சென்னை ஐ.டி சங்கக் கூட்டம் – இந்திய ஐ.டி ஊழியர்கள் ஒற்றுமைக்கு ஒரு அடித்தளம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சங்கக் கூட்டம் ஜூலை 15, 2017 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பெரும்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஜூன் மாதக் கூட்டத்திலும், பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் பற்றி அறிவிப்பு வெளியிடுவது, விப்ரோ ஊழியர்களின் சார்பாக தொழிலாளர் துறையில் தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 2K-ன் கீழ் தொழில்தகராறு தாக்கல் செய்வது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

நிகழ்ச்சிநிரல்
1) சங்கத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது
2) ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை
3) விப்ரோ தொழில்தகராறு பிரச்சனை தொடர்பாக பிரிவு 2K-ன் கீழ் வழக்கு தாக்கல் செய்வது
4) பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்த ஆயத்த வேலைகள்
5) விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தோள் கொடுப்போம்

 • ஐ.டி ஊழியர்கள்

  தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பயம், யூனியன் சேர்வது குறித்த தயக்கம், அவர்களுக்கு யூனியன் குறித்த விழிப்புணர்வை தெளிவாக கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும், யூனியன் சேர்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த கருத்துகள் பல விவாதிக்கப்பட்டன..

  பெங்களூரு ஐ.டி சங்க செயல்பாடுகள் குறித்தும், அவர்களது பெருந்திரள் பிரச்சாரம் குறித்தும் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 5, 2017 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

 • கோவையில் பு.ஜ.தொ.மு உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றியும், அங்கு சங்கத்தை வலுப்படுத்த எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
 • ஹைதராபாத், கொல்கத்தா ஐ.டி ஊழியர்களுக்காக செயல்படும் NDLF குழுக்கள் பற்றியும், நாடு முழுவதும் ஊழியர்கள் சங்கம் பற்றிய ஆர்வம் அதிகரித்திருப்பதும் பேசப்பட்டது.
 • தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பயம், யூனியன் சேர்வது குறித்த தயக்கம், அவர்களுக்கு யூனியன் குறித்த விழிப்புணர்வை தெளிவாக கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும், யூனியன் சேர்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த கருத்துகள் பல விவாதிக்கப்பட்டன..
 • துண்டு பிரசுரங்கள், ஒரு நிமிட வீடியோ ஆடியோ, யூனியன் விழிப்புணர்ச்சி பதிவுகள், யூனியன் விழிப்புணர்ச்சி கட்டுரைகள், பாதிக்கப்பட்டோரை அணுகுதல், சட்ட விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் குறித்து பேசப்பட்டது.
 • தொழிற்சங்கம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், தொழிலாளர் துறை ஆணையர்கள் போன்றவர்களின் உரைகளை பதிவு செய்து பரப்ப வேண்டும்.
 • விப்ரோ நிறுவன ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக 2K-ன் கீழ் தொழில் தகராறு தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் சட்ட ஆலோசகர் தொழில் தாவா தாக்கல் செய்வது பற்றிய நடைமுறைகள், அதற்கு தயாரிக்க வேண்டிய ஆவணங்கள் போன்ற விபரங்களை விளக்கினார்.

சென்ற மாதம் வழிமொழிந்த உறுப்பினர்களை இந்த மாதாந்திர கூட்டத்தில் எல்லா உறுப்பினர்கள் மத்தியில் ஏகமனதாக தேர்ந்தெடுத்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் நிர்வாகிகளாக பொறுப்பேற்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து விவசாயம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி பற்றிய உரையும், விவாதமும் நிகழ்த்தப்பட்டன.

‘விவசாயம் ஒரு 1960-களுக்கு முன்பு வரை பாரம்பரிய விதைகள் கொண்டு நடைபெற்றது. அந்த விதைக்கு குறைந்த தண்ணீர் மற்றும் இயற்கையாக விளைந்த உரம் போன்றவையே தேவை.

இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உட்பட வணிகரீதியாக தயாரித்து விற்கப்படும் விதைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதில் விதைத்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று பிரபலம் அடைய வைத்து, பாரம்பரிய விவசாயம் விடுத்து, விதைகளுக்கு விவசாயிகளை மாற வைத்தனர். ஆனால் அதில் பல பிரச்சனைகள் முளைத்தன. செயற்கை உரம் இல்லை எனில் அது வளராது என்ற நிலை, அதற்கு தண்ணீர் தேவை அதிகம் போன்றவை.

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை பல வகையில் நம் முன்னோர் செய்து உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில்ஆ று, ஒடை, ஏரி, குளம், குட்டை என நீர்நிலைகளை பல அரசியல்வாதிகள் அரசு அதிகாரி துணையுடன் கொள்ளை அடித்து உள்ளனர். எனவே நீரை தேக்குவதற்கு இப்போது இடம் இல்லை. பல நீர்நிலைகள் குடியிருப்பு மற்றும் அரசு கட்டங்களாக மாறியிருக்கின்றன, இதில் பல அரசு கட்டங்கள். பல தனியார் கார்ப்பரேட்டுகளுக்கான கட்டங்களாக இருக்கின்றன.

மணல் கொள்ளை மற்றும் நீர்நிலைகளை தூர்வாராமை

மிச்சமிருக்கும் நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரிக்காமை, மணலை சட்ட விரோதமாக கொள்ளை அடித்து, ஆறுகளில் நீர் வந்தால் கூட அது முறையாக விவசாயத்திற்கு பயன்படாமல் தேக்க முடியாமல் மிக அதிக விரயம் ஆகுதால் போன்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உரையின் ஊடாக பல உறுப்பினர்கள் விவசாயத்தில் நமது விவசாயிகள் துரத்தி விடப்படுவது பற்றியும், கார்ப்பரேட் நலன் ஊக்குவிக்கப்படுவது பற்றியும் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த மாதம் முழுவதும் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி பற்றி ஐ.டி ஊழியர்கள் மத்தியில் விரிவாக பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இறுதியில் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சங்க நிர்வாகிகள் பற்றிய பத்திரிகை செய்தி விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்

மொத்தத்தில் இந்தக் கூட்டம் ஐ.டி ஊழியர்களை பெரும் எண்ணிக்கையில் சங்கமாக திரட்டுவதற்கான முயற்சியின் மிக முக்கியமான, உறுதியான அடியெடுப்பாக இருந்தது.

தொகுப்பு : காசிராஜன், ஹரிஹரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-union-meeting-lays-a-strong-foundation-for-unity-of-indian-it-employees/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டாஸ்மாக் சாராயத்திற்கு குழி தோண்டும் பெண் அதிகாரம்! உழைப்பு அதிகாரம்!

கட்டிட பணியிலும், கூலி வேலையிலும் தினமும் உழைத்து ஓடாகும் இந்த உழைக்கும் பெண்கள் அதிகாரத்தை கையில் ஏந்தும் போது, டாஸ்மாக் கடை என்ன, ஊழல், மதவாதம், சாதிய...

சி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்

நமது சங்க அமைப்பாளர், சி.டி.எஸ் மீதான புகார் மீது நடவடிக்கை என்ன என்பதைக் கண்டறிய காஞ்சிபுரத்தில் இருக்கும் தொழிலாளர் ஆய்வர் அலுவலகத்துக்கு கடந்த வியாழன் நேரில் சென்று...

Close