இந்த வேலைநீக்க குறும்படம் “Human RESOURCES – Indian Indie Film (English) – 4K Ultra HD | By Sasidhar”
சிறப்பானதொரு முயற்சி.
இன்றைய சூழ்நிலையில் மேலதிகாரிகள் எப்படி முதலாளிகள் எழும் ஏவும் வேட்டை நாய் போல மாறுகின்றனர், மாற்றுகின்றனர் .
தங்கள் காரியம் முடிந்த பிறகு அவர்களை செய்த குற்றத்தை காரணம் காட்டி வேலையே விட்டு செல்லுங்கள் என்று முடிப்பது உண்மையின் உச்சம். நிதர்சனம்.
இதைப் பார்க்கும் ஒவ்வொரு ஐ.டி மேலதிகாரிகள் , மனிதவள மேலாளர் நம் கண் முன்னே நடக்கும் கோரத்தை , மனிதர்களை
கசக்கி எரியும் குப்பையாக மதிக்கும் IT மனிதத்தின் கோரத்தை கொண்டுவந்திருப்பது ஒரு சிறந்த உதாரணம்.
இந்த குறும்படம் யாருக்கோ நடந்தது என்று ஒரு கடந்து போக இயலாத உண்மை .
இன்றைய குழப்பமான சிக்கலான கட்டமைப்புகள் அமைந்த ஐடி துறையில் எப்படி எல்லாம் ஒரு நபர் பணம் பதவிக்காக ஆசை காட்டி நிறுவனங்கள் அடியாட்கள் போல பயன்படுத்திக் கொள்கிறது என்பதை கண்கூடாக காணலாம்.
எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கின்றனர்.
“இது எல்லாவற்றுக்கும் காரணம் நீயே…”
“நீங்கள் சொன்னதை செய்தேன். என் மீது என்ன தவறு?” என்று எல்லா தவறையும் செய்து விட்டு அப்பாவியாக கேட்கும் போது .
“கம்பெனி சொல்வதை எல்லாம் செய்து விடுவாயா இப்போதும் சொல்கிறேன் வேலையை ராஜினாமா செய் ?”
சிறப்பான ஒரு திரைக்கதை அமைப்பு.
வாழ்த்துக்கள் சசிதர் .
IT மக்கள் தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் .
– Kasirajan.A
இந்தப் படத்தில் சொல்லப்படும் பிரச்சனைகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. வாங்கிப் படிக்கவும்.
“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்
2 pings