ஜல்லிக்கட்டு போராட்டம் : ஜனநாயக உரிமைகளுக்கான குரலை ஆதரிப்போம்

.டி துறை நண்பர்களே,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றிய ஒரு பொய் பிரச்சாரத்தை ஊடகங்களின் துணையோடு ஆரம்பித்து நடத்தி வருகிறது, மோடி அரசு. போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியிருப்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வழியாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இது ஒரு அப்பட்டமான பொய். தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ் கலாச்சாரத்தையும் ஒடுக்கி வரும் மோடி அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்த்த தமிழ் இளைஞர்களின் குரல் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் எழுப்பட்டது என்பது சென்னை மெரீனா கடற்கரையிலும், பிற பகுதிகளிலும், தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்களில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்களுக்குத் தெரியும். சென்னை மக்கள் ஒவ்வொருவரும் மெரீனாவுக்கு நேரில் சென்றோ, தொலைக்காட்சி சமூக வலைத்தளங்கள் மூலமாக போராட்ட விபரங்களை அறிந்து கொண்டோ இந்தப் போராட்டங்களுக்கு தமது ஆதரவை தெரிவித்து வந்திருக்கின்றனர்.

மெரீனா கடற்கரையிலும் பிற இடங்களிலும் கூடிய லட்சக்கணக்கான மக்கன் தம்மைத் தாமே ஒழுங்குபடுத்திக் கொண்டு போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டம் நடத்தும் மக்களின் கட்டுப்பாடு, அமைதியான நடத்தை பற்றிய செய்திகள் நேற்று வரை பல்வேறு ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. ஆனால், டெல்லியிலிருந்து பெறப்பட்ட உத்தரவின்படி, மாநில போலீஸ் மத்திய படைகளின் துணையோடு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அமைதியாக போராடும் மக்கள் மீது இன்று அதிகாலை ஒரு பயங்கர தாக்குதலை அவிழ்த்து விட்டிருக்கிறது. இருப்பினும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மெரீனா கடற்கரையை விட்டு போக மறித்து போராட்டத்தை தொடர்கின்றனர். மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் இந்த அமைதியான போராடும் குழுக்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஜனநாயக உரிமைக்காக மட்டுமின்றி மோடி அரசின் சர்வாதிகார மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் மீது தமிழ் மக்களின் கோபத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன. பொங்கல் விடுமுறை ரத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மௌனம், மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, சமஸ்கிருதத் திணிப்பு மற்றும் பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்கள் மக்கள் மத்தியில் மத்திய மாநில அரசுகள் மீது வலுவான கோபத்தை உருவாக்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் இந்த பிரச்சனைகள் அனைத்தும் தொடர்பாக தமிழ்மக்களின் கோபத்தின் வெளிப்பாடே.

மத்திய சட்டம் திருத்தப்பட்டால் ஒழிய அதை தடை செய்யும் தீர்ப்பை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறார். ஆனால், மோடி அரசோ அதை செய்யாமல், மாநில அரசை அவசர சட்டம் கொண்டு வரச் சொல்லி போக்கு காட்டுகிறது. அதை புரிந்து கொண்ட போராடும் இளைஞர்கள் மாநில அரசின் அவசர சட்டத்தை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இவை அனைத்துக்கும் மத்தியில் பா.ஜ.க தமிழகத்தில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைவர்கள் பொதுவெளிகளில் தலைகாட்ட முடியாத அளவுக்கு மக்களின் கோபம் வெளிப்படுகிறது. அதனால்தான், போராட்டத்தில் நக்சல்பாரிகளும், தேச விரோத சக்திகளும் ஊடுருவி விட்டதாக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தீவிர இடது அரசியல் கொள்கைகள் கொண்ட அமைப்புகள் முதல் வலது சாரி தாராளவாத சக்திகள் வரை அனைத்து விதமான ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டன. நேற்று இரவு வரை இந்தப் போராட்டங்கள் அமைதியாகவும், முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்பட்டன; அதுதான் உண்மை. ஆனால், இன்று அரசும் ஊடகங்களும் பொய் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றன.

ஊடகங்கள் அடிப்படை ஊடக தருமத்தை பின்பற்றி அரசின் பொய்களுக்கு பலியாகாமல் ஆயிரக்கணக்கான போராடும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் தகவல்களை பார்த்து உண்மை நிலையை தமது ஊடகங்களில் வெளியிட வேண்டும். மத்திய படைகளை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற சுப்பிரமணிய சாமியின் கருத்து இந்த பொய் பிரச்சாரத்தின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. ஜாம்பஜார் காவல் நிலையத்துக்கு தீ வைத்தது போராடும் இளைஞர்கள் மீது அவதூறு பரப்புவதற்காக செய்யப்பட்ட உளவுத் துறையினரின் கைவரிசையாக இருக்கும் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

இந்த அமைதியான, ஜனநாயக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்துமாறு ஐ.டி ஊழியர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/jallikattu-protests-express-anger-over-anit-people-policies-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை!

இவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில்...

கடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்

முதலீட்டாளர்கள் கடன் தள்ளுபடிகளை நல்ல அறிகுறிகளாக பார்த்து அதன் மூலம் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று மட்டும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இருக்கும். வேளாண் கடன் தள்ளுபடி...

Close