காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் இளைஞர்களும், மாணவர்களும் எதிராக போராடி வருகின்றனர். மத்திய அரசு இயக்கும் சுங்கச் சாவடிகளை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கியிருக்கின்றனர்.

தேச ஒற்றுமைக்கு மொத்த குத்தகைதாரர் போல வேடம் போடும் மோடி அரசு காவிரித் தீர்ப்பை அமல்படுத்த மறுத்து வருகிறது. மத்திய அதிகாரிகளும், அமைச்சர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழக தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.

உச்சநீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நடுவர் நீதிமன்றம் வழங்கிய நீர் அளவை குறைத்திருக்கிறது. தனது தீர்ப்புகளை சற்றும் மதிக்காமல் செயல்படும் சித்தாரமையா அரசு, மோடி அரசு இவற்றை உச்ச நீதிமன்றம் கடுகளவு கூட கண்டிக்கவில்லை.

அதே நேரம், காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சியை முடுக்கி விடுகிறது, மோடி அரசு. தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் துணை ராணுவப் படையைக் கொண்டு நிறுத்தியுள்ளது. தமிழ்நாட்டை ஒரு பகைநாடு போலவே நடத்துகிறது பா.ஜ.க அரசு.  ஒரு புறம் உரிமைகளைப் பறிப்பது, மறுபுறம் வளங்களை சுரண்டவது என்பதே தமிழகத்தைப் பற்றிய பா.ஜ.க.வின் கொள்கை. தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசோ எட்டப்பனைக் காட்டிலும் கீழாக தமிழக நலன்களை அடகு வைத்து விட்டு கொள்ளையடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகிறது.

12 மாவட்டங்களின் விவசாயம், 20 மாவட்டங்களின் குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. காவிரியாற்றின் தமிழக உரிமை வரலாற்று வழிப்பட்டது. சட்டங்களையும் அதன் ஓட்டைகளையும் காட்டி மறுப்பதையோ, இழுத்தடிப்பதையோ ஏற்கவே முடியாது.

  • மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து செயல்படுத்த வேண்டும்.
  • உச்சநீதிமன்றம் இழைத்த அநீதி உரிய வழியில் களையப்பட வேண்டும்.
  • குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி.எம்.சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • மேலாண்மை வாரியம் மறுக்க அமைக்க மறுக்கும் மோடி ஆட்சியின் கீழ் தமிழக எம்.பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் வேலையில்லை, எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும்.

நன்றி : மக்கள் அதிகாரம் அமைப்பின் பத்திரிகை செய்தி

Permanent link to this article: http://new-democrats.com/ta/immediately-form-cauvery-management-board/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி. துறை கட்டாயப் பணி நீக்கம், எதிர்கொள்வது எப்படி? – வீடியோ

ஐடி நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.. ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆட்குறைப்புக்குச் சொல்லும் காரணம் என்ன? ஐ.டி....

புரட்சி வரும் இல்லையா அம்மா?

    ஏய்... அம்மா! புரட்சியென்றால் என்ன? அது போராட்டமடா கண்ணா ! வீரர்கள் சண்டை போடுவார்களே... அதுவா? ஆமா குழந்தை! போரிடுவாங்க,கொல்லுவாங்க,சாவாங்க. நாம் அன்னியனை எதிர்த்துப்...

Close