கென்யாவுக்கு அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு நெருக்கடியில் சிக்கி வாழ்வை துறந்து கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சல்லிக் காசுதான் ஒதுக்குகிறது என்று கொதிக்கிறோம்.

கடந்த 17 நாட்களாக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது என்று மோடி அரசு
கடந்த 17 நாட்களாக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது மோடி அரசு என்று பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுகிறோம்.
தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசின் விவசாய விரோத அரசியலை கடுமையாக கண்டிக்கும் வாட்ஸ்-அப் வீடியோக்களை பகிர்கிறோம்.
போராடும் விவசாயிகளை இழிவுபடுத்தும், அதை கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை தேசத் துரோகி என்று முத்திரை குத்தும் எச். ராஜாவை ‘எச்ச’ ராஜா என்று கோபத்துடன் எள்ளல் செய்கிறோம்.
கார்ப்பரேட்டுகளின் பல லட்சம் கோடி வாராக் கடன்களை புதைத்து மூடும் மத்திய அரசும் வங்கிகளும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து வதைப்பதை கண்டிக்கிறோம்.
விவசாயிகளுக்காக மெரீனா கடலில் இறங்கி போராடும் இளைஞர்கள் போலீசால் கைது செய்யப்பட்டதையும், மெரீனாவில் போராட்டம் தொடங்கி விடக் கூடாது என்று போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதையுக் கண்டு மாநில அரசின் கைக்கூலித்தனம் என்று வெடிக்கிறோம்.

விவசாயிகள் போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்காமல், அதற்கான தீர்வுகளை காண முயற்சிக்காமல் ஆர்.கே நகரில் ஓட்டு பொறுக்கிக் கொண்டிருக்கும் கட்சிகள்.
விவசாயிகள் போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்காமல், அதற்கான தீர்வுகளை காண முயற்சிக்காமல் ஆர்.கே நகரில் ஓட்டு பொறுக்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க-வின் அணிகளையும் மற்ற ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளையும் அம்பலப்படுத்துகிறோம்.
இவ்வாறு வாட்ஸ்-அப்பிலும், பேஸ்புக்கிலும், தனிப்பட்ட விவாதங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நாம் ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தெருக்களில் இறங்கி, சாலைகளில் நின்று நமது உறுதியான ஆதரவை தெரிவிக்கும் நேரம் வந்திருக்கிறது.
ஆம்.
பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்து அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு வரும் ஏப்ரல் 3-ம் தேதி திங்கள் கிழமை பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது
- பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கி, தனியார் கடன்கள் என அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.
- அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ 25,000 வீதம் வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
- விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
- தமிழகத்தின் நீர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலை கொடுத்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
- தமிழக மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக 3-ம் தேதி 60 லட்சம் சிறு வணிகர்கள் கடை அடைப்பு செய்வார்கள் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் கூறியிருக்கிறார். தமது ஒரு நாள் வருமானத்தைத் துறந்து, தமது வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் சொல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சிறுவணிகர்கள் நிற்கப் போகிறார்கள்.
ஐ.டி ஊழியர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?
நமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நம் நாட்டு நிலையை விளக்கிச் சொல்லி, நமது ஒரு நாள் வருமானத்தை பின்தள்ளி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போம்.
ஐ.டி ஊழியர்கள் அனைவரும் அன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் களத்தில் இறங்குவோம்.
விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம்!