“லே ஆஃப் பத்தி மட்டும் சொல்லல, யூனியன்ல ஜாய்ன் பண்றத பத்தி யோசிங்கன்னும் சொன்னேன்” – ஐ.டி லே-ஆஃப் ஒலிப் பதிவு – 2
நமது சங்க உறுப்பினர் பதிவு செய்து அனுப்பி வைத்த செய்தி. கேளுங்கள், பகிருங்கள்
-
சட்ட விரோத பணி நீக்கத்துக்கு எதிராக ரமேஷா என்ற ஊழியரின் போராட்டம்.
“ஐ.டி கம்பெனிகளை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என்று வாதிட்டிருக்கின்றனர்.
அதை எதிர்த்து “ஐ.டி ஊழியர்கள் தொழிலாளர் என்ற வரையறைக்குள் வருகின்றனர்” என்று ஊழியர் தரப்பு வைத்த கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.(பின்னர் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவுக்கு எழுதிய கடிதத்தில் “ஐ.டி நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டத்திலிருந்து விலக்கு ஒருபோதும் அளிக்கப்படவில்லை” என்று தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.)
- பணித்திறன் சரியில்லை என்பதற்கான ஆதாரத்தை நிறுவனம் வழங்க வேண்டியிருந்தது. அதை நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை.
- “எடுத்தவுடனேயே வேலையை விட்டு தூக்கினது தவறு என்பதுதான் அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.”