ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க தடை தகர்ந்தது!

அநீதிக்கும், அடக்குமுறைக்கும் முடிவு கட்டுவோம்!

அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம்,

நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற தொழிற்சங்கத்தின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் கூலித்தொழிலாளிகள் முதல் ஐ.டி நிறுவன முதலாளிகள் வரை ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்கென சங்கங்கள் அமைத்துள்ளனர். NASSCOM எனும் சங்கம் வைத்திருக்கும் ஐ.டி. முதலாளிகள், நம்மை சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாதென நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டிக் கொண்டிருந்தனர். நடப்பில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை இம்மியளவும் மதிக்காமல், எட்டுமணி வேலை என்பதை மறுதலித்தும், நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து தூக்கி எறிந்தும் ஐ.டி. ஊழியர்களை துயரத்தில் தள்ளினர்.

ndlf-action-in-chennai-tcs-1உச்சகட்டமாக, 2014 இறுதியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்திட TCS முடிவு செய்தது. அநீதியான இந்த முடிவை எதிர்த்து சென்னை OMR-ல் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். இந்தியாவிலேயே முதல் முறையாக, ஐ.டி. ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை, ஜனவரி 10, 2015 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடங்கியது.

அதே ஜனவரி 2015-ல், ஐ.டி நிறுவனங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் 1947 பொருந்தும் என தமிழ்நாடு அரசை அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தொழிற்சங்கம் பொது நல வழக்கை தொடுத்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு ஒரு முடிவினை உடனடியாக எடுக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 மாதங்கள் தாமதத்துக்குப் பிறகு, தற்போது (மே 30, 2016 ) அரசு எமக்குப் பதில் தந்துள்ளது.

அரசின் நிலைப்பாடு

* ஐ.டி. ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள எந்த விதத் தடையும் கிடையாது.

* அனைத்து தொழிலாளர் சட்டங்களும் ஐ.டி. நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

* தொழிற்தகராறு சட்டம் 1947-ன் கீழ் ஐ.டி. ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முடியும்.

எமது வழக்கின் பயனாக, இவ்வாறு தமிழக அரசு நம்முடைய தொழிற்சங்க உரிமையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது நமக்குக் கிடைத்திருக்கும் முதல் கட்ட வெற்றிதான். சங்கமாகச் சேருவதும் நமது கோரிக்கைகளை சங்கத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளுவதும்தான் முழுவெற்றியாகும். சங்கத்தில் இணைவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை?

1. எப்போதும் அச்சத்தின் பிடியில் நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் Pink Slip, Forcible Resignation, Termination போன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும்.

2.. அப்ரைசல் என்ற நியாயமற்ற முறைக்கு முடிவு கட்ட முடியும்.

3. JOB SECURITY, PROMOTION உள்ளிட்ட நமது உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

4. எட்டுமணிநேர வேலை உள்பட எண்ணற்ற கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த முடியும்.

5. ஊதியத்திலும் பணி உயர்விலும் பாலியல் சமத்துவம், ஊழியர்களின் குழந்தைகளுக்கு காப்பக வசதி உட்பட சட்டம் வழங்கியுள்ள அனைத்து தொழிலாளர் நலன்களையும் வென்றெடுக்க முடியும்.

இவற்றை எல்லாம் சாதித்திட இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தினால் மட்டுமே முடியும். ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு’ சங்கம் மட்டும்தான், இச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள, இந்தியாவின் ஒரே ஐ.டி. ஊழியர்கள் சங்கமாகும்.

நமது உரிமைகளை நிலைநாட்ட, உடனே சங்கத்தில் இணைவீர்!
சங்கத்தில் சேர்ந்திட 9003198576 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!

பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
combatlayoff@gmail.com
www.vinavu.com
fb:\\NDLFITEmployeesWing
#ITLabourUnion

Series Navigation<< சி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை ! சாதித்தது பு.ஜ.தொ.மு >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-union-legally-clarified/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
வதைக்கப்படும் விவசாயிகள் வாழ்வும், மோடியின் வளர்ச்சியும் – ஐ.டி ஊழியரின் அனுபவம்

மேலும் 500 மற்றும் 1000 செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டப்பின், கைத்தறி நெசவு கூலி தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கால்வாசி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் இப்பொழுது...

நான் ஒரு பெண், பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்!

நூல்: நான் ஒரு பெண், பெண்கள் தொடர்பான "சரிநிகர்" கட்டுரைகளின் தொகுப்பு (1990 – 1996) மூலம்: ஜக்குலின் அன் கரின், தமிழில் : செல்லம்மா, பாரதி...

Close