உழைக்கும் மக்களின் உயர்கல்வி உரிமை மீது “நீட்” என்ற வடிவில் தாக்குதல் தொடுத்தது மத்திய மாநில அரசுகளின் தனியார்மய, உலகமய கொள்கை. மாநில உரிமைகளையும், தேசிய வேறுபாடுகளையும் மதிக்காமல் மூர்க்கமாக அதை அமல்படுத்தியது மோடி தலைமையிலான பா.ஜ.கவின் மத்திய அரசு. மோடியின் பா.ஜ.க-வுக்கு அடிமைகளாக ஜால்ரா போட்டது எடப்பாடியின் மாநில அரசு. மோடி அரசின் திட்டத்தை முழுமையாக அங்கீகரித்து “நீட்”-ஐ திணித்தது உச்சநீதிமன்றம்.
இவர்கள் அனைவரையும் எதிர்த்து கடைசி மூச்சு வரை விடாப்பிடியாக எதிர்த்து போராடி உயிர் நீத்தார் தமிழக மாணவி அனிதா.
“நீட்” தேர்வை எதிர்த்தும், போராடி உயிர்நீத்த அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்அ தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம் அமைப்பின் சார்பாக செப்டம்பர் 6, 2017 அன்று மாலை 5 மணிக்கு சோழிங்கநல்லூர் சிப்காட் வளாக நுழைவாயிலில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.டி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பாக வாட்ஸ்-ஆப்-ல் வரப்பெற்ற புகைப்படங்களை பகிர்கிறோம்.