1. மனித சங்கிலி போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தை, மத்திய அரசும் மாநில அரசும் துப்பாக்கியால் வீழ்த்த நினைத்தது. ஆனால் தமிழகம் முழுவதும் அந்த போராட்டம் பரவி வருகிறது. ஐ.டி துறையைச் சேர்ந்தவர்களும் அதில் கைகோர்த்துள்ளனர். ஐ.டி துறையில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களும், பல்வேறு நண்பர்கள் குழுக்களும் இணைந்து இன்றைக்கு (28-05-2018) மாலை 5 மணிக்கு அனைத்து ஐடி நிறுவனங்களின் முன்பும் அமைதி வழியில் மனிதச்சங்கிலி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த மனிதச்சங்கிலியின் பலத்தை நாம் ஒவ்வொருவரும் அதிகரிக்க வேண்டும். இணையும் கரங்கள் ஒவ்வொன்றும் நமது ஒற்றுமையையும் எதிர்ப்பையும் பதிவுசெய்யும்.
#Getoutvedanta
#Kickoutsterlite
2. நோட்டிஸ், போஸ்டர் அடிக்க தடை செய்து காவல் துறையின் மிரட்டலை கண்டித்து
சென்னையில் ஒரு பிரின்டிங் பிரஸ் கூட #banSTERLITE வாசகம் அடங்கிய நோட்டீஸ் அச்சு அடிக்க கூடாது என்று காவல் துறை வாய் மொழி உத்தரவா ?
தப்பை தட்டி கேட்கும் உணர்வு கொண்ட பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் சென்னையில் இருக்கின்றனரா ?
இருந்தால் அணுகவும்
3. ஐ.பி.எல் இறுதிப் போட்டியை புறக்கணிக்கக் கோரி
நாட்டில் #bansterlite பிரச்சனையில் உயிர்பலி விழுந்து இருக்க IPL கேளிக்கை தேவையா ? ஆத்மார்த்தமாக #BoycottIPL மேட்சுகளை புறக்கணியுங்கள் .
#boycottipl for #bansterlite issue