மாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா!

புதிய இந்தியா
நாளும் பொறக்குது
மலக்குழி சாவுல
நாடே நாறுது!

இது… யோகியும், காவியும் ஆளும் காலம்


நாலு வர்ண
சாதிக்கொரு
நீதி வைச்சு
மேல் என்றும்
கீழ் என்றும்
தள்ளி வைச்சு
பூணுலால் கட்டப்படுது
புதிய இந்தியா!

மாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படுவார்கள்!

இது…
யோகியும், காவியும்
ஆளும் காலம்
இனி…
இந்துவும்
இந்தியுமே
புதிய இந்தியா!

நீயென்ன
உண்ண வேண்டும்
உடுத்த வேண்டுமென
மட்டுமல்ல
இதைத் தான்
சிந்திக்க வேண்டுமெனவும்
நிர்ணயிக்கப்படுவாய்!

மாட்டை தெய்வமாக்கி
மனிதனை அடிமைப்படுத்தும்
நாட்டிலே…
மாடுகளுக்காக
மனிதர்கள் வேட்டையாடப்படுவார்கள்!

ஜோரா ஒளிருது கார்ப்பரேட்களின் புதிய இந்தியா!

மண்ணையும்
மனிதத்தையும்
நேசிப்பவர்களை
தேச துரோகிகளாக்கி
தேசபக்தியின் பேரால்
தேசமே விற்கப்படும்!

விவசாயி உயிரையும்
தொழிலாளி உழைப்பையும்
நாட்டின் வளத்தையும்
உறிஞ்சி…
ஜோரா ஒளிருது
கார்ப்பரேட்களின்
புதிய இந்தியா!

– பிரசாந்த்-வெள்ளளூர்

வாட்ஸ்-அப்பில் வரப்பெற்றது

Permanent link to this article: http://new-democrats.com/ta/in-new-india-humans-killed-to-protect-cows/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி

2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான "பெக் பாக்" வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது...

என்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்

நீரவ் மோடி, மல்லையா கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு  நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள்.  ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு குடும்பத்தை...

Close