ஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்

மே 28, மாலை ஐந்து மணியளவில் சென்னையில் ஐ.டி தொழிலாளர்கள் ஒன்று கூடி பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

சோழிங்கநல்லூர் பகுதியில் நூறு பேருக்கு மேல் கூடிய மனித சங்கிலியும் சிறுசேரி பகுதியில் 600 பேர் கூடிய நிகழ்வும் இந்த போராட்டத்தை சீர்குலைக்க முயற்சித்த கும்பலுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சோழிங்கநல்லூர் சிப்காட் வளாகத்தின் முன்பிருந்து சோழிங்கநல்லூர் சிக்னல் வரையில் ஐ.டி ஊழியர்கள் நடத்திய அமைதி #SilentITProtest பேரணி நிறைய பேரை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக தமிழக போலீஸ் IT ஊழியர்களின் போராட்டத்தை பார்த்து வியப்பில் இருந்தது நிதர்சனம்.

போராட்டத்தை சீர்குலைக்க முயன்ற சமூக விரோதிகள்

ஸ்டெர்லைட் படுகொலைகளை கண்டித்து ஐ.டி ஊழியர்கள் அமைதி வழி போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்தவுடன் அதை குலைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹாக்கர்களால் தவறான செய்திகள் பகிரப்பட்டன. சமூக விரோதிகள் போல ஹாக்கர்கள் பொய் செய்திகளை அனுப்பி பயமுறுத்தினார்கள். வெரிசான் செய்தது போல பௌன்சர்களை கூட்டத்தில் அனுப்பி கலவரம் செய்ய இருப்பதாக வதந்தி பரவியது.

NASSCOM அனுப்பியது போல போராட்டத்தில் கலந்து கொண்டால் FIR பதியப்படும் என்று பூச்சாண்டி காட்டினார்கள்.

நாஸ்காம் அனுப்பியதாக வலம் வந்த செய்தி

Number from which the message was sent

Good Morning Leaders

There are WhatsApp messages spreading across IT/ ITES employees to protest against Sterlite – Tuticorin issues gathering today 28 May between 5-6pm in front of all the IT parks (Siruseri, Elcot, Tidel, Ascendas, RMZ, SP Info City, Olympia, Tamarai, FIS, DLF, Sriram, Mahindra City, Ambattur HCL, CTS, TCS Thuraipakkam, Chennai One, Mepz, Perungudi HCL).

These protest are called on by unauthorised organisations without proper permissions from the Police. Based on the discussions with COP sir, have received clear communication that any of the IT employee participating will be arrested and FIR will be registered.

This msg is to keep the senior leaders appraised and also informally inform respective HR head / Admin – Security head/ Business head to keep close monitoring of our employees.

This message is for the safety and professional security of our organisation and our employees.

Thanks
Bala MS
Chairman – NASSCOM GCC
MD – Blackboard

மேற்குறித்த வதந்தி பரப்பிய கும்பல் யார்? தன் பெயரில் இத்தகைய மிரட்டல் செய்தியை அனுப்பிய நபர் மீது நாஸ்காம் வழக்கு பதிவு செய்யுமா?

குற்றம் செய்த இந்த நம்பரையும், பொய் மிரட்டலை பரப்பிய கூட்டத்தையும், இந்த உண்மையான “FRINGE ELEMENTS”-ஐ கண்டுபிடிக்க CYBERCRIME-க்கு துப்பு இருக்கிறதா? பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் போல செய்திகள் அனுப்பிய, தனித்தனியாக மிரட்டல் அனுப்பிய இந்த நம்பரை கண்டுபிடிக்க முடியுமா?

அமைதி போராட்டத்தை குலைக்க போலீசின் ஆர்வம்

தாம்பரம் மெப்ஸ் Mepz, திருவான்மியூர் டைடல் பார்க், போரூர் DLF  ஐ.டி பார்க் பகுதியில் போராட்டக்காரர்களை விட போலீசார் எண்ணிக்கை அதிகம்.

டைடல் பார்க் பகுதியில் ஐ.டி  ஊழியர்கள் போராட்டம் நடத்த அனுமதி தர மாட்டோம், நடத்தவும் விட மாட்டோம் என்று காவல் துறையினர் திட்டவட்டமாக கூறி  விட்டனர். பிரச்னை முடிந்த பிறகு போராடுங்கள் என்று அறிவாளித்தனமாக அறிவுரை கூறினார்கள். முடிந்த பிறகு போராடினால் அது போராட்டமா இல்லை சிரிப்பு மன்றமா?

எல்காட் பகுதியில் கூடியிருந்த ஐ.டி ஊழியர்ளை  சோழிங்கநல்லூர் சிக்னலை நோக்கி போகச் சொல்லி அலைக்கழித்தது போலீஸ். ஆனால், அதையும் ஒரு சிறு பேரணியாக மாற்றி போராட்டத்தை தொடர்ந்தார்கள் ஐ.டி ஊழியர்கள்.

1 மணி நேரம் அமைதி போராட்டம் நடத்துவதற்கே இத்தனை கெடுபிடிகள் என்றால் தூத்துக்குடியில் போலீஸ் எப்படி நடந்து கொண்டிருக்கும் என்பது ஐ.டி ஊழியர்களுக்கு நேரடியாக புரிந்தது.

எத்தனை தடைகள் வந்தாலும் வதந்திகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மீறி நடந்தது ஒரு போராட்டமே! இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஐ.டி துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

போலீஸ் துறை தொழிலாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்

கேள்விகள்

பல இடங்களில் இத்தனை IT ஊழியர்கள் சேர்வார்களா?
IT ஊழியர்கள் பொது பிரச்சனைக்கு குரல் கொடுப்பார்களா ?
மரண பயம் காட்டியும் தைரியமாக எப்படி கூடுவார்கள்?

இந்த கேள்விகளுக்கு பதில் என்ன என்பது போலீஸ் மற்றும் உளவுத் துறைக்கு தெரிந்திருக்கும். ஐ.டி ஊழியர்களின் சமுதாய அக்கறை மற்றும் தமிழ் உணர்வின் அளவீடு என்ன என்பது அவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

மேலதிகாரிகள் ஏவும் செயலை செய்யவில்லையெனில் வேலை போய் விடும், ஒழுங்கு நடவடிக்கைக்கு பயந்து தூத்துக்குடியில் துப்பாக்கி தூக்கிய போலீஸ் ஒரு ஏவல் துறையே.

NDLF ஐ.டி சங்க ஊழியர்கள் போலீஸ் துறையில் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான தொடர் தற்கொலைகள், ஆர்டர்லீ அடிமை முறை ஒழிப்பு, விடுப்பு மறுத்தல், வேலை சுமை பற்றியும் பேசினார்கள்.

13 பேரை சுட்டதற்கு தண்டனையாக பல இடங்களில் பதட்டத்தை தணிக்க போலீஸ் கூடுதல் பணி செய்ய வேண்டியதாக உள்ளது. போலீஸ் தங்கள் சக காவலரை கேள்வி கேட்கவில்லை எனில் பல நாட்கள் பதட்டத்தை தணிக்க பந்தோபஸ்து பணி செய்ய வேண்டியது நேரிடும்.

5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும்? எத்தனை நாள் போட முடியும்?

ஐ.டி ஊழியர்களும் போராளிகளே

தமிழகத்தில் வேதாந்தா ஒரு கருப்பு சரித்திரமே. ஒரிசா பழங்குடியினர் போல தூத்துக்குடி தமிழர்களுக்காக போராடும் ஐ.டி துறை ஊழியர்கள் போராளிகளே.

தூத்துக்குடியில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டைப் போன்ற பயங்கரவாத செயல்களை ஐ.டி துறை ஊழியர்கள் கண்டிக்கின்றனர், இது போன்ற செயல்களை தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்து கொள்கிறோம்.

மென்பொருள் கம்பெனி ID கார்டு வைத்து கொண்டு, தீவிரவாதி, நக்சல் என்று போலீஸ், உளவுத்துறை மற்றும் மாநில அரசு கதை சொல்லும் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்பவர்களை பிரிவினைவாதிகள் என்று பிரித்து பார்க்க முடியுமா?

ஐ.டி ஊழியர்கள் பிடித்திருந்த முழக்கங்களில் சில இங்கே

#bansterlite #getoutvedanta
Corporate அரசு செவிசாய்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது

#Bansterlite #silentItprotest

Slogan 1.
—————
When IT employees face mass layoff ,
Will police shoot us ?
Do IT employees need #bansterlite shootout fate ?

Slogan 2
—————
IT companies ignore state protocols for layoffs, police ignores protocols for firing in #bansterlite protest ?

Slogan 3
————-
Is Vedanta donation to political parties justified ?
#bansterlite

Slogan 4
————–
Is #jallikattu protest violence by police upgraded to shootout in #thoothukudi?
Did #vedanta sponsor the rifles and corporate shooters ?

Slogan 5
————–
Verizon used Bouncers in IT layoffs
Vedanta using shooters in Thoothukudi

கம்பெனி நடத்தி கொல்றான் முதலாளி, குறிவச்சு கொல்லுது கார்ப்பரேட் அரசு.
கட்டளையிடுறான் வேதாந்தா, சுட்டுப் பொசுக்குறான் போலீசு.

தூத்துகுடி மக்கள் எங்கள் மக்கள், சிந்திய ரத்தம் எங்கள் ரத்தம்.
விடமாட்டோம் விடமாட்டோம் வேதாந்தாவை விரட்டாமல் விடமாட்டோம்.

#GetOutVedanta
#KickOutSterlite

– Report by Kasirajan

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-protest-defying-threats/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
நீட் தேர்வு : வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் ! – சில குறிப்புகள்

வினாத்தாள் கசிவு, வினாத்தாளில் ஏற்றத்தாழ்வு, எய்ம்ஸ் கல்லூரி இடங்கள் பெரிய விலைக்கு விற்கப்படுவது ஆகியவை குறித்து அம்பலப்படுத்தியிருக்கிறார் ஆனந்த ராய். வியாபம் ஊழலையும் அம்பலப்படுத்தியது இவர்தான். கூடிய...

தொழில்நுட்பம் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

தொழில்நுட்பம் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளையும், பல வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் பாகுபாடுகள், வெறுப்புகள், அநீதிகள் இவற்றை தொழில்நுட்பம் மூலம்...

Close