சங்கமாக திரள்வீர்

வழக்கம் போல இந்த வருட முடிவுவும்  நெருங்கிவிட்டது. ஐடி தொழிலாளிகளின் வாழ்க்கைக்கு, வேலைக்கு முற்றுப்புள்ளி முடிவு என்ன என்பது நிறைய பேருக்கு தெரிந்து விட்டது. சமீபத்திய பத்திரிக்கை செய்தி ஒன்று காக்னிசன்ட் நிறுவனத்தை பூனேயில் உள்ள 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ET ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. வழக்கம் போலவே நிறுவனம்  அதை மறுத்து உள்ளது.


2017 தொடங்கி காக்னிசன்ட் நிறுவனம் சரிவு பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது.

2017ல், இலியட் ELLIOT என்னும் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தை தொடங்கி லாபத்தை காட்டுவதற்காக மூத்த பணியாளர்கள் பலரை  வேலையில் இருந்து நீக்கியது காக்னிசன்ட் நிறுவனம்.

கேள்வி கேட்க நாதியில்லை..

மாநிலத்தை ஆளும் அரசாங்கமும் சரி , மத்தியில் ஆளும் அரசாங்கமும் சரி..

எதிர்க் கட்சி மற்றும் உதிரிக் கட்சிகளும் சரி.

லே ஆஃப் என்ற ஒன்று நடக்கவே இல்லை என்று பட்டும் படாமல் பேசி ஒதுங்கிக் கொள்கின்றன..


லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் எண்ணிக்கையை கொண்டுள்ள பெரும் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் ஐடி ஊழியர் பிரிவிற்கு அடித்தளம் அமைக்கவில்லை..

ஐடிக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை என்று ஆளும் வர்க்கமும் அதற்கு அண்டிப்பிழைக்கும் தரகு தொழில் வர்க்கமும் முடிவுசெய்துள்ளது.

ஐடி ஊழியர்கள் எதிர்காலத்தை நினைத்து பயந்து சாகின்றனர்..

நாம் ஏதாவது கேட்டு நமக்கு இன்றோ  நாளையோ வேலைநீக்கம் நடந்துவிடுமோ?   என்று விதித்த விதியை நொந்துகொண்டு வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டுமே என்ற அச்சத்தில் காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றனர்.

20 வருடம் 25 வருடம் வேலை செய்த மூத்த உழியர்கள் வழக்கு,பிரச்சனை என்று எதற்கு கஷ்டப்பட வேண்டும்?

ஏற்கனவே நோயாளியாக இருக்கும் நாம் முதலாளிகளை பகைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?

 

வேலை இருக்கும் வரை வேலை பார்ப்போம் சொன்னவுடன் மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பி விடலாம்..

இருக்கும் சில லட்சம்  பணத்தை வைத்துக்கொண்டு, வட்டி வாங்கி சாப்பிடலாம் பிரச்சனை என்று ஏன் கஷ்டப்பட வேண்டும்?

25 வருடம் வேலை செய்தவர்களுக்கு கணிசமாக ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் வரி பிடித்தமான 1 லட்சம் சேவிங்ஸ் செய்ததால் பிஎஃப் பணமாக வரும்.

வீடு இருக்கிறது கையிருப்பு 20-50 லட்சம் இருக்கிறது ஏன் கவலைப்படவேண்டும்?

நமது அடுத்த தலைமுறை வளர்ந்துவிட்டது  அவர்களுக்கு துணையாக இருந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று தன் கோட்டைக்குள்ளேயே யோசிக்கின்றனர்.
ஆனால் அடுத்த தலைமுறை இதே விதியை இன்னும் மோசமாக எதிர் கொள்ளும்

தனது மகனும், மகளும்  இதே ஐடி நிறுவனத்தில் அல்லது உற்பத்தி நிறுவனத்தில் அல்லது மருத்துவ துறையில்  இந்தியா எதிர்கொள்ளும் கட்டமைப்பு நெருக்கடியை சந்தித்தே ஆகவேண்டும்..

இன்று வேலைக்கு சேர்ந்த புதியவர்களை கேட்டால்  படித்து வேலைக்கு சேர்ந்தால்,  படித்தது ஒன்றாக இருக்கிறது வேலை செய்வது ஒன்றாக இருக்கிறது.
விருப்பம், பற்றுதல்  இல்லாமல் வேலை செய்கிறோம்

வேலை செய்துகொண்டு இருக்கிற இடம் தெரியாமல் இருந்து கொள்ளலாம். எதுக்கு பிரச்னை?

இடைநிலை ஊழியர்களோ  எதுக்கும் பணம்  பத்தவில்லை.  பாதி EMI இருக்கிறது.
இன்னும் ஐந்து வருடம் கடந்தால் தான் மூச்சுவிட்டு சொந்த வீடு என்று நினைத்துக்கொண்டு ஏதேனும் வாழ முடியும் அல்லது ஏதேனும் தொழில் செய்யணும்?

வாழ்க்கையை எப்படி கடப்பது  என்று தெரியவில்லை.

இருக்கும் வேலையில்  50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டதால் இனிமேல் சொற்ப 10000 15000  சம்பளத்தில் குடும்பத்தை  நடத்த முடியுமா என்ற கேள்வி வருகிறது.

ஏதேனும் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை தேடலாம் என்றால் அங்கேயும் அதே நிலைமைதான்.

பதினைந்திலிருந்து முப்பது லட்சம் செலவழித்து விட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படு பவர்கள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள்..

எதைத் தின்றால் பித்தம் தெளியும்? என்று ஒவ்வொருவரும் கனவு கண்டு கொண்டே வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கின்றனர்.

அரசியல் பேசாமல் விட்டில் பூச்சிகள் போல் வாழ்ந்தால் இதுதான் நிலைமை.
பிரச்சனைக்கு காரணம் தான் வாழும் சமூகமே என்று சொன்னாலும் சமுதாயத்தை  நாம் எங்கே திருத்துவது என்று சொல்லிக்கொண்டே அதே சமூகத்தில் புழுக்களைப் போல உழன்று கொண்டே இருக்கும் வாழ்க்கை தான் பலர் வாழ்கிறார்கள்..

பகுத்தறிவுடன் செயல்பட்டால்தான் எது சரி எது தவறு என்று அந்தந்த நாட்களுக்கு முடிவெடுத்துக் கொண்டு செயல்பட முடியும்..

ஒரு சதவீதம் பேர் 99% பெயரை மாற்றப் போகிறார்களா அல்லது 99% பேர் ஒரு சதவீதம் பணக்காரர்களை இயக்கப்போகிறார்களா?.

பலரும் கனவு கண்ட IT  துறைக்கு இந்த நிலைமை என்றால் மேனுஃபாக்சரிங் ரியல் எஸ்டேட் நினைத்துப்பார்த்தால் வாழ்க்கை பிரச்சனையை எழுதவே கடினமாகத்தான் உள்ளது.

வாழ்க்கை என்பது போராட்டம் தான் என்று வாழும்போது, புதுமையான சரியான தெளிவான போராட்டத்தை ஏன் பகுத்தறிவுடன் எதிர்கொள்ளக் கூடாது?

பொதுவுடமை என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்தியா செல்லும் நேரம் வந்து விட்டது .

முதலாளிக்கு தரகு வேலை பார்த்தவர்கள் உற்பத்தி சார்த்த தொழில்முறையில் லாபத்தை பார்த்தாகி விட்டது ..

முதலாளி வேறு மாநிலம் செல்வார்கள். பிறகு வேறு தேசம் செல்வார்கள் ..

விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தற்சார்பு பொழுதறதை நோக்கிய தெளிவு வேண்டும் ..

சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம் தேவை இல்லை ..

 

பொதுவுடைமை சமுதாயம் தேவை.

எவ்வளவு  தொழில்நுட்பம் , விவசாய உற்பத்தி , வாகனம் , தொழில் நிறுவனம் , கல்வி , சுகாதாரம் என்பதை  99 % சதவீதம் முடிவு செய்து உற்பத்தி செய்ய வேண்டும் ?

முதலாளி கையில் கொடுத்ததால் கல்வி, சுகாதாரத்தை தவிர்த்து விட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியை அத்தியாவசியம் என்றது மாற்றிய கேலிக்கூத்துகள் நடக்காமல் தவிர்க்கப்படும் .

எது தேவை எது தேவை இல்லை என்பதை 99 % சதவீதம் முடிவு செய்து உற்பத்தி செய்ய வேண்டும் ?

அதற்கு முதல் தேவை … விவசாயிகள் 40  கோடி பேரும் தொழிலாளர் வர்க்க 40 கோடி பேரும் ஒரே கூட்டாக முடிவு எடுக்க வேண்டும் …

அது IT துறையில் இருந்து   ஆரம்பிக்க வேண்டும். சங்கமாக திரள்வீர் .. பேசுங்கள் .. சமுதாய புரட்சி நோக்கி நகருங்கள் …

— Kasirajan.A

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/join-as-union/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – மீம்ஸ்

ஹஸ்ரத் மகல், காஷ்மீர், பெங்களூரு, மூணாறு, சாவித்ரிபாய் பூலே, ஜோதிபா பூலே, சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்

இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை – புள்ளிவிபரம்

தகவல் ஆதாரம் Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook (கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67) படங்களைப்...

Close