வாழத் தகுதியான ஒரு வளமான
எதிர்காலத்திற்காக போராடு.
2-வது சர்வதேச சுரங்கத் தொழிலாளர் கருத்தரங்கு
2017 பிப்ரவரி 2-5 , கோதாவரி கனி, தெலங்கானா, இந்தியா.
பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து 5-ம் தேதி வரை, தெலங்கானாவின் கோதாவரி கனி நிலக்கரி வயல் பகுதியானது 2-வது சர்வதேச சுரங்க தொழிலாளர் கருத்தரங்கை நடத்துகிறது. 4 கண்டங்களின் 22 நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். சர்வதேச சுரங்கத் தொழிலாளர் கருத்தரங்கு இந்தியாவில் நடப்பது வரலாற்றில் இதுதான் முதல் முறை. சுரங்கத்தொழிலின் சர்வதேச நிலைமையை பற்றியும் சுரங்க தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் அறிந்து கொள்ள இந்தக் கருத்தரங்கு ஒரு நல்ல வாய்ப்பு. வெவ்வேறு நாடுகளில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் அனுபவங்களை மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அவர்களின் போராட்டங்களை பகிர்ந்து கொள்ள இந்த கருத்தரங்கு ஒரு களத்தை அமைத்துத் தருகிறது. இது உலக அளவில் தொழிலாளர் உரிமைகளின் மீதான பலதரப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் இந்த காலகட்டத்தின் கட்டாய தேவையான சர்வதேச சுரங்கத் தொழிலாளர்களின் கூட்டொருமைப்பாட்டு உணர்வின் வெளிப்பாடாகும்.
பெரு-வில் 2013-ல் நடத்தப்பட்ட முதலாவது சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட பொதுக்குழுவின் பிரதிநிதிகள் இரண்டாவது கருத்தரங்கை இந்தியாவில் நடத்தலாம் என்று ஆலோசனை கூறியிருந்தனர். இதன்படி முதல் கருத்தரங்கில் அமைக்கப்பட்ட சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு தேசிய தயாரிப்புக் கமிட்டியில் அங்கம் வகிக்கும் பல்வேறு சுரங்கத் தொழிலாளர் சங்கங்களை ஆலோசித்து இரண்டாவது கருத்தரங்கை இந்தியாவில் நடத்துவது என்று முடிவெடுத்தது. அதற்காக சர்வதேச ஒருங்கினைப்புக் குழு கீழ்வரும் நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்திருக்கிறது.
பிப்ரவரி 2
காலை 10 லிருந்து 12 வரை – உறுப்பினர்கள் பதிவு
மாலை 3 மணி – கோதாவரி கனி வித்தல்நகர் பூங்கா விலிருந்து பேரணி
மாலை 5 மணி – ஜி.எம். காலனி மைதானத்தில் பொதுக்கூட்டம்
தலைவர்
பிகே மூர்த்தி
பேச்சாளர்கள்
ஆண்ட்ரேயஸ்
பிரதீப்
யூஜின்
அலெக்சான்ட்ரோ
பிரடி
பேரா. ஹர கோபால்
சுதிப்தா
சோம்நாத்
பாச்சா சிங்
எஸ் வெங்கடேஸ்வர ராவ்
வித்தல் ராஜ்
சஞ்சய் சிங்வி
கௌதம் மோடி
விஜய் குமார்
பிப்ரவரி 3
காலை 9.00 மணி – என்.டி.பி.சி யின் நரசிம்ஹா கார்டன்ஸில் துவக்கக்கூட்டம்
தலைமை ஆண்ட்ரேயஸ், சர்வதேச ஒருங்கிணைப்புப் குழுவின் பிரதான ஒருங்கிணைப்பாளர்
வரவேற்புரை
வரவேற்புக் கமிட்டியின் தலைவர்
திரு கோபால கௌடா
ஓய்வுபெற்று உச்ச நீதிமன்ற நீதிபதி.
மாலை 2.30 மணி – பிரதிநிதிகளின் பொதுக்கூட்டம்
மாலை 7 மணி – தேசிய தயாரிப்புக் கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள்
பிப்ரவரி 4
காலை 9 லிருந்து 1 மணி வரை & மாலை 2 லிருந்து 6 மணி வரை – கலந்துரையாடல்
மாலை 7 மணி – சர்வதேச பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள்
பிப்ரவரி 5
மாலை 9 மணி பிரதிநிதிகளின் பொதுக்கூட்டம்
மாலை 4 மணி கருத்தரங்கு முடிவு பிளினக்கூட்டம்
பிரசுரம்: சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவிற்காக பிரசுரித்தவர் பிரதாப்.
செல்பேசி : 98664 66457
சர்வதேசிய ஒருங்கிணைப்புக் குழு
International Coordination Group (ICG)