப்பாளர்களுக்கும் 1 ஆண்டு வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அடிப்படை உரிமை.

Close