சட்டத்தை மீறும் திருட்டு இன்டெக்ரா, உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள்!

இன்டெக்ரா (INTEGRA) நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம்

ட்டத்தை மதிக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறும் முதலாளி வர்க்கம் ஒரு புறம், சட்ட ஒழுங்கை காப்பதற்கு போலீஸ் படையையும், உளவுத் துறையையும் குவித்து வைத்திருக்கும் அரசு இன்னொரு புறம்.

ஆனால், முதலாளிகள் சட்டங்களையும், நீதிமன்ற உத்தரவுகளையும், அரசு ஆணைகளையும் கழிப்பறை காகிதங்களாக துடைத்து குப்பைக் கூடையில் போட்டு சட்டத்துக்கு அவர்கள் காட்டும் மரியாதையை வெளிப்படுத்துகின்றனர். சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதாக போராடும் மக்கள் மீது பாயும் அரசின் ஒடுக்குமுறை கரங்களோ, முதலாளிகளின் திருட்டுத்தனத்தை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன.

அதற்கான சமீபத்திய உதாரணமாக திருப்பெரும்புதூர் இன்டெக்ரா முதலாளிகளின் திருட்டுச் செயல் நடந்துள்ளது.

திருப்பெரும்புதூர் அருகில் மண்ணூர்பேட்டையில் இயங்கிவரும் *INTEGRA AUTOMATION PVT LTD* நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், உரிமைகளுக்காகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தலைமையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

“இன்டெக்ரா நிர்வாகம் தொழிலாளர்களது வேலைநிலைமைகளில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது” என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்துள்ளது. தொழிலாளர்கள் எழுப்பிய தொழிற்தாவா அரசிடம் நிலுவையில் உள்ளது. அதாவது இந்த வழக்குகள் முடிவுக்கு வரும்வரை ஆலையை வழக்கம் போல இயக்குவது இன்டெக்ரா நிர்வாகத்தின் கடமை.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக பகுதி கதவடைப்பு (partial lock out) அறிவித்ததன் மூலம் சட்டத்தை மீற முயற்சித்தது இன்டெக்ரா நிர்வாகம். இது சட்டவிரோத நடவடிக்கை என தொழிலாளர் துறை அறிவித்த பின்னர் நவம்பர் 7, 2016 முதல் கதவடைப்பு நீக்கப்பட்டதாக நிர்வாகம் அறிவித்தது. ஆனால் திருப்பெரும்புதூர் ஆலையில் உற்பத்தி எதுவும் நடத்தாமல், இரகசியமான முறையில் கோவையில் உற்பத்தியை நடத்தி திருப்பெரும்புதூர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தது. பொய், பித்தலாட்டம், திருட்டுத்தனம், சட்டத்தை மதிக்காத போக்கு ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக முதலாளி வர்க்கம் இருக்கிறது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்.

ஆனால், தொழிலாளர் தமது உரிமைக்காக குரல் கொடுப்பதை ஒடுக்கி நசுக்கி விடும் நோக்கத்தில் செயல்படும் நிர்வாகமோ, தற்போது பொங்கல் விடுமுறையை ஒட்டி தொழிலாளர்கள் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த, சமயத்தில் தொழிலாளர்களின் முதுகில் குத்தும் வகையில் நயவஞ்சகமாக சட்டத்திற்கு புறம்பான முறையில் தொழிற்சாலையில் இருந்து இயந்திரங்களை நிறுவனத்தின் மற்றொரு கிளைக்கு எடுத்துச் செல்லும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. ஆலைமூடல் குறித்த அறிவிப்பினை 12-01-2017 அன்று அரசுக்கு அனுப்பிவிட்டு, 13-01-2017 இரவே இயந்திரங்களை கடத்தத் துவங்கியது, நிர்வாகம். வேலையை இழக்கின்ற தொழிலாளிக்காவது குறைந்த பட்சம் அறிவித்திருக்க வேண்டாமா? அறிவிப்பு கடிதத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கு பற்றிய விபரத்தை மறைத்திருக்கின்ற நிர்வாகத்துக்கு தொழிலாளர் நலத்துறையும் உடந்தையாக இருக்கிறது.

இதை அறிந்த தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து அரசியல்வாதிகளையும் ஏவல் நாய்களான போலிசுகளையும் கொண்டு தொழிலாளர்களை நிர்வாகம் மிரட்டியது. இதற்கு அடிபணியாத தொழிலாளர்கள் 14-01-2017 முதல் இரவு பகல் பார்க்காமல் ஆலையின் முன்பாக சமைத்தும், உறங்காமலும் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

  • தொழிலாளர்களுடன் கரம் கோர்ப்போம்!
  • INTEGRA நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம்!
  • முதலாளித்துவத்திற்கு எதிராக அணித்திரள்வோம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/integra-workers-struggle-ndlf/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
குடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து

"எந்த சாமியும் கோபுரம் கட்டி கும்புடுங்கள் என்று சொல்லவில்லை நீங்களா கவுரவும்னு தேவையே இல்லாமல் கஷ்டபட்ட பணத்தை செலவு செய்கிறீர்கள். கடவுள்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு...

ஐ.டி துறை நண்பர்களே – ஆட்குறைப்புக்கு எதிராக போர்முரசு கொட்டுவோம்!

பல்வேறு பெயர்களில் மோசடியாக செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து! கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்! அப்ரைசல் என்ற...

Close