ஐ.டி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்னும் போலி பிம்பம்

2011-12 வரை ஐடி துறையில் வேலை வாய்ப்பு என்பது அனுபவமுள்ளவர்களுக்கு அதிகமாகவும், புதிதாய் படிப்பை முடித்தவர்களுக்கும் குதிரை கொம்பாக இருந்தது, 2012 க்கு பிறகு ஏற்பட்ட அதிவேக டிஜிட்டல் தேவை மற்றும் தொழில்நுட்ப வரவுகளால் வேலைவாய்ப்பானது புதிதாய் படிப்பை முடித்தவர்களுக்கு அதிகமாகவும், அனுபவமுள்ளவர் பணிநீக்கம் அதிகரித்து வருகிறது,
இதன் காரணமாய்
1. செலவினங்களை குறைத்தல்
2. குறைந்த சம்பளம் , அதிகபட்ச வேலை
இந்த இரண்டு மட்டுமே, ஆனால் அனுபவமுள்ளவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்பதில்லை என்ற கூற்று முழு சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போன்றது, இதை உறதிபடுத்துவதற்க்கு உதாரணமாய் நமது நாட்டின் ஐடி துறை சம்பந்தமான பாட திட்டத்தில் எந்தவித பெரிய மாற்றமும் செய்யபடாமல் அரைத்த மாவைதான் இன்னும் அரைத்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வேலைக்கு குறைந்த சம்பளத்தில் வேலைக்கு எடுக்கபட்டு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி கொடுக்கபடுகிறது, அந்த பயிற்சியான பெரும்பாலான அனுபவமிக்க தொழிற்நுட்ப தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை
பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்பு மோசடி :

2015-16ல் ஆசியாவின் முண்ணனி நிறுவனம், தனது கிளை நிறுவனத்தின் முலம் 100+ மேற்பட்ட கல்லூரி மாணவர்களிடம் 100000 பணம் பெற்று 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் முதல் நிறுவனத்தில் 8000 சம்பளம் கொடுத்து 12வது மாதம் வேலையை வாங்கிவிட்டு, இரண்டே நாட்களில் பணியை விட்டு தூக்கியெறிந்து மோசடி செய்தது. முன்பெல்லாம் இதுபோன்ற மோசடிகள் அரசு வேலைவாய்ப்பில் நிகழும் தற்போது தனியார் பெரு மற்றும் சிறு நிறுவனங்களில் அதிகமாக இருக்கிறது. இந்த மோசடிகளை நிறுவனங்களே முன்நின்று செய்வதுதான் வேதனை, இதைகூட டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி என்று மார்தட்டி கொள்ள ஒரு கூட்டம் இருக்கதான் செய்கிறது.நிறுவனங்கள் தரும் அதிகபட்ச வேலை அழுத்ததினாலும், பணி நீக்கத்தாலும் சமுகத்தில் தற்கொலையும், குற்ற சம்பவங்களும் ஏற்பட துவங்கிவிட்டன, உதாரணமாய் சில சம்பவங்கள்

1. ஊழியர் தற்கொலை நிகழ்வுகள்-1

2. ஊழியர் தற்கொலை நிகழ்வுகள்-2

3. தாக்குதல் நிகழ்வுகள்

4. கொள்ளை நிகழ்வுகள்

இந்த குற்றங்கள் அனைத்திற்க்கும், தனிப்பட்டவர்களின் மனநிலையும், செயல்களே காரணம் எனக்கூட நினைக்கலாம் ஆனால் இதற்கு பிண்ணனியில் நிறுவனங்களின் தவறான முடிவுகளும், தோற்றுபோன குறைதீர்க்கும் சிஸ்டம் (Grievance system) போன்றவைகளும் ஒருவகையில் காரணங்களாய் இருக்கிறது.

முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு

நிறுவனங்கள் தற்போது செய்துவரும் தொழிலாளர் சட்டத்திற்க்கு புறம்பான பணிநீக்கத்தை ஆதரிக்கும் வகையில் சமீமபத்தில் மத்திய அரசு நீண்ட கால ஒப்பந்த சட்ட மாற்றத்தை கொண்டுவந்து தொழிலாளர்களை வாழ்க்கையை சிரமமாக்க , முதலாளித்துவ நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.
இதற்க்கு வலுசேர்க்கு வகையில், உலக முதலாளித்துவ நிறுவனங்களால் ஜனவரி 2019 ல் டாவோசில் நடைப்பெற்ற உலக பொருளாதார கலந்தாய்வு சந்திப்பில், வார வேலைநாட்களை 4 நாட்களாக குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் மொழியப்பட்டு பரிசோதிக்கபட்டு வருகிறது, இந்த தீர்மானமானது உலக சந்தையில் வேலைவாயய்ப்பானது குறைந்து வருவதை முன்னெச்சரிக்கையாக அறிவிக்கிறது
வேலைவாய்ப்பு அதிகரிப்பு – போலி பிம்பம்
இன்னோரு நிகழ்வாய், வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பது போல் போலி பிம்பம் ஒன்று Linked In, Nakuri போன்ற வேலை தேடும் தளங்களின் தொலைகாட்சி விளம்பரங்களின் முலம் தோற்றுவிக்க படுகிறது. இந்த போலி பிம்பத்தின் முலம் , நிறுவனங்கள் கட்டாய பணிநீக்கத்தை தொழிலாளர்களின் மீது திணிக்கிறது, ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது , அனைத்து வேலைதேடும் தளங்களிலும் பதிவு செய்தும் 6 மாதங்களாய் எந்தவித அழைப்புமின்றி காத்திருக்கின்றனர்.
தொழில்நுட்ப வரவுகள் வரமா, சாபமா ?
பெருகிவரும் மக்களின் தேவைக்கு தொழில்நுட்ப வரவுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் இன்றியமைதாவை, உதாரணமாக எழுத்து புத்தகங்களில் பார்க்கபட்ட நிர்வாக வேலைகள் கணினி மயமானது , வேலைவாய்ப்பிலும், உடனடி சேவையிலும் பெரிய மாற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியை கடந்த 30 வருடங்களில் நாம் பார்த்தே, புதிய தொழில்நுட்ப வரவுகள் ஆட்குறைப்பை ஏற்படுத்துகிறது என்பது தொழிலாளர்களிடையே உண்மையை மறைத்து திசை திருப்பும் செயலாகவே பார்க்கிறேன்.
Image result for automation job lossஉதாரணமாக, ஒரு புதிய தொழில்நுட்ப வரவாக ஆட்டோமேசன் வருகிறது போது, அந்த புதிய வரவான டுல் லிற்க்கு மேம்படுத்துதல் (Enhancement), விற்பனை (Sales), சேவை மையம் (Support and maintenance) துறைகள் சார்ந்த வேலைவாய்ப்புகளும், ஏற்கனவே மென்பொருளை பயன்படுத்தி வரும் தங்களது சிஸ்டங்களை புதிய டுல் லிற்க்கு மாற்றும் வேலைகளை மேன்கொள்ளும் இதன் முலமும் வேலைவாய்ப்பும் பெருகும்.
பிறகு ஏன் பணியிலிருந்து தொழிலாளர்கள் நீக்கபடுகின்றனர் ? நிறுவனங்கள் தங்களது இலாப வெறிக்கும், செலவினங்களை குறைக்கவும், ஆட்குறைப்பை நியாயபடுத்தவும் நடத்தும் நயவஞ்சக சுழ்ச்சியே புதிய தொழில்நுட்பங்களின் மீது பழியை போடுவது, இதற்க்கு உதாரணமாக, ஒரு புதிய தொழில்நுட்பம் வருகிறபோது நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கபட வேண்டும், ஆனால் இதற்க்கு பதிலாக புதிதாய் கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் வாய்ப்பை மற்றும் பயிற்சியை அளித்து, இலாபத்தை பெருக்கி கொண்டிருக்கிறது நிறுவனங்கள்
நிறுவனங்களின் சமுக பொறுப்பு
CSR என்ற பெயரில் சமுக பொறுப்புள்ளவர்களாகவும், கோடிக்கணக்கில் செலவு செய்வதாகவும் பெருமை பேசும் நிறுவனங்கள், சட்டபடி நிரந்தர பணியாளர்களுக்கு, புதிய தொழில்நுட்பமங்களை பயின்று தேர்ச்சி தேர்வுக்கான (Certification Reimbursement) உதவிதொகையை நிறுத்தியுள்ளதை பணியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசின் நீண்டகால ஒப்பந்த தொழிலாளர் சட்டத்ததின் முலமும், தொழிலாளர் துறையின் அலட்சியத்தாலும், நிறுவனங்களின் நயவஞ்சக சுழ்ச்சியாலும் தொழிலாளர்கள் வஞ்சிக்கபடுகின்றனர்.

 

நிறுவனங்களின் ஆணவப்போக்கு :
1. டெலிவரியின் முக்கியத்துவம் கருதி, அதிகபட்ச வேலையும் , விடுமுறை நாட்களில் வேலையும் கட்டாயமாக வீட்டிலிருந்தோ, அலுவலகம் வந்தோ செய்ய வேண்டும்
2. ஆன்சைட் வாய்ப்பு அனைவருக்கும் உத்திரவாதமல்ல, நாங்கள் தருவதுதான் , தரும்போது ஏற்றுகொள்ள வேண்டும்
3. பதவிஉயர்வு, சம்பள உயர்வு நாங்கள் தருவதுதான், விரலுக்கேற்ற வீக்கம் போல் வாழ கற்றுகொள்ளுங்கள்
4. நிறுவனத்தின் வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்க்கு பணி நீக்கம் இன்றியமையாதது, தியாக மனப்பான்மையுடன் ஏற்றுகொள்ளுங்கள்
5.சமுக வலைதளங்களில் நிறுவனங்களை விமர்சிப்பது அதை செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும்
6. வேலையின் சுமையை கையாள தெரியாதவர்கள், பணி நீக்கம் செய்யபட்டவர்களின் தற்கொலை, குற்றம் செயங்களில் ஈடுபட்டால் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல, அது அவர்களின் விதி
7. நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்க, செலவினங்களை குறைக்க, இதுவரை வழங்கபட்ட வாகன வசதி, தொழில்நுட்ப தேர்ச்சி தேர்வுகளுக்கான உதவிக்தொகை அனைத்தும் படிபடியாக நிறுத்தபடும்,, மறுகேள்வி கேட்டகூடாது
8. பெஞ்சில் காத்திருப்போர்க்கு, சம்பளம் பாதியாகத்தான் வழங்கபடும், மீதி Variable pay என்று பிடித்து கொள்ளபடும்
9. பேரிடர் காலங்களிலும், வெளியூர் சென்றாவது பணியை தொடர்வது ஊழியர்களின் பொறுப்பு, தவறும் பட்சத்தில் வருடாத்திர பணி மதிப்பீட்டில் கவனத்தில் கொண்டு திறன் மதிப்பிடு செய்யபடும்
10. வருடாந்திர திறன் மதிப்பிடு எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்வியை கேட்டகூடாது.இதற்க்கு உடன்பட்டவர்கள், நிறுவனத்தில் இருந்தால் போதும், உடன்படாதவர்கள் பதவி விலகி கொள்ளுங்கள், நாங்கள் தடுக்கபோவதில்லை ..இதை எதிர்த்து கேட்பவர்களை, எங்களை மாறவும், விதிகளை பின்பற்ற சொல்லவும் நீங்கள் யார் ? நாங்கள் தோப்பு, நீங்கள் தனி மரம் என்றே பணியாளர்களை பயமுறுத்துகிறது.

Image result for meagre salary promotionஇத்தகைய ஆணவப்போக்கை, சமுக பொறுப்போடு, நடுநிலையாக கண்டிக்கவேண்டிய இதை ஆதரித்தே எழுதுகின்றன, உதாரணமாய் சமீப காலங்களில் தேசிய பத்திரிக்கைகளில் வந்த சில செய்திகள் கிழே பட்டியலிட்டுள்ளேன் இதன்முலம் இவர்கள் போதிப்பது, நிறுவனங்களை அனுசரித்து, எந்தவித எதிர்ப்பு செய்யாமல் நீங்களாகவே வேறு பணியை தேடி கொள்ளுங்கள் ஆனால் எழுத மறந்தது பணிநீக்கத்தில் நிறுவனம் கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறையும் அதை பெறுவதற்கான வழிமுறையையும் எந்த ஊடகமும் எழுதுவதில்லை.

1.வேலையை இழக்க போவதற்கான அறிகுறிகள்

2. 57% பணியாளர்கள் வேலையிலிருந்து மாற விரும்புகிறார்கள்

ஐடி துறையில் உள்ள வேலை நீக்கத்தின் மீதான அரசியல் கட்சிகளின் பார்வையும், சமுக தள விவாதங்களும் :

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கென்று ஒரு ஐடி விங்கை வைத்திருத்கிறார்கள் அதை கொண்டு தேர்தல் பிரசாரத்திற்க்காகவும், வெறுப்பு அரசியலுக்காகவும் பயன்படுத்துகிறார்களே தவிர ஆக்கபூர்வமாக பயன்படுத்தபடுகிறதா என்பது சந்தேகமே, ஏனேனில் இன்று வரை எந்தவித ஊழியர் பிரச்சினையும் பேசபடவில்லை என்பது வருத்தமே. இது போன்று நிறுவனங்களில் பெயரில் தொடங்கபட்டுள்ள Confessions முகநூல் பக்கங்களும், இங்கு பதிவிடப்படும் அனைத்து நிறுவனங்கள் சார்ந்த , பணி நீக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பற்றி பேசாமல் அதை மடைமாற்றும் பணியை சிறப்பாக செய்கின்றன, அந்த முகநூல் பக்கங்களில் சொல்லபடும் முடிவானது நிறுவனத்தின் தவறுகளை எதிர்க்காமல் அனுசரித்து செல் என்பதே, இதுவா தீர்வு? தவறை திருத்திகொள்ள என்ன செய்யவேண்டும் என்று விவாதிப்பதே தீர்வாக இருக்கமுடியுமே தவிர விலகி செல்வது, நிறுவனங்கள் மீண்டும் பல தவறுகளை செய்வதற்க்கு ஊக்கபடுத்துவதாய் அமையும். இந்த பக்கங்கள் அனைத்தும் நிறுவனங்களின் “B” டீம்மாகவே செயல்படுகிறது.

எது வேலைவாய்ப்பு?

கடந்த 5 ஆண்டுகளில், ஆயிரத்திற்க்கு மேற்பட்ட படித்த பட்டதாரிகள் தகுந்த வேலையின்றி, Swiggy, Zomato, மற்றும் Uber Eats நிறுவனங்களில் உணவு விநியோகிக்கும் பணிக்கு ஒப்பந்ந அடிப்படையிலும், விவசாய மற்றும் சிறுதொழில் நிறுவன முதலாளிகள் Ola மற்றும் Uber கார் கார் டிரைவராகவும் அதிக பட்சத்தில் பெற்றுள்ளனர் ஆனால் இவை வளர்ச்சிக்கான வேலைவாய்ப்பா ? என யோசிக்கவேண்டும்

அனுபவமிக்க தொழிலாளர்களின் வாழ்க்கையானது, முழு நிலவிலிருந்து தேய்ந்து கொண்டிருக்கிறது, புதிதாய் வரும் தொழிலாளர்களோ எல்இடி (LED) வெளிச்சத்தை நிலவோளியாக நம்பவைக்கபட்டு ஏமாற்றபடுகிறார்கள்.
இதே நிலை தொடருமானால், இனிவரும் காலங்களில், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாகவும் தனியார் நிறுவன ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களாகவும் மாற்றபடுவார்கள், இதுவே பொருளாதார வளர்ச்சி என அனைவரும் நம்பவைக்க படுவார்கள்.
இந்த சுழ்ச்சியை நாம் எதிர்க்காவிட்டால், அடுத்த தலைமுறைக்கு நிரந்தர பணி மற்றும் ஊதியமின்றி, அடிமை வாழ்வை மேற்கொள்ள நேரிடும். எனவே ஊழியர்களாகிய நாம், ஒற்றுமையாய ஒருங்கிணைந்து இந்த நயவஞ்சக நாடத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி சட்ட போராட்டம் செய்ய வேண்டியது நமது கடமை
– சரவணகுரு
பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-opportunities-reality-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
செல்வத்தை குவிக்கும் 1%, வேலை வாய்ப்பு இழக்கும் 99%

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வது சமூகத்தில் கலகங்களை உருவாக்கும் என்றும் கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பான போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன...

“மனுசன பலி கொடுத்து நாட்ட வளக்கும் மனு ஆட்சி” – கவிதை

எண்ணை எடுக்கோம் எரிவாயு எடுக்கோமுன்னு எங்கள ஏச்சுப்புட்டு எங்க மண்ணை மலடாக்க இந்த மானங்கெட்ட அரசாங்கம் நினைச்சா சொந்த மண்ணை சோடை போகவிட நாங்க ஒண்ணும் மானங்கெட்டுப்...

Close