“மனுசன பலி கொடுத்து நாட்ட வளக்கும் மனு ஆட்சி” – கவிதை

காத்துல எரியும்
வாயுவொன்னு
கழனிக்கு கீழ
கிடைக்குதுன்னு
குடிக்கிற
கால்வயித்துக் கஞ்சியையும்
காலி பண்ண
கங்கணம் கட்டிருக்கீங்க

மோடியின் வளர்ச்சி

மனுசனத் தியாகம் செஞ்சுதான் நாட்ட வளர்க்கனும்னு உங்க மனு சொல்லிக் கொடுத்துச்சா?

காத்துப் படாமலும்
எரியுற எங்க
வயித்து தீயில
எண்ணை ஊத்த
நினைக்குறீங்க

யார் வீட்லையோ
அடுப்பெரிக்க
எங்க வீட்டுல
கொதிக்குற உலையில
உலை வைக்கப்
பாக்குறீங்க

மனுசனத்
தியாகம் செஞ்சுதான்
நாட்ட வளர்க்கனும்னு
உங்க மனு
சொல்லிக் கொடுத்துச்சா?

சோறு போடும்
மண்ணை
அழியவிட்டு
சொகமா வாழத்தான்
உங்க படிச்ச
புத்திக்கு புடிக்குதா?

மனுசன வாழவைக்கத்தான்
இந்த மண்ணைக்
காப்பாத்த
இந்தப் படிக்காத
பயமக்க பாடாப்படுறோம்

மண்ணைப் பாதுகாப்போம்

சொந்த மண்ணை சோடை போகவிட நாங்களும் மானங்கெட்டுப் போயிடல

எண்ணை எடுக்கோம்
எரிவாயு எடுக்கோமுன்னு
எங்கள ஏச்சுப்புட்டு
எங்க மண்ணை
மலடாக்க இந்த
மானங்கெட்ட அரசாங்கம்
நினைச்சா

சொந்த மண்ணை
சோடை போகவிட
நாங்களும் மானங்கெட்டுப்
போயிடல

வயிறு காலியா
இருக்கும் போதும்
எங்க வைராக்கியம்
குறைஞ்சு போயிடல

வாடிவாசலுக்கு வழிகண்டுக்கிட்டோம்
எங்க வீட்டுவாசலக்
கருகவா விட்டுறுவோம்.

– மு. அபுல் கலாம் ஜெய்லானி
(வாட்ஸ்-அப்-ல் வந்தது)

Permanent link to this article: http://new-democrats.com/ta/hydrocarbon-scheme-growth-at-the-cost-of-people/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஆட்குறைப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வது எப்படி – அனுபவங்கள்

சக ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு (NDLF) ஐ.டி ஊழியர்கள் பிரிவில் சேர்ந்து சரியான முறையில் தொழிலாளர் துறையை அணுகிய ஊழியர்களுக்கு முழுமையாகவோ, பகுதியளவோ நிவாரணம் கிடைத்திருக்கிறது.

அடிமைகளா நாம் – ஒரு பெண் ஊழியரின் அறைகூவல்!

நண்பர்களே, இப்படி 10 முதல் 12 மணி நேர வேலை, அதிக அடிமைத்தனம், அதிக ஊதியம் என்று நம்மை ஒட்டச் சுரண்டும் கார்ப்பரேட் கொள்ளைக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும்...

Close