தொழில்நுட்ப உலகத்தில் பாலின, நிற (மத, சாதி, வர்க்க) பாகுபாடுகள் ஒழிந்து விட்டனவா?

“தொழில்நுட்பம் எல்லோருக்குமானது. அது மனிதகுலத்தையே ஒரே போல பார்க்கிறது. தன்னை பயன்படுத்துவது ஆணா, பெண்ணா அல்லது அவரது தோல் கருப்பாக உள்ளதா, வெளுப்பாக உள்ளதா என்று அது பார்ப்பதில்லை.”

woman-it-workerஆனால், பெரும்பாலான நேரங்களில் அது ‘மற்றவர்களுக்கு’ பலனளிப்பதில்லை என்கிறது ciol.com-ல் வெளியான ஒரு கட்டுரை.

கேட்ஜெட்டுகளும், ஆப்-களும் ஒரு குறிப்பிட்ட, பணக்கார பிரிவினரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கானவையாகவே வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக ஸ்மார்ட் ஃபோன் விற்பதற்கான ஆன்லைன் நிறுவனங்கள் காளான்களாக முளைத்தாலும், குழந்தைகளை பராமரிப்பதற்கான சேவை நிறுவனங்கள் மிகக் குறைவாகவே தொடங்கப்படுகின்றன.

இன்னொரு உதாரணம். “ஒவ்வொரு முறையும் முக அடையாளம் காட்டும் வசதியை ஒரு நிறுவனம் வெளியிடும் போதும் அது கருப்பர்களின் முகத்தை அடையாளம் கண்டு கொள்வதில் தோல்வியடைகிறது. அதற்குக் காரணம் இந்தப் பொருட்களை உருவாக்குபவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையினத்தவர்கள், அவர்கள் தம்மை வைத்தே அதை சோதனை செய்து பார்த்துக் கொள்கிறார்கள். வேறு நிறத்தவரும் இதைப் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.”

மேலும், கோடிங் (நிரல் எழுதுவது) என்பது ஒரு பொருளை உருவாக்குவது என்றாலும், அதை “சரியான” முறையில் செய்வதற்கு லட்சக்கணக்கான வழிகள் உள்ளன. எனவே, உருவாக்கப்படும் பொருள் அதை உருவாக்கியவர்களின் உள்ளார்ந்த எண்ணப் போக்குகளை பிரதிபலிக்கிறது. உருவாக்கக் குழுவில் உள்ள அனைவரும் ஒரே போல தோற்றத்தினவர்களாக ஒரே இடத்தில் வசிப்பவர்களாக, ஒரு கல்லூரியில் படித்தவர்களாக இருந்தால் அவர்களது சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கிறது.

புதிய தொழில்நுட்ப உலகம் சரியாக உருவாக்கப்பட வேண்டுமானால், பல்வேறு வகையான அனுபவங்களைக் கொண்ட பிரிவினர் அதில் ஈடுபட வேண்டும்.

இந்திய நிலைமைகளில் இனம், பாலினம் இவற்றோடு பல்வேறு சாதி, மொழி, மத பின்னணியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இந்திய ஐ.டி நிறுவனங்களில் இப்படிப்பட்ட பன்முகத்தன்மை இருக்கிறதா?

News Source

Permanent link to this article: http://new-democrats.com/ta/is-tech-world-gender-colour-neutral-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்!

போடுகின்ற சட்டை பிரமிக்க வைக்கிறது. 'சூட்'டுகள் சூடு கிளப்புகின்றன. மொறுமொறுப்பான வெள்ளைச் சட்டையைப் போட்டாலே அண்ணனுக்கு கம்பீரம் தான். ராம்ராஜ் முதல் மினிஸ்டர் ஒயிட் வரை எல்லாமே...

ஐ.பி.எல்-ம் தமிழகத்தின் காவிரி உரிமையும் – என்ன தொடர்பு?

இழவு வீட்டில் ஐ.பி.எல் கொண்டாடுவது மட்டும் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டை இழவு வீடாக்கி விட்டு அந்தப் பணத்தையும் மூலதனமாக போட்டு நடத்தப்படும் சூதாட்ட ஐ.பி.எல்-ஐ எதிர்க்க வேண்டும் என்பதுதான்...

Close