இன்ஃபோசிஸ் விஷால் ஷிக்கா, நாராயண மூர்த்தி : பெரிய இடத்து ஊழல்களுக்கு தண்டனை உண்டா? – ஆடியோ பதிவு

 வாட்ஸ்-ஆப்-ல் வந்த நமது சங்க உறுப்பினரின் ஆடியோ பதிவு. கார்ப்பரேட் நிர்வாகம், ஊழியர்கள் நலன், சமூக அக்கறை தொடர்பாக அவரது மிக முக்கியமான கருத்துக்களை போல்ட் செய்து காண்பித்திருக்கிறோம். அவசியம் கேளுங்கள், பரப்புங்கள்.

 

பதிவின் உரை வடிவம்

லே ஆஃப் பதிவு 7 – சி.ஈ.ஓ-க்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொழிற்சங்கங்களை நாடலாமா?

விஷால் ஷிக்கா

“எம் மேல தனிநபர் தாக்குதல் தொடுக்குறாங்க, என்னுடைய வேலையை செய்ய முடியாமல் தடுக்குறாங்க. எனக்கு எங்க சுயமரியாதை இருக்கோ அங்க நான் போகப் போறேன்” – விஷால் ஷிக்கா

ப்போ சமீபகாலமா நியூஸ் பேப்பர்ல, இந்தியாவோட டாப் 2 கம்பெனிகளோட மிகப்பெரிய கம்பெனியோட நிர்வாகிகள் பிரச்சனையை பற்றி காரசாரமா மோதியிருக்காங்க. இது குறித்து பங்குச்சந்தைகளும் சரிவடைந்தது. அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு 100 ரூபாய் வரை குறைந்து டிரேட் ஆனது.

இதற்கான காரணங்கள் என்னன்னு பார்த்தீங்கன்ன ஒரு நிர்வாகி என்ன சொல்றாரு “எம் மேல தனிநபர் தாக்குதல் தொடுக்குறாங்க, என்னுடைய வேலையை செய்ய முடியாமல் தடுக்குறாங்க. எனக்கு எங்க சுயமரியாதை இருக்கோ அங்க நான் போகப் போறேன்” அப்படீன்னு தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் ஓப்பனா மீடியாவுக்கு அறிவிக்கிறார்.

இன்னொரு தரப்பு, “இந்த கம்பெனி ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கு, அந்த ஒப்பந்தத்தை வெளிப்படையா பேசணும். அதில லஞ்சம் புழங்கியிருக்கிறதா நான் சந்தேகப்படறேன்“னு சொல்லியிருக்கு.

அதே மாதிரி “ஒரு குறிப்பிட்ட ஒரு நபரை நீக்கும் போது அவருக்கு செவரன்ஸ் பேக்கேஜ் அதிகமா கொடுத்திருக்காங்க. இவங்களுக்குள்ள ஏதோ எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கு, இந்த தகிடுதத்தங்கள எல்லாம் மறைச்சிட்டாங்க” னு அவரு வெளிப்படையாவே தெரிவிச்சிருக்காரு.

அதுக்கு அப்புறம் “இவரோட சம்பளத்தை மட்டும் இவரு உயர்த்தியிருக்காரு, compassionate capitalism-னு ஒண்ணு பேசியிருக்காரு. அதாவது முதலாளிகள் எல்லாம் இரக்கப்பட்டு தொழிலாளிகளை காப்பாத்தணும். நீங்களே ஒங்க சம்பளத்தை குறைச்சுக்கோங்க“. அப்படீன்னு சொல்லியிருக்காரு.

இது இரண்டிலையும் கடைசியா பொதுமக்கள் நமக்கும், தொழிலாளிகளுக்கும் பார்க்கும் போது “என்னதான் நடக்குது இங்க”.

இரண்டு பெரிய நிர்வாகிகள், leader-னு சொல்லிக்கிறாங்க, இவங்களை எல்லாம் லீடர்னு சொல்லி இன்னும் பாடப் புத்தங்கள்ல வரல. இவங்களை எல்லாம் லீடர்னு இவங்களே போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கிறாங்க, கம்பெனி செலவுல, அதுவும் நம்ம உழைப்பாளிங்க உழைப்பிலத்தான். இங்க எங்கேயுமே தொழிலாளிங்க நலன் உண்மையா இருக்கான்னா, இல்லை.

நாராயணமூர்த்தி

“தகிடுதத்தங்கள எல்லாம் மறைச்சிட்டாங்க” – நாராயணமூர்த்தி

இவங்களோடு ஈகோ பிரச்சனையை பார்த்தா இப்போ ஒரு நிர்வாகி சொன்னாங்க இல்லையா லஞ்சம் புழங்கியிருக்குன்னு, ஏன் இப்போ தனிப்பட்ட அதை மட்டும் பேசினாரு. ஓ.கே நிர்வாகி விலகிட்டாரு. ஒரே ஒரு நபர் மட்டும் லஞ்சத்தை வாங்கிட முடியும். கூட்டு முயற்சியாத்தானே லஞ்சம் வாங்கியிருப்பாங்க. ஒரு டீல் சைன் பண்ணா, ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரே ஒருத்தர் மட்டும்தான் அந்த டீல்ல இருப்பாரா? குறைந்தபட்சம் ஒரு 20 பேராவது அந்த டீல் தெரிஞ்சவங்க இருப்பாங்க. சரி, இப்ப அந்த டீலை வெளிப்படையா அறிவிப்பாங்களா? கேள்விக் குறியாத்தான் இருக்கு.

salary negotiation – இவரே இவருடைய சம்பளத்தை உயர்த்திகிட்டருங்கிறாங்க. இதை எல்லாம் பார்க்கும் போது என்னவோ 2 சின்ன குழந்தைங்க அடிச்சிக்கிற மாதிரிதான் இருக்கு. இங்க எங்கேயுமே ஊழியர் நலன் இல்லை. உங்க லெவல்ல பேசி தீர்த்துக்க முடியலைன்னா இவங்க எப்படி தொழிலாளர் பிரச்சனையை பேசி தீர்க்கப் போறாங்க. 2 நிர்வாகிகள் பிரச்சனையை சமரசமா தீர்த்துக்க முடியலைன்னா, 2 லட்சம், 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிற கம்பெனியை எப்படி நிர்வகிக்க போறாங்க-ன்னு தெரியவில்லை.

எனக்கு என்ன தோணுதுன்னா, இவங்களுக்கு அடிமட்ட பிரச்சனைகள், ஒரு புராஜக்ட் மேனேஜருக்கு மேல இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் தெரியாது போலிருக்கு. எம்ப்ளாயிஸ் அவங்க பாட்டுக்கு வர்றாங்க, அவங்களுக்கு கொடுத்த வேலைகளை செய்துகிட்டு போய்கிட்டே இருக்காங்க. புராஜக்ட்-ல end to end பார்த்தீங்கன்னா 70% low level-அ இருக்கிற எம்ப்ளாயிஸ்தான் எல்லா கம்பெனியிலையும் வேலை செய்றாங்க. மேல இருக்கிறவங்க என்ன வேலை செய்தாலும் வேலை இல்லை. தனிப்பட்ட முறையில கம்பெனியோட வளர்ச்சிங்கிற முறையில மேலதிகாரிகள், நிர்வாகிகள் திறமையினால இல்லைங்கிறது வெளிப்படையா தெரியுது.

இன்ஃபோசிஸ் ஊழியர்கள்

“புராஜக்ட்-ல end to end பார்த்தீங்கன்னா 70% low level-அ இருக்கிற எம்ப்ளாயிஸ்தான் எல்லா கம்பெனியிலையும் வேலை செய்றாங்க.”

இந்த ஒரு கம்பெனிதான் இப்படின்னு பார்த்தா, இன்னொரு பெரிய கம்பெனி, அதில் சி.ஈ.ஓ “என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்க”ன்னு அவரு நீதிமன்றத்தை அணுகிறார்.. “ஒரு பெரிய டீல்ல லஞ்சம் புழங்கியிருக்கு”ன்னு பேசியிருக்கிறாரு. இன்னொரு தரப்பு ஒரு சி.ஈ.ஓ மேலேயே மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க.

என்னன்னே நமக்கு புரியல.

“என்னடா இது எல்லாம் பெரிய கம்பெனி ஆச்சே, இவங்கள நம்பி கிட்டத்தட்ட இத்தனை லட்சம் உழைப்பாளிகளோட வேர்வை இருக்கு எதிர்காலம் இருக்கு, இவங்களுக்குக் கீழே இத்தனை எம்ப்ளாயிஸ் இருக்காங்க” என்கிற எண்ணமே இவங்களுக்கெல்லாம் இல்லை. இவங்க பாட்டுக்கு சின்னக் குழந்தை மாதிரி அடிச்சிக்கிறாங்களே, “நான் பேசற ஒவ்வொரு வார்த்தையும் கிட்டத்தட்ட லட்சம் குடும்பங்களோட வாழ்க்கை அதிலதான் அடங்கியிருக்கு” என்கிறது அவங்களுக்கு தெரியல.

எல்லாருக்கும் hidden agenda-னு ஒண்ணு வெச்சிருக்காங்க. அவங்களோட நலன்கள்தான் இருக்கு. எதைப்பற்றி பேசுறாங்களோ அதைப் பற்றி வெளிப்படையா பேசச் சொல்லுங்க. அவங்க எதிர்பார்த்தது நடந்திடுச்சி. சம்பந்தப்பட்ட நபர் ராஜினாமா செஞ்சிட்டாங்க. இப்ப வெளிப்படையா அந்த டீல பத்தி அறிவிங்க.

பண்ண மாடாடங்க, பண்ணினா நல்லது, ஆனா பண்ணுவாங்களா என்கிறது கேள்விக் குறியாத்தான் இருக்குது.

இன்னொரு நபர் பார்த்தீங்கன்னா, இன்னொரு நிர்வாகி sexual harassment complaint வாங்கி கம்பெனியை விட்டு வெளிய போயி இன்னொரு கம்பெனிக்கும் போயிட்டாரு.

indian corporates

“எதெல்லாம் குற்றங்கள்னு சொல்லி அரசியல் அமைப்பு சட்டத்தில சொல்லியிருக்கோ, அதெல்லாம் கம்பெனி வளாகத்தில நடந்துன்ன அது குற்றம் இல்ல, நாங்க சமரச முயற்சியில பேசி தீர்த்துக்குறோம்னு சொல்றாங்க.”

அதாவது முக்கியமா தெரியறது, எல்லா பிரச்சனையும் out of court settlement-னு arbitration-ல சமாளிச்சி தீர்த்துக்கிறாங்க. அதாவது, எதெல்லாம் குற்றங்கள்னு சொல்லி அரசியல் அமைப்பு சட்டத்தில சொல்லியிருக்கோ, அதெல்லாம் கம்பெனி வளாகத்தில நடந்துன்னா அது குற்றம் இல்ல, நாங்க சமரச முயற்சியில பேசி தீர்த்துக்குறோம்னு சொல்றாங்க.

5 ரூபா திருடினாலே விஜிலன்ஸ் பிடிக்கிறாங்க. ஜெயில்ல வைக்கிறாங்க. இங்க எத்தனை பேர் ஜெயில பார்த்திருக்காங்க. கோடிகள்ள லஞ்சம் பத்தி பேசுறாங்க, இங்க பேசற முறைகேடுகள், நிதி முறைகேடுகள் எல்லாம் தனிநபர் சம்பந்தப்பட்டது கிடையாது. ஒரு பொது நிறுவனத்தில ஏற்பட்ட பிரச்சனைகள பத்தி பேசுறாங்க.

இங்க தனிநபர் நேர்மை போயிடுச்சி. கூட்டுக் குழுவா எல்லாருமே ஒட்டு மொத்தமா லஞ்சத்தை பத்தி கண்டும் காணாம, பார்த்தாலும் கண்டுக்காம இருக்கிற நிலமைதான் இருக்கு. இவங்க எல்லாம் எப்படி வந்து எம்ப்ளாயியோட வெல்ஃபேர பத்தி பேசுவாங்கங்கிறது கேள்விக்குறியாத்தான் இருக்கு.

நான் சொல்றது எல்லாமே நீங்கள நியூஸ் பேப்பரை பாருங்க, எந்தெந்த சி.ஈ.ஓ எல்லாம் பிரச்சனைகளை பேசுறாங்க, அந்த பிரச்சனைகளை பத்தி வெளிப்படையா கருத்து தெரிவியிங்க.

நான் குறிப்பிட்ட நபர்களை ஏன் பேசலைன்னா எனக்கு சில்லறத்தனமா இருக்கு. ஒவ்வொரு கம்பெனியும் கிட்டத்தட்ட லட்சம் குடும்பங்களை அவங்க எதிர்நோக்கி இருக்காங்க. நாங்களும் அவங்க பேர்களை சொல்லி அசிங்கப்படுத்த விரும்பல. எங்களுக்கு பேர் சொல்ல அசிங்கம் எல்லாம் கிடையாது.

கடைசியா பாதிக்கப்படுவது எம்ப்ளாயி வெல்ஃபேர்தான். நிர்வாகியோட ஒரு வருஷ சம்பளமே அவங்க ஏழு தலைமுறைக்கு தேவையான பணத்தை கொடுத்துடுது. எம்ப்ளாயி அப்படி கிடையாது. Request என்னன்னா, நிர்வாகிகள் மக்கள் நலனை முன் நிறுத்தி பாருங்க. உங்க கம்பெனியில வேலை செய்ற லட்சம் குடும்பங்களை நினைச்சு பார்த்து மீடியால பேசுங்க.

நன்றி

இந்த ஆடியோ பதிவு தொடர்பாக 3 விஷயங்கள்

1. பங்கு விலை வீழ்ச்சியும், ஊதிய இழப்பும்

சைரஸ் மிஸ்திரி

“என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னு நீதிமன்றத்தை அணுகிறார்” – சைரஸ் மிஸ்திரி

  • இந்த ஆடியோ பதிவில் குறிப்பிடப்படும் நிறுவனங்கள் இன்ஃபோசிஸ், டாடா;
  • நபர்கள் இன்ஃபோசிஸ்-ல் பொறுப்பை ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட தலைமை செயல்பாட்டு அலுவலர் (CEO) விஷால் ஷிக்காவும் அவருக்கு குடைச்சல் கொடுத்து வெளியேற்றிய நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியும்;
  • டாடா குழுமத்தில் பொறுப்பை விட்டு போக வைக்கப்பட்டவர்  குழும சேர்மன் ஆக இருந்ந சைரஸ் மிஸ்திரி, அவருக்கு குடைச்சல் கொடுத்து நிறுவனத்தை கைப்பற்றியிருப்பவர் டாடா குடும்பத்தைச் சேர்நத ரத்தன் டாடா;
  • கடந்த 6 மாதங்களுக்குள் பாலியல் புகார் தொடர்பாக பதவி விலகிய மேல்மட்ட கார்ப்பரேட் மேலாளர்களில் டி.வி.எஃப் தலைமை செயல்பாட்டு அலுவலர் (TVF CEO) அருணாப் குமாரும் டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்னாவும் உள்ளனர்.

என்பது பேச்சாளர் சொல்வது போல செய்திகளை தொடர்ந்து தெரிந்து கொள்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

பேச்சாளரின் கருத்துக்கு மாறாக பொது நிறுவனங்களில் தவறு செய்தவர்களை பற்றியும், செய்த தவறுகளை பற்றியும் பொதுவெளியில் வெளிப்படையாக பேச வேண்டும், அதுதான் நீண்ட கால நோக்கில் அந்த நிறுவனத்துக்கும் அதை நம்பியிருக்கும் ஊழியர்களுக்கும், சமூகத்துக்கும் சரியான அணுகுமுறை என்று பார்க்க வேண்டும்.

அத்தகைய அம்பலப்படுத்தலின் உடனடி விளைவாக நிறுவனத்தின் பங்கு விலை குறையலாம்.

உதாரணமாக விஷால் ஷிக்கா ராஜினாமா செய்தி வெளியான பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஆகஸ்ட் 17 அன்று ரூ 1021 என்ற அளவிலிருந்து 18-ம் தேதி ரூ 923 ஆகவும், 21-ம் தேதி ரூ 870 ஆகவும் குறைந்து, ஆகஸ்ட் 23-ம் தேதி ரூ 893 அளவில் நிலை பெற்றிருக்கிறது. (அதாவது சுமார் ரூ 150 விலை வீழ்ச்சி)

இதன் மூலம் 17-ம் தேதி ரூ 2.29 லட்சம் கோடியாக இருந்த இன்ஃபோசிஸ்-ன் சந்தை மதிப்பு 18-ம் தேதி ரூ 17,000 கோடி (10%) வீழ்ச்சியடைந்து ரூ 2.12 லட்சம் கோடியாக குறைந்தது. 21-ம் தேதி தொடர்ந்து குறைந்த பங்கு விலையின் காரணமாக 2 நாட்களில் மொத்தம் 30,000 கோடி மதிப்பை இன்ஃபோசிஸ் பங்குதாரர்கள் இழந்திருக்கின்றனர். இதன் மூலம் மும்பை பங்குச் சந்தையின் முன்னணி 10 நிறுவனங்கள் பட்டியலிலிருந்தும், தேசிய பங்குச் சந்தையின் முன்னணி 10 நிறுவனங்கள் பட்டியலிலிருந்தும் இன்ஃபோசிஸ் வெளியில் தள்ளப்பட்டிருக்கிறது.

1000 பங்குகளை தனது ஊதியத்தின் ஒரு பகுதியாக பெற்ற ஒரு இன்ஃபோசிஸ் ஊழியர் இந்த 2 நாட்களில் மட்டும் தனது சேமிப்பில் சுமார் ரூ 1.5 லட்சம் இழந்திருக்கிறார். பங்குச் சந்தையில் வந்து பணத்தைக் கொட்டும் வாரன் பஃபெட்டுகளையும், ஜூன்ஜூன்வாலாக்களையும் போல ஒரு ஊழியரைப் பொறுத்தவரையில் இது மூலதன மதிப்பில் வீழ்ச்சி இல்லை அது, அவரது சம்பளத்தில்  இருந்து எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைத்த பணத்தில் ஏற்பட்ட இழப்பு.

இது ஒரு புறம் இருக்க இந்த பிரச்சனைகளின் வேர்களைப் பற்றி பேசா விட்டால் இந்தப் போக்கு தொடர்ந்து எதிர்காலத்தில் மேலும் பாரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

2. இந்தியாவில் தொழில்முறை மேல்மட்ட நிர்வாகிகள் தோல்வியடைவது ஏன்?

ரத்தன் டாடா

இன்னொரு தரப்பு ஒரு சி.ஈ.ஓ மேலேயே மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க. – ரத்தன் டாடா

இந்திய நிறுவனங்களில் உள்வட்ட (குடும்பம், அல்லது இன்ஃபோசிஸ் விஷயத்தில் founders)த்துக்கு வெளியிலிருந்து மூத்த பொறுப்பில் அமர்த்தப்படும் நபர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேற்றப்படுவது தொடர்கதையாக உள்ளது. இன்ஃபோசிஸ்-ன் வெற்றிக் கதைக்கு முன்பு வரையில் இந்திய கார்ப்பரேட்டுகள் கிட்டத்தட்ட அனைத்துமே குறிப்பிட்ட குடும்பத்துக்கு சொந்தமாக, மேல்மட்ட நிர்வாக பொறுப்பு அப்பா, குழந்தைகள், அல்லது வேறு உறவினர்கள் கையில் போவதாகவே இருந்து வந்திருக்கிறது.

அரசியலில் காங்கிரஸ் கட்சியாகட்டும் (நேரு – இந்திரா காந்தி – ராஜீவ் காந்தி – சோனியா காந்தி – ராகுல் காந்தி), உ.பியில் முலாயம் கட்சி, பீகாரில் லாலு கட்சி, ஓடிசாவில் பிஜூ பட்னாயக் ஆகட்டும், ஆந்திராவில் ராமாராவ் – சந்திரபாபு நாயுடு ஆகட்டும், தமிழ்நாட்டில் தி.மு.க-வின் கருணாநிதி குடும்பமாகட்டும் என்று ஆரம்பித்து கர்நாடகாவின் தேவகவுடா, மகாராஷ்டிராவில் சிவசேனா, காஷ்மீரில் அப்துல்லா குடும்பம், முக்தி முகமது சயீத் என்று குடும்பத்துக்குள்ளேயே நிறுவனத்தின் கட்டுப்பாட்டையும் உயர்மட்ட நிர்வாகத்தையும் வைத்துக் கொள்கிறார்கள்.

அப்படி குடும்ப அடிப்படை இல்லாத அ.தி.மு.க சசிகலா குடும்பத்தையும், பா.ஜ.க சங்க பரிவாரத்தையும் மையமாக வைத்துக் கொண்டு வெளியாட்களை கறாராக வெளியில் நிறுத்தி வரம்புக்குள்ளாகவே வைத்திருக்கின்றன.

இவ்வாறு குடும்ப அரசியல் என்பது சிறு நடுத்தர அமைப்புசாரா வணிக குடும்பங்களில் மட்டுமின்றி நவீனமாக்கப்பட்டு விட்டதாக பீற்றிக் கொள்ளும் கார்பபரேட் உலகிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

அது போல இன்ஃபோசிஸ் பாரம்பரிய இந்திய கார்ப்பரேட்டுகளின் குடும்ப வட்டங்களுக்கு வெளியில் தோன்றினாலும், அதிலும் நாராயணமூர்த்தி, நந்தன் நீலகேணி என்று ஒரு cult உருவாகி  அதன் கட்டுப்பாட்டில்தான் மேல்மட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

3. இன்ஃபோசிஸ்-ன் எதிர்காலம் என்ன?

இந்திய-அமெரிக்க ஊதியங்களுக்கு இடையேயான வேறுபாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கான  தொழில்நுட்ப அறிவு, அமெரிக்க தொடர்புகள், மென்பொருள் உருவாக்க திறமைகள் இவற்றின் இணைப்பால்  இன்ஃபோசிஸ் குறிப்பிட்ட சூழலில் ஒரு புதிய அடிப்படையில் தோன்றி வளர முடிந்தது.  ஆனால், அந்த சாதகமான ஊதிய வேறுபாட்டு ஆதாயம் இல்லாமல் போனபிறகு நிறுவனம் திசை தெரியாமல்  தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பான செய்திகள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/infosys-allegations-conform-to-indian-corporate-pattern/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி. ஊழியர்கள் தொழிலாளர்களா? புரோஜெக்ட் மேனேஜர் ஒரு தொழிலாளியா?

ஐ.டி.ஊழியர்கள் பெரும்பாலும் தங்களைத் தொழிலாளர்களாகக் கருதிக்கொள்வதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் நமக்குப் பொருந்தாது என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். நமது சங்கத்திற்கு தனது வேலை பறிபோய்விடும்...

ஸ்டெர்லைட் கொலைகள் – சட்டத்தை மீறியவர்கள் யார்?

சட்டப்படி நடந்த கிரானைட் ஊழல் வழக்கு, தாதுமணல் கொள்ளை வழக்கு என்ன ஆனது? அதில் செத்த உயிர்கள் எத்தனை? சட்டப்படி நடந்ததால் கேன்சர் உட்பட பல்வேறு நோயால்...

Close