ஆயிரம் கதை சொல்லும் ஒரு புகைப்படம்!. மண்வெட்டி ஏந்தியிருக்கும் பெண்ணின் முக உறுதியை பாருங்கள், அவர் அருகில் மண்ணை அள்ளிச் செல்ல காத்திருக்கும் அவரது தோழரின் கையை பாருங்கள். இவர்களுக்கு பின்னணியில் கையறு நிலையில் காத்திருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை பாருங்கள்!
சொற்ப கூலிக்கு தினமும் உழைத்து ஓடாகும் இந்த உழைக்கும் பெண்கள் அதிகாரத்தை கையில் ஏந்தும் போது, டாஸ்மாக் கடை என்ன, ஊழல், மதவாதம், சாதிய வாதம், கார்ப்பரேட் கொள்ளை என உழைக்கும் மக்களை சுரண்டும் அனைத்துக்கும் சவக்குழி நிச்சயம் தோண்டப்படும்.
பெண் அதிகாரம் எழுக! உழைப்பு அதிகாரம் எழுக!