வரும் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு எடுத்த முயற்சியின் மூலம் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரியும், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் வர உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் ஐ.டி ஊழியர்கள் சார்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஒருங்கிணைப்பில் தாம்பரம் சண்முகம் தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அதற்கு பதிலாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது காவல் துறை.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பெருமளவில் பிரச்சாரம் செய்து பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
முழக்கங்கள்
மத்திய அரசே
- தமிழக விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்!
- அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ 25,000 வறட்சி நிவாரணம் வழங்கு!
- காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு!
- விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயித்திடு
- நெடுவாசல் திட்டம் உட்பட விளைநிலங்களை பாதிக்கும் அனைத்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்து செய்!
மாநில அரசே!
- விவசாய பாசனத்துக்கான நீர்நிலைகள் பாதுகாப்பை உறுதி செய்!
- விவசாயிகளுக்கு கந்து வட்டி, நுண்கடன் கும்பல்களிடமிருந்து பாதுகாப்பு கொடு
- நெடுவாசல் திட்டத்தை அமல்படுத்த அனுமதி கொடுக்காதே!
- ஆற்று மணல் குவாரிகளை இழுத்து மூடு!
- விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கு!
ஐ.டி ஊழியர்களே!
- நமது மண்ணையும், நீரையும், விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க கைகோர்ப்போம்!
- தொழிற்சங்கமாக அணி திரண்டு நமது உரிமைகளையும், நாட்டின் நலன்களையும் பாதுகாப்போம்!
தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் – combatlayoff@gmail.com
இது தொடர்பான முந்தைய பதிவுகள்
- கடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்
- டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : அதிகாரத்தின் கேளாக் காதுகளை எப்படி திறப்பது?
- “விவசாயிக்கு வந்தா தக்காளி சட்டினி, முதலாளிக்கு வந்தா ரத்தம்” – மோடியின் செல்லப் பிள்ளை உர்ஜித் பட்டேல்
- தமிழக விவசாயத்தை காக்க உறுதி கொள்ளும் மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள்
- விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்
- தமிழக விவசாயிகளை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?
- விவசாயிகளை காக்க சிறுசேரி SIPCOT-ல் ஐடி ஊழியர்கள் போராட்டம்.
- விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டங்கள்
- விவசாயக் கடனை ரத்து செய்யாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் – டெல்லியில் தமிழக விவசாயிகள் அறைகூவல்
- நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக MEPZ ஐ.டி ஊழியர்கள்
- விவசாய அழிவு : நீரோவின் விருந்தினர்களாக இருக்கிறோமா?
- தமிழக விவசாயிகள் மரணங்கள் – அரசே முதல் குற்றவாளி!
- டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
- போலீஸ் யாருக்கு நண்பன் – ஐ.டி ஊழியர்களின் நேரடி அனுபவம்
- நெடுவாசல் : ஒரு ஐ.டி ஊழியரின் போராட்ட அனுபவம்
- நெடுவாசல் : போராடும் மக்களை ஆதரிப்போம்
- நெடுவாசலுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்